சனி, டிசம்பர் 04, 2004

நாம் புதியவர்கள் - மும்பை புதியமாதவி

நான் தென்றலாக
வரவில்லை
அதனாலேயே
புயல் என்று
யார்... சொன்னது?

நான் கனவுகளாக
வரவில்லை
அதனாலேயே
நிஜம் என்று
யார்... சொன்னது?

நான் காதலியாக
வரவில்லையே
அதனாலேயே
சகோதரி என்று
யார்... சொன்னது?

நான் மழையாக
வரவில்லை
அதனாலேயே
சூரியன் என்று
யார்... சொன்னது?

நான் விடியலாக
வரவில்லை
அதனாலேயே
இருட்டு என்று
யார்... சொன்னது?

நான் அதாக
வரவில்லை
அதனாலேயே
இதாக இருக்க
யார்... சொன்னது?

நான் நானாக
நீ நீயாக
நீயும் நானும்
புதிதாகப் பிறந்தவர்கள்...

நான் யார்...?
நாளைய
அகராதி
எழுதும்...
அதுவரை இருக்கின்ற சொற்களில்
என்னைக் கழுவேற்றி
உன்னை
முடித்துக்கொள்ளாதே.

வெளியான இதழ்: நடவு - இதழ் 11

2 கருத்துகள்:

அற்புதமாக இருக்கிறது!புதிய மாதவியின் கவிதை என்றால்
அந்த வார்த்தைகளின் அழுத்தம்!
மிகப் பிடித்தது இவரின் கவிதைகளும்தான்.

எளிமையாகவும் உணர்வுமயமாகவும் எழுதுபவர். சமீபத்தில் படித்ததில் எனக்கும் மிகவும் பிடித்த கவிதை இது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு