skip to main |
skip to sidebar
Remembering MS Subbulakshmi என்று லேஸிகீக் தன்னுடைய வலைமனையில் காட்டிய விதம், எம்.எஸ். கொள்ளை கொண்ட விதத்தைச் சொன்னது.
'நான் சின்ன வயசில் இருந்தே உங்க ப்ரொகிராமைப் பார்ப்பேன்' என்று 'பெப்சி' உமாவைப் பார்த்து சீரியஸாக சொன்னார் நடிகர் ஷாம்.
'செல்லமே' படத்தை சிரிப்பு வருமாறு கிண்டலடித்தார்கள் சூப்பர் 10.
மொஸாம்பிக் தேர்தல் முடிந்துவிட்டது. அர்மாண்டோ க்வெபூஸா (Armando Guebuza) வெற்றி பெறுகிறார். 1986-இல் இருந்து ஆளும் ஜோகிம் சிஸானோ (Joaquim Chissano) ஒருவழியாக ஜனாதிபதி பதவியை விடுகிறார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற செல்பேசி நிறுவனங்களில் ஸ்பிரிண்ட் பிசிஎஸ் முக்கியமானது. இதை வைத்துக் கொண்டிருப்பவர்களை நக்கலடிப்பது மற்ற செல்பேசி விளம்பரங்களின் முக்கிய அம்சமாகும். நின்றால் அவுட்-ஆஃப்-நெட்வொர்க். வீட்டில் இருந்தால் 'ரோமிங்' என்று முகஞ்சுளிக்க வைக்கும் கம்பியில்லா வலைப்பின்னல். ஆனாலும், குறைந்த விலையில் அதிக நிமிடங்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக மூன்றாண்டுகள் சாசனம் எழுதுபவர்கள் பலர். (நானும் இரண்டாண்டுகள் வெறுப்பான செல்பேசி காலம் தள்ளியதுண்டு.)
இவர்கள் மூன்று பில்லியன் டாலர் செலவில் தங்களின் நெட்வொர்க்கை மேம்படுத்தப் போகிறார்கள்.
பெட்ரோல் விலை மிகவும் குறைந்துவிட்டதாக ஓபெக் நாடுகள் மூக்கால் அழுது, விலையேறுவதற்கு ஆவன செய்ய முடிவெடுத்துள்ளார்கள். (ப. சிதம்பரம் கனவில் மண்?)
ஈ.டி.ஏ. பிரிவினைவாதிகளின் ஸ்பெயின் குண்டுவெடிப்பில் யாரும் இறக்காதது சந்தோஷமான விஷயம்.
காங்கோவில் மாதாமதம் 31,000 பேர்கள் இறக்கடிக்கப் படுகிறார்கள். போர் முடிந்தாலும், பட்டினி சாவுகளை நிறுத்த முடியாத ஐக்கிய நாடுகள் அமைப்பு.
சார்க், ஆசியான், ஈயூ போல தென் அமெரிக்க நாடுகளும் 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்று யூனியன் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். வர்த்தகம் பலுப்படவும், ஒற்றுமையாக அமெரிக்காவிடம் கோரிக்கைகள் வைக்கவும் இது உதவலாம்.
தாய்லாந்தில் ஆரிகமி (பேப்பர் கலை) பறவைகளை பறக்க விட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சித்ததை சன் செய்திகள் காண்பித்தது. ஆனால், அடுத்த நாளே, அமைதிப் பறவைகள் விட்ட தெற்கு பகுதியில், குண்டுகளும் வெடித்தது. பேப்பர் எல்லாம் பறக்கவிட்டு ஸ்டண்ட் அடிக்காமல், எதற்கு தாக்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாமே!?
முகப்பு
// 'செல்லமே' படத்தை சிரிப்பு வருமாறு கிண்டலடித்தார்கள் சூப்பர் 10. //
அதுவும் அந்த "ஆரிய உதடுகள் உன்னது" பாட்டினை நக்கல் அடித்த/ஆரம்பித்த விதம் தூள்... பார்த்தீங்களா ?
சொன்னது… 12/13/2004 06:20:00 AM
நல்ல காரம் கலந்திருந்தார்கள் :-)
சொன்னது… 12/13/2004 10:44:00 AM
கருத்துரையிடுக