skip to main |
skip to sidebar
சென்னை ஓபனில் தான் ஜெயித்த ஐம்பத்தி ரெண்டாயிரம் அமெரிக்க டாலரையும் சுனாமி நிதிக்கு வழங்கி விட்டார் கார்லோஸ் மாயா (Carlos Moya).
பன்னிரண்டரை கி.மீ. தடகளப் போட்டிகளில் 11,800 டாலர் வென்ற ரஃபேல் பாயரி (Raphael Poiree) மொத்த தொகையையும் சுனாமி நிதிக்கு வழங்குகிறார்.
சுனாமிக்காக தன்னுடைய டென்னில் மட்டைகளை லெயிட்டன் ஹீவிட் (Lleyton Hewitt) ஏலம் விடுகிறார். முதல் ஏலத்தில் ஐயாயிரம் டாலருக்கு ராக்கெட்டை ஏலம் எடுத்திருக்கிறார்கள். கூடவே அதற்கு சமமாக இன்னொரு ஐயாயிரம் டாலர் போட்டு தன் கொடை கணக்கை ஆரம்பித்திருக்கிறார்.
இங்கிலாந்து கால்பந்தாட்டக் குழுவான மான்செஸ்டர் யுனைடெடின் (Manchester United) வீரர்கள் கையெழுத்திட்ட ஆடை முப்பத்தேழாயிரம் டாலர்கள் ஏலத்திற்கு சென்று, கொடை வந்திருக்கிறது.
சுனாமிக்காக ஆடப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் பதினைந்து மில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது.
முகப்பு
கருத்துரையிடுக