(என்னுடைய குறிப்புகள் அடைப்புக்குறிக்குள்)
செந்தில்: புதுமைபித்தன் போன்ற நகைச்சுவை எழுத்தாளர்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு கல்கியையே சேரும் என்னும் எழுதப்பட்ட கட்டுரையின் முரண்களை சொல்கிறார். (The Hindu : Magazine: கல்கியும் உயிருடன் இல்லை... பு.பி.யும் இல்லை... யார் வந்து மறுக்கப் போகிறார்கள்?)
டீகட: 'ஈழத் தமிழர்களின் சாதனையை தமிழ்நாட்டு தமிழர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் சாதாரணமாகத் தெரிகிறது' -- பாரதிராஜா. (The Hindu: அடுத்து நெய்வேலியில் மீட்டிங் இருந்தால், நெய்வேலித் தமிழர்கள் போல் கடின உழைப்பாளிகளை நான் சென்னையில் கூட கண்டது இல்லை என்று டய்லாக் ரெடியா?)
CNN: இரண்டாயிரத்து மூன்னூறு பேர் கரகோஷமிட இராணுவ மந்திரியை நோக்கி குரலெழுப்புகிறார் போர் வீரர். ஈரக்கில் கேட்கபட்ட தர்மசங்கடமான கேள்விகளுக்கு, நிர்தாட்சண்யமான பதில்கள். (ஜனாதிபதி உங்களைத் தக்க வைத்துக் கொண்டதற்கு இந்த மாதிரி தூக்கியெறிந்து பேசுவதுதான் காரணமா?)
Simon: ஆத்மதிருப்தியோ, சுத்தி-கரிப்போ -- வலைப்பதிவதின் தாத்பர்யங்களை எடுத்துரைத்து, பதினைந்து விநாடி புகழ் பெறுவதற்கு வழிமுறைகளை பட்டியலடுகிறார். (உங்கள் வலைப்பதிவும் புகழ் பெற வேண்டுமானால், இந்த மாதிரி பட்டியல் போட்டுத் தள்ளுங்கள். படிப்பதற்கு நாலு பேர் வருவார்கள்.)
Zen and Japanese Stories: குழந்தைகள் முதல் பெரியவர்கள் புரிவது போல் எளிதில் விளங்கி, நிறைய முடியை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஜென் கதைகள். (சம்பந்தா சம்பந்தமில்லாமல் மேற்கோள் காட்டி கொல்வது போல், ஜென் கதைகள் சொல்லியும் வாதங்களை திசைதிருப்ப பயன்படும்.)
Send Mary Shodiya to Barnard College: நல்ல பல்கலை.யில் இடம் கிடைத்தாலும், கட்டணம் கட்ட முடியாத பொருளாதாரம். நைஜீரியாவில் பிறப்பு. 'தெய்வத்தால் ஆகாதெனினும்...' என்னும் குற்ளையொற்றி, பணம் சேர்த்த கதை. (விக்ரமனின் அடுத்த படத்துக்கு கதை ரெடி.)
celebrity design - Yahoo! Mail: யூனிசெஃப், எயிட்ஸ், Tuberous Sclerosis, போன்ற ஆராய்ச்சிகளுக்கு மின்மடலாடிக் கொள்வதன் மூலம் யாஹுவை தானம் வழங்க வைக்கலாம். (விக்ரம், சாயாசிங், ரீமா சென் எல்லாம் அடுத்த தீபாவளிக்குப் போட்டு விடுங்க சாமீயோவ்!)
சித்து: எங்கிருந்தோ வந்த நவஜோத் சிங் சித்துவின் வர்ணனை மொழிகள். ('ஆம்லெட் போடணும் என்றால் முட்டையை உடைத்துதானே ஆக வேண்டும்' போன்ற நெட்மொழிகள் நிறைந்தவை. யாராவது மானநஷ்ட வழக்குப் போட்டுவிடப் போகிறார்கள்.)
Far from the madding crowd: உங்களுக்கு எவ்வளவு த.சு. (தலைப்பு சுருக்) தெரியும் என்று சொவ்வறையாளர்களுக்கு சவால் விடும் தொடுப்பு கொடுக்கிறார். (Acronym Anarchy: எழுபத்தைந்து தெரிந்தால் மென்பொருளாளர்; நூறும் தெரிந்தால் சும்மா ஜிகிடி செய்யும் கன்சல்டண்ட்.)
கருத்துரையிடுக