பாஸ்டன் முப்பெரும் விழா
பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தேதி: டிசம்பர் 25, 2004
கிழமை: சனி
நேரம்: 4:00
இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை
தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்
வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்
தலைமையுரை: பெயரிலி பேரவை
விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு
சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்
ஏற்புரை: 'கலக்கல்' காசி
முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி
தேசிய கீதம்: கதிர்
ஒளிப்பதிவு: 'காண்பதுவே' மாது
வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!
வெள்ளி மாலையன்று (டிச.24) -- விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!
முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!
மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் :-)
பாலாஜி,
இதெல்லாம் ரொம்ப ஓவராத்தெரியலை? சந்திப்பு மட்டும்தானே பேசினோம்? என்னமோ போங்க....
சொன்னது… 12/09/2004 05:18:00 PM
அப்பொழுது சாப்பாடு இல்லையா :-)
(மிகைப்படுத்தல் அதிகமாகிவிட்டதோ!?)
சொன்னது… 12/09/2004 07:41:00 PM
edhu eppadiyo...sappadu parcel onnu indha pakkam anuppi veinga...hehe!! ;)
- Mayavarathaan (http://mayavarathaan.blogspot.com)
பெயரில்லா சொன்னது… 12/10/2004 01:59:00 AM
எல்லாஞ்சரீ..... பசியோட இருக்கவிய இந்த பதிவ பார்க்க வேணாம்னு ஒரு disclaimer போட்டிருக்கப்டாதா? :(
விருந்துக்கு செல்லும் அத்துனை பேருக்கும் வயிரு வலித்தால் நான் ஜவாப்தாரி அல்ல ;)
பாண்டி
பெயரில்லா சொன்னது… 12/10/2004 06:11:00 AM
பாலாஜி,
இப்பொழுதுதான் பார்த்தேன். நல்லது. வழி தொலையாமல் வந்து சேர்கிறேன். :)
படங்களெல்லாம் பெயரிலிப் பேரவையை கிளறி எடுத்ததா? அது யார் அந்தப் பெண்? சந்திப்புக்கு வருகிறாரா? ;-)
சொன்னது… 12/10/2004 06:19:00 AM
//சிங்கம்//
மிருகமாறாட்டம்:)
கார்த்திக்கு அந்த நாற்காலி உமக்குத்தான் போலிருக்கு!
சொன்னது… 12/10/2004 06:25:00 AM
Christmas leava eppadi kazhikirathunnu theriyamaa, Oru naalanju per sernthu, engavathu utkaarnthu kathai pesa poreenga...Ithukku ippadi oru get up...Nadathunga raasaa nadathungaa....
Naan inge intha pani palai-yil ulavum oru thani otagamaagi Grrr..Grrr...-nnu sound vittu kittu irukken, neenga meet panna pora vayitherichal kaaranamaa...
Nalla enjoy pannunga....Happy holidays...
சொன்னது… 12/10/2004 08:07:00 AM
பாண்டி/மா.வ.,
பிரபஞ்சனை பொய்ப்பிப்பதற்க்காகவாவது பார்சல் அனுப்புகிறோம் :))
கார்த்திக்,
நீங்க கூட இன்னொருவரை அழைத்து வரப் போவதாக கேள்விப்பட்டேன்... அதுதான் ;;-)
கண்டுபிடிச்சிட்டீரே பாலாஜி... எங்கே இருந்து சவுண்ட் விடறீங்க?!
சொன்னது… 12/10/2004 09:13:00 AM
கருத்துரையிடுக