செவ்வாய், பிப்ரவரி 01, 2005

ADD

அட்டென்ஷன் டெஃபிசிட் டிஸ்ஆர்டர்

மகாத்மாஜிக்கு மட்டும் இவ்வாறு வசதிகள் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று வியக்கும் விளம்பரத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. (வழி)


225 வருட தொன்மையுடைய சஞ்சிகை வரலாற்றை படித்து விட்டு திரும்பினால் இன்னும் கொஞ்ச நாளில் தினமலர் செத்து போய்விடும் என்கிறார்கள். கொஞ்சம் நம்புகிற மாதிரிதான் கதை சொன்னார்கள். அமெரிக்காவின் சூப்பர் கம்பெனிகள் கை கோத்துக் கொள்வது போல் தி ஹிந்துவும் தமிழ்மணமும் டி.ஆர்.பி. ரேட்டிங் அடிதடியில் இறங்கலாம்.


செயின்ஃபீல்டைப் போல் ஜார்ஜ் கார்லினைப் போல் இந்தியர்கள் எவரையாவது பார்க்க மாட்டோமா என்னும் ஆதங்கத்தைத் தணிக்கிறார்: http://rack1.nethosters.com/~charles/russell/russell.ram (வழி) பெண் பார்த்து பெற்றோர் மணமுடித்து வைப்பது போல் தற்பாலாருக்கும் செய்து வைத்தால் என்று துவங்கிய போது ஆரம்பித்த சிரிப்பு இந்தியர்களும் சீனர்களும், ஜமைக்காவின் 'பொனானீ' தெரியுமா என்று வயிறு குலுங்க தொடர்ந்தது.


நேற்றைய சுகதேவ் மேட்டர் படித்தும் புத்தி வராமல் இவ்வளவு தைரியமாக வலை சுற்றுகிறோமே என்று மனசாட்சி எட்டிப் பார்த்தாலும் நான் ஜெர்மனியில் வசிக்காதது நிம்மதியைத் தருகிறது. பச்சை அட்டை வந்தபிறகு, அமெரிக்காவில் வேலையில்லாமல் இருந்தால் பஞ்சப்படியாக போதிய அளவு பணம் தருவார்கள். பெர்லினில் விலை மாந்தர் ஆகாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.


நான் ஆடிய சில ஆட்டத்தில் தோற்கவே வாய்ப்பில்லாமல் எளிதாக இருக்கும் Stupid Games விளையாட்டோடு இன்றைய ஆங்கில வலையுலா நிறைவடைகிறது. (வழி)

5 கருத்துகள்:

berlin prostitution story konjam gapsa madhiri irukkae?
atleast "sexed up" nu sollaranga...

http://fistfulofeuros.net/archives/001139.php

வாவ்!! இம்புட்டு இருக்கா பின்னாடி....

nice stuff here, very very nice

Hi all. How are you?

Did you know that USA and Europe blocked Wikileaks? What do you think about it?
Thanks

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு