செவ்வாய், டிசம்பர் 07, 2004

ஓட்டுப் பெட்டி

இரண்டு தேர்தல்கள் சூடு பிடித்திருக்கிறது.

'மதுர'விற்கு போடுங்க ஓட்டு என்கிறார்கள் : www.new7wonders.com (மார்க்கம்). இன்றைய தினமலரிலும் அறைகூவுகிறார்கள்: மீனாட்சி கோயிலை உலக அதிசயமாக்க தேவை உங்கள் ஓட்டு.

உலக அதிசயமாக தேர்ந்தெடுக்கப் பட்டால், கோவிலில் தீ பிடித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா, சுற்றுலா வசதி எப்படி மேம்படுத்தலாம் என்று எல்லாம் எழுத அருமையான வாய்ப்பு கிடைக்கும்.



இரண்டாவது 2004 Weblog Awards. இந்தியப் பழங்குடியில் இருந்து எவராவது அகப்படுகிறாரா என்று துழாவியதில் Rajan Rishyakaran மட்டுமே கண் முன்னே வந்தார். அவரும் தென் கிழக்கு ஆசியாதான். இந்தியாவும் அது சார்ந்த தரமான வலைப்பூக்களும் பரிந்துரைக்கப்படவே இல்லை. நம்மவர்களுக்கு என்றுதான் பதவி, பட்டம், வெற்றி ஆசைகள் வருமோ :-P

கொடுக்கும் விருதுகள் பட்டியல் கவர்ச்சியாக இருக்கிறது. அவற்றை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்தால் இப்படி சொல்லலாம்:

1. தலைசிறந்த வலைப்பூ

2. சிறந்த புதிய பதிவு (ஜூன் 2004-த்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது)
3. சிறந்த குழுப் பதிவு (ஒன்றாவது பரிந்துரைக்க முடியுமா?)
4. சிறந்த நகைச்சுவை/கிண்டல்/நக்கல் பதிவு

5. சிறந்த சமூக/கலாசார பதிவு
6. சிறந்த புகைப்படப் பதிவு
7. சிறந்த வடிவமைப்பூ

8. சிறந்த கட்டுரையாளர்
9. சிறந்த சிறுகதையாளர்
10. சிறந்த கவிஞர்

11. சிறந்த மேற்கத்திய பதிவுகள்
12. சிறந்த ஈழ பதிவுகள்
13. சிறந்த தமிழக பதிவுகள்

14. பெண்களுக்கான சிறந்த பதிவு
15. சிறுவர்களுக்கான சிறந்த பதிவு
16. சிறந்த அரசியல் பதிவு

17. சிறந்த வலதுசாரி பதிவு
18. சிறந்த இடதுசாரி பதிவு
19. சிறந்த ஊடகப் பதிவு

20. சிறந்த முகமூடி பதிவு
21. சிறந்த கேலி சித்திர பதிவு
22 சிறந்த சமய பதிவு

எல்லோருக்கும் ஒரு விருது வழங்க வேண்டுமானால், இன்னும் ஈராறு தலைப்பை சேர்த்துக் கொள்ளலாம் ;;-)


5 கருத்துகள்:

மருதைக்கு ஓட்டு போடலாம்னு அந்த தொலைபேசி எண்ணை சுழற்றினேன். ஒரு ஆணும் பெண்ணும் கொச்சையாக பேசி கொண்டார்கள்.
அழைத்து பார்த்தீர்களா?
நான் இரண்டு முறை முயன்றேன். அதேதான் முடிவு.

என்னால் நம்பவே முடியவில்லை..போதாகுறைக்கு இன்னைக்கு தினமலர்ல வெற இதபத்தி எழுதிருகாங்க.
மருதைக்கு ஓட்டு போடலாம்னு அந்த தொலைபேசி எண்ணை சுழற்றினேன். ஒரு ஆணும் பெண்ணும் கொச்சையாக பேசி கொண்டார்கள்.
அழைத்து பார்த்தீர்களா?
நான் இரண்டு முறை முயன்றேன். அதேதான் முடிவு.

என்னால் நம்பவே முடியவில்லை..போதாகுறைக்கு இன்னைக்கு தினமலர்ல வெற இதபத்தி எழுதிருகாங்க.

http://www.dinamalar.com/2004dec08/fpnews2.asp

இதுகெல்லாம் வேற :-)


http://www.tibet.ca/en/wtnarchive/2000/8/12_4.html

http://www.rediff.com/us/2000/aug/16us1.htm

http://directory.google.com/Top/Society/History/By_Time_Period/Ancient/Seven_Wonders_of_the_World/

my nominations

1. none
2. http://tamilstock.blogspot.com
3. http://malekind.blogspot.com
4. http://indlyvadai.blogspot.com
5. none
6. none
7. all blogs hosted at tamiloviam
8. http://ravisrinivas.blogspot.com
9. none
10. http://blog.selvaraj.us/
11. no idea
12. பெயரிலியின் பதிவுகள்.
13. http://thoughtsintamil.blogspot.com
14. no idea
15. கிருபா??????
16. இந்த இடத்துக்கு, பி.கே.எஸ், அருண் இருவரும் முட்டிக்கொள்கிறார்கள்
17. S.T.திருமலை ப்ளாக் துவங்கிட்டாரா?
18. பார்வை மெய்யப்பன்
19. அப்பிடின்னா என்ன?
20. http://dystocia.blogspot.com/
21. http://aruls.blogspot.com/
22. எந்த சமயம்? இந்துவா , இஸ்லாமா? கிறிஸ்தவமா?

கொச்சையாக பேசுகிறார்களா... கேட்டுவிட்டு வருகிறேன் முத்துகுமார். தொலைபேசி எல்லாம் கேட்டு படுத்தாமல், நேரடியாக வோட்டு போட வைத்திருக்கலாம். விநாடிக்கு ஒரு முறை வாக்களிக்க வைத்திருக்கலாம்! நிச்சயம் 'தாஜ்' வென்றிருக்கும்.

நல்ல தேர்வுகள் அனானிமஸ்.

1, 5, 6-க்கு நிச்சயம் நிறையத் தேறும்.

தமிழோவியம் பதிவுகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. நேசமுடனில் எவ்வளவு மறுமொழிகள் என்று அறிய முடியாது. தேதிவாரியாக கோப்புகளைப் பார்க்க முடியவில்லை. பல ப்ளாக்ஸ்பாட் வலைப்பூக்களே ஆயிரம் தடவை பெட்டர்.

22-க்கு உங்க பதில் சூப்பர் :P

தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டார்கள் . மறுபடியும் முயற்சி செய்கிறேன் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு