புதன், நவம்பர் 17, 2004

இணையப் பொறுக்கன்

  • Britney Spears guide to Semiconductor Physics: semiconductor physics, Edge Emitting Lasers and VCSELs: புகழ்பெற்ற பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் நமக்கு அறிவியல் கற்றுக் கொடுக்கிறார். மீனாக்ஸின் மார்க்கெடிங் போல், ஷங்கரின் இருக்கிறது*இல்லை போல் படிப்பு சொல்லிக் கொடுக்கத் தெரிந்தவர்.


  • Subliminal Messages: பல இடங்களில் பார்த்து கண்ணைக் கசக்கியதை தொகுத்து சேகரித்திருக்கிறார்கள். நம்ப முடியவில்லை...


  • WUGNET - Advanced System Optimizer - Windows XP/2000/NT Shareware: அவ்வப்போது கணினியை சுத்தம் செய்து கொள்வது நமக்கு நல்லது.


  • Useless Facts from Brain of Brian -- People 1: புகழ்பெற்றவர்களைக் குறித்த முத்தார தொகுப்புகள். தினமும் சென்று ஒன்றிரண்டு படித்துத் தெரிந்து கொள்ளலாம். மொத்தமாக படிக்காதீர்கள்.


  • E! Online - Features - Oscars '98 - Game - Sink the Titanic: வாங்க... கப்பலை மூழ்கடிக்கலாம். மற்ற விளையாட்டுகளையும் முயற்சிக்கலாம்.


  • Escape!: எத்தனை நேரம் தாக்கு பிடிக்கிறீர்கள்? கொஞ்சம் அடிமையாக்கி கொள்ளும் பக்கம் (you lasted 10.946 seconds என்கிறார்கள் :-)


  • This Day in History: அந்த நாள் ஞாபகத்தை சுவையாக ஒவ்வொரு நாளும் கொடுக்கிறார்கள்.


  • Lost in Translation: மொழிமாற்றத்தினால் நடக்கும் கருத்துச்சிதைவுகளை எடுத்துக்காட்டுகளின் மூலம் சொல்கிறது. நான் சொல்ல நினைத்தது: I am a lover of Tamil language but not a fanatic.
    ஃப்ரெஞ்சில் இருந்து ஜெர்மனுக்கு மாற்றி மீண்டும் ஆங்கிலத்துக்கு வந்தால்: I am however not in the love with language of Tamil from Fanatiker.


  • Profotos Professional Photography Resource: புகைப்பட விரும்பிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் இனிமையான தளம். வாரம் ஒரு வலைப்பதிவர் மாதிரி மாதம் ஒரு நிழற்கலைஞரை முன்னிறுத்துகிறார்கள். இந்த மாதம் Deanna Devine-Silvestre குழந்தைகளை எப்படி படம் பிடிக்கலாம் என்று விவரிக்கிறார்.


  • Amazon Theater: அமேசான் படம் போடறாங்களே... திரைப்படம் எடுப்பவர்கள் மி.முகவரி கொடுத்தால் அவர்களின் படங்களும் இணையக் கணினிகளில் இடம்பிடிக்குமாம்.

3 கருத்துகள்:

பாலாஜி, ப்ரிட்னி ஸ்பியர்ஸ் குறைகடத்தி சமாச்சாரம் ரொம்பப்பழையதுதான்.

கொஞ்சம் நம்ப படிப்பு சம்பந்தமா இருக்கறதால சொல்லமுடியும் - ஓரள்வுக்கு நல்ல முறையில் எழுதப்பட்ட பாடங்கள்.

கொசுறு செய்தி: Photonic Crystals பக்கத்தைப் பார்க்கவும். http://britneyspears.ac/physics/pc/pc.htm அதிலுள்ள எங்கள் டொராண்டோ பல்கலைக்கழப் பேராசிரியர் சஜீவ் ஜான் (இந்திய வம்சாவளி) - வருங்காலத்தில் இதற்காக நோபல் பரிசு வாங்கக் கூடும்.

மேலுள்ள அனானிமஸ் == வெங்கட்

ப்ரிட்னி சொல்லிக் கொடுத்தாலாவது மண்டையில் ஏறுகிறதா என்று பார்க்கிறேன் :P

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு