வியாழன், ஜனவரி 13, 2005

பெரியார்

நையாண்டிதான் என் பலம் - சத்யராஜ்

Dinamani.com - Kadhir: பெரியார் குடும்பம் ரொம்ப ஆச்சாரமான குடும்பம். சுத்த சைவம். ஆனால், இவர் மட்டும் அசைவம் சாப்பிடக்கூடியவர். வீட்டில் சைவ உணவு சமைத்தாலும் இவருக்கு மட்டும் அசைவம் சமைத்திருக்க வேண்டும்.

நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருந்து வருகிறவர். பெரியாருக்குப் புலால் சமைத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டுத்தான் பரிமாறுவார். அப்படி அவர் குளிக்கப் போகும்போது யாருக்கும் தெரியாமல் எலும்புத் துண்டை விரதச் சாப்பாட்டுக்குள் புதைத்து வைத்துவிடுவார் பெரியார். நாகம்மையார் வந்து பார்த்ததும் இது பெரியாரின் குறும்புத்தனம்தான் என்று புரிந்து கொள்வார்.

அதே போல், திருமணம் செய்து கொண்ட பிறகு கோயிலுக்குப் போகிறார் நாகம்மை. சில இளைஞர்களுடன் பெரியார் கோயிலுக்குச் சென்று, "கோயிலுக்கு வந்துருக்கிற அந்தப் பொண்ணு புது பார்ட்டி. போய் கிண்டலடிங்க' என்று தன்னுடன் வந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு பெரியார் மறைமுகமாக நின்று கொள்வார். பசங்களும் நாகம்மையைக் கலாய்க்கிறார்கள். நாகம்மைக்கு வெலவெலத்துப் போய் உடம்பு நடுங்கி விடுகிறது. வீடு திரும்பிய நாகம்மையிடம், "நான்தான் அந்த வேலையைச் செய்யச் சொன்னேன்' என்று விழுந்து விழுந்து சிரித்துக் கூறுவாராம்.

அதே போல், தனது பணிரெண்டு வயதில் ஈரோட்டில் இருக்கும் தன் கடைக்குப் போகும்போது தெருவில் உள்ள ராமநாத அய்யர் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். அப்படிப் போகும்போது தினமும் அய்யரைக் கிண்டலடிப்பது பெரியார் வழக்கம்.

அய்யரோ தலைவிதி மீது தீவிர நம்பிக்கை உடையவர். ஒருமுறை அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், "எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கிறது' என்று அய்யர் சொல்ல, அந்த நேரத்தில் அய்யர் கடைமுன் உள்ள தட்டியைத் தூக்கி நிறுத்தித் தாங்கியிருக்கும் கொம்பைத் தள்ளிவிட்டுவிடுவார். தட்டி அய்யர் தலையில் விழுந்துவிடும். உடனே அய்யர் பெரியாரைத் துரத்துவார். அப்போ, "எல்லாம் விதிப்படித்தானே நடக்குது. என்னை ஏன் திட்டுறீங்க?' என்று கூறிவிட்டு ஓடிவிடுவாராம்.

1 கருத்துகள்:

//
"கோயிலுக்கு வந்துருக்கிற அந்தப் பொண்ணு புது பார்ட்டி. போய் கிண்டலடிங்க' என்று தன்னுடன் வந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு பெரியார் மறைமுகமாக நின்று கொள்வார்.
//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லே?

அவர் புகழை நல்லாவே பரப்பறாங்க.

- சத்யராஜ்(குமார்)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு