திங்கள், ஜனவரி 31, 2005

தினமணி

Dinamani.com - Kadhir: நோட்டம்: விழிப்பு - சுகதேவ்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அலுவலக நேரங்களில் தூங்கும் அல்லது தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. அலுவலக நேரத்தில் தூங்குவது மட்டும்தான் குற்றமா..?

வேலை நேரத்தை வேலை பார்க்காமலேயே கழிப்பது... உரிய வேலையில் பாதிக்குப் பாதியோடு நிறுத்திக்கொள்வது... வேலை பார்ப்பது போன்ற தோற்றத்தை உருக்குலையாமல் தக்கவைத்து, உண்மையில் வேலையே பார்க்காமலிருப்பது... வேலையைத் தவிர வேறு "வேலை'களைச் செய்வதன் மூலம் வேலையில் நீடித்திருப்பது... இப்படி நமது அலுவல் நேர மனிதர்களில் பல முகங்கள் உண்டு.

ஊழியர்கள் வேலை செய்கிறார்களா... இல்லையா... என்பதைத் தொடர்ந்து மதிப்பிடவும் கண்காணிக்கவும் தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் வலுவான ஏற்பாடு இருக்கும். இந்த வளையத்திலிருந்து ஊழியர்கள் பெரிதாகத் தப்பிவிட முடியாது. ஆனால் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் ஊழியர்களின் அன்றாட வேலை ஒழுங்கை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதற்கு வளைக்கமுடியாத ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறதா..? விவாதத்திற்குரியது.

ஒரு பெரிய வேலைப் பட்டாளத்தை ஒற்றை முனையிலிருந்து கண்காணித்து முற்றிலும் சரிப்படுத்திவிடுவது எப்போதும் சாத்தியமில்லை. அலுவல் நேரத்தில் தடம்புரள்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்ற உணர்வு, அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும். சுயமரியாதை நிறைந்த மனிதர்களே சமூகத்தின் மரியாதையையும் காப்பாற்ற முடியும்.



Dinamani.com - Editorial Page: அழுகிய ஆப்பிள் & அழகிய விதைகள் - ஜெ. மரிய அந்தோனி

குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினரோ தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாகப் பராமரிக்கிறோம் என்ற பெயரில் தங்களுடைய சிந்தனைகளை அவர்கள் மீது புகுத்தி, அதிகக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பவர்கள்.

இரண்டாவது வகையினரோ தற்போதைய உளவியல், நவீனத்துவம் ஆகியவற்றால் தூண்டப்பெற்று பிள்ளைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்கள்.

- வாய்ப்புகள் பலவற்றை முன்வைத்து அவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தால் நலம் என்று வழிகாட்டக் கூடியவர்களாக (கட்டுப்படுத்தக் கூடியவர்களாக அல்ல) இருப்பது;
- குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்பவர்களாக மட்டுமல்லாமல் உணர்வுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவர்களோடு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கிப் பேசுவது;
- குடும்பத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அவர்களது கருத்தையும் அவ்வப்போது கேட்பது;
- துன்பத்தில் ஆறுதல் சொல்லும்போது நண்பராகவும், கண்டிக்கும்போது பெற்றோராகவும் இருப்பது;
- அவர்கள் மீது கட்டுப்பாடுகளை வலிந்து திணிக்காமல் அவற்றிற்கான நோக்கங்களை விளக்கி அவர்களே மனமுவந்து ஏற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது
முதலியவை ஒரு சில வழிமுறைகள் மட்டுமே.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு