செவ்வாய், டிசம்பர் 14, 2004

பத்து 'தலை'

Barbara Walters' Most Fascinating People: கடந்த வருடத்தில் வியக்கத்தக்க பத்து பெயர்களை ஏபிஸி தொலைக்காட்சியில் பார்பரா வால்டர்ஸ் பட்டியலிட்டார். போன வார நிகழ்ச்சியில் அவர்களின் பேட்டியும் இடம்பெற்றது.

Karl Rove: ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் மூளை என்று வர்ணிக்கப்படுபவர். இரண்டாம் முறை வெற்றிக்கனியை பெற வைத்தவர்.

Mel Gibson: இருபத்தைந்து மில்லியன் செலவழித்து உம்மாச்சி படம் எடுத்தவர். 'ப்ரேவ்ஹார்ட்' போன்ற படங்கள் நடித்து இயக்கியிருந்தாலும், 'பாஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்'டில் பெரிய நட்சத்திரங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய நிறுவனங்கள் விநியோகிக்க மாட்டோம் என்று கைவிரித்துவிட, சொந்தமாக ரிலீஸ் செய்தவர். இதுவரை ஐநூறு மில்லியன் லாபம் பார்த்து இருக்கிறார்.

Google Founders Larry Page and Sergey Brin: நம்ம கூகிள்... புத்தம்புதிய Google வழிகாட்டி பார்த்தாச்சா?

World Series-winning Boston Red Sox pitcher Curt Schilling: ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் முதல் தி ஹிந்து வரை பாராட்டும் ரெட் சாக்ஸ் அணி சார்பாக காலில் கட்டுடன் செவ்வி கொடுத்தார்.

Michael Moore: ரொம்ப ஃபாரன்ஹீட் ஏற்றாமல் அமைதியாகப் பேசினார்.

Usher: ரெக்கே & ப்ளூ பாடல் பாடும் ஆப்பிரிக்க அமெரிக்கர். பாடி கேட்டதில்லை.

Paris Hilton: பாரிஸ் ஹில்டன் இடம்பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

Oprah Winfrey: ஐம்பதிலும் இந்திரா காந்தி போன்ற நளினமான வசீகரம். அரட்டை அரங்கத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கார் பரிசளித்து பிறந்த நாள் கொண்டாடியவர். இவர் வாய் திறக்கக் கூட வேண்டாம்... கண் காட்டினால் போதும். மார்குவேஸ் முதல் மடிக்கணினி வரை விற்று தீர்ந்துவிடும்.

Donald Trump: மஞ்சக் கடுதாசி கொடுத்தாலும் மற்றவர்களின் சீட்டை (வேலையில் அமர்த்திக் கொள்ளாமலே) நீக்கி வருபவர். நிஜமாகவே நிஜ-நாடகக் காட்சியான 'அப்ரெண்டிஸி'ல் சுவாரசியப்படுத்துபவர்.

Ken Jennings: தமிழ் வலைப்பதிவுலகில் (Final Jeopardy - Domesticated Onion) வெங்கட், பிபி (Of Cabbages and Kings: They Killed Kenny!) என்று பலராலும் பதியப்பட்டவர்.தமிழில் சென்ற வருட 'தலைகள்' யாரு?

 • ஜெயேந்திரர்
 • விஜயகுமார் (டி.எஸ்.பி.)
 • ஜெயலட்சுமி (சிவகாசி)
 • சோனியா அகர்வால்
 • ப. சிதம்பரம்
 • சௌந்தர்யா
 • வைரமுத்து
 • ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 • திருமுருகன் (மெட்டி ஒலி)
 • சுஜாதா
 • ஏ. ஆர். ரெஹ்மான்
 • ரம்யா கிருஷ்ணன்
 • த்ரிஷா
 • திருச்செல்வன் (கோலங்கள்)
 • ஜோதிகா

 • 0 கருத்துகள்:

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு