செவ்வாய், ஜனவரி 11, 2005

அனுதாபங்கள்

சிந்துவை அதிகம் திரைப்பட நாயகியாக பார்த்ததில்லை. ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது பார்க்கும் 'மெட்டி ஒலி'யில் மாமியாருக்கு (சாந்தி வில்லியம்ஸ்) அடுத்த உயிர் சித்திரம் இவர்தான். வளைகுடாவில் கணவன். பெட்டி நிறையப் பணம். தொலைபேசியில் குடித்தனம். கண்களில் வாழ்க்கையின் மேல் அலட்சியம் கலந்த வெறுப்பு. முன்னாள் நட்பை படுக்கைக்கு அழைக்கும் துணிச்சல். உண்மை குட்டுப்படும் தருணங்களில் scared to death பயம்.

பெண் ரசிகர்களிடையே அருவருப்பையும் சீரியல் விமர்சகர்களிடையே ஒரு 'அட'வையும் என்னிடையே ஆச்சரியத்தையும் உண்டாக்கியவர்.

'இணைந்த கைகள்' முதல் படம் என்று வாழ்க்கை குறிப்பிடுகிறார்கள். சுனாமிக்காக தெருவில் உண்டியல் குலுக்கியவர் மயங்கி விழுந்து மறைந்திருக்கிறார். முப்பத்திரண்டு வயது. ஒன்பது வயது மகள். குணச்சித்திரம், வில்லி வேடங்கள், அக்கா/அண்ணி என்று நிறையவே நடித்து வந்தவர்.

ஆழ்ந்த வருத்தங்கள்.

செய்தி: Sindhu

3 கருத்துகள்:

சுயநலம் பாராது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேகரித்த அந்த செயல் பாராட்டப்படவேண்டிய ஒன்று. குளிர்படுத்தப்பட்ட அறையில் இருந்து கொண்டு வெற்று அறிக்கைகள்விடும் நடிக,நடிகையருக்கு மத்தியில் நிதி சேகரித்த இவரின் உயிரை எமன் குடித்தது சரியல்ல...

(சிந்து என்று இணைத்துள்ள இணையப்பக்கம் சென்றால் அங்கு சன்டிவியின் மூட்டுவலி நாடகம் என்று எழுதி இருக்கிறார்கள்!)

Dramatic way to end life Moorthi!

சாமி போட்ட முடிச்சு-ங்கற படத்துல ஹீரோயின். ரொம்ப அழகா வருவா. நீங்க ஸைடுல போட்டிருக்கறது கூட அந்த படத்து ஸ்டில்லுதான் (ன்னு நினைக்கிறேன்.). பாவம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு