செவ்வாய், டிசம்பர் 14, 2004

லேடரல் கேள்விகள்

(கடி) விடை கொடுப்பதற்காக ஒரேயொரு சாம்பிள்:
Q. How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find an elephant with one hand.

1. முட்டையை கான்க்ரீட் தரையில் போடும்போது உடைக்காமல் போடுவது எப்படி?

2. ஒரு சுவற்றை எழுப்புவதற்கு எட்டு மனிதருக்கு பத்து மணி நேரம் பிடித்தது. அப்படியென்றால் நான்கு பேருக்கு எத்தனை நேரம் எடுக்கும்?

3. உங்களின் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் மூன்று ஆரஞ்சுகளும் நான்கு ஆப்பிள்களும் இருந்தால், மொத்தம் என்ன இருக்கும்?

4. எட்டு நாள் தூங்காமல் மனிதனால் எப்படி இருக்க முடியும்?

5. சிவப்பு நிறமுடைய கல்லை, நீலக்கடலில் போட்டால், கல் என்னவாகும்?

6. பாதி திராட்சையை ஒத்திருப்பது எது?

7. காலையில் சாப்பிடவே முடியாதது எது?

8. சக்கரம் கண்டுபிடித்தவுடன் என்ன நிகழ்ந்தது?

கரெக்டாக சொல்வதற்காக மொழிபெயர்க்க இயலாத இன்னொரு சாம்பிள்:
9. Bay of Bengal is in which state?
A : Liquid

3 கருத்துகள்:

1. முட்டையை கான்க்ரீட் தரையில் போடும்போது உடைக்காமல் போடுவது எப்படி?
போடும்போது உடைக்காமல் போடுவது சுலபம் - விழும்போது தானே உடையும்

2. ஒரு சுவற்றை எழுப்புவதற்கு எட்டு மனிதருக்கு பத்து மணி நேரம் பிடித்தது. அப்படியென்றால் நான்கு பேருக்கு எத்தனை நேரம் எடுக்கும்?

எழுப்பிய சுவரை மீண்டும் ஏன் எழுப்ப வேண்டும்?

3. உங்களின் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் மூன்று ஆரஞ்சுகளும் நான்கு ஆப்பிள்களும் இருந்தால், மொத்தம் என்ன இருக்கும்?
ரெண்டு கைதான் இருக்கும் சார்!

4. எட்டு நாள் தூங்காமல் மனிதனால் எப்படி இருக்க முடியும்?
எட்டு நைட் தூங்கிட்டா போச்சு!

5. சிவப்பு நிறமுடைய கல்லை, நீலக்கடலில் போட்டால், கல் என்னவாகும்?
முழுகும்!

6. பாதி திராட்சையை ஒத்திருப்பது எது?
இன்னொரு பாதி திராட்சை!

7. காலையில் சாப்பிடவே முடியாதது எது?
Dinner? Doubtful..

8. சக்கரம் கண்டுபிடித்தவுடன் என்ன நிகழ்ந்தது?
உருண்டது!

1) முட்டையையை கான்கிரீட் தரையில் போடும்போது, கான்கிரீட் தரை உடையாமல் போடுவது எளிதுதான்.

மீதிக் கேள்விகளுக்கு சுரேஷின் பதில்களையே நானும் வழிமொழிகிறேன்

நல்லாவே யோசிக்கறிங்க அண்ணாச்சிங்களா!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு