புதன், ஜனவரி 19, 2005

கதைகளும் கூறுகளும்

மன்னிக்கவும்... இங்கு அடுக்கங்களின் குடியிருந்த பலருக்கும் பரிச்சயமான நிகழ்வு. Short & crisp கதை.

அபார்ட்மெண்டில் தங்கியிருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. உப்பு, புளி இல்லாவிட்டால் எங்காவது சட்டென்று கடன் வாங்கலாம். பைப்பில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்தவுடன் நுனிக்கால் கூட நோகாமல் ப்ளம்பரை கூவி விடலாம். குந்துரத்த தூர நகரத்துக்கு செல்ல ஆரம்பித்தால் ஜாகையையும் பைநாகப் பாயாக சுருட்டிக் கொண்டுவிடலாம். இடுப்பளவு புல் வளர்ந்து விட்டதே என்று வாரயிறுதி கண்ணீர் கிடையாது. வழிபாதையெங்கும் பனி பொழிந்து கட்டியாகி ஸ்கேட்டிங் மைதானமாகிப் போச்சே என்ற புலம்பல் இல்லை.

ஐம்பது டாலர் அமெரிக்க ஒரிஜினல் புத்தகத்தை, உள்ளூரில் அச்சடித்து, சென்னையின் ரோட்டோரங்களில் அம்பது ரூபாய்க்கு விற்பார்கள். அபார்ட்மெண்ட் வாழ்க்கை என்பது இந்த புத்தகங்களை வாங்குவது போல சுகமானது.

புத்தகத்தில் சில சமயம் கடந்த ஃபாரமே திரும்பவும் வரும். சில பக்கங்களில் வரிகள் பைஸா நகரத்து கோபுரம் போல் சாய்ந்திருக்கும். இந்த மாதிரி குடியிருப்பு அனுபவம் ஒன்றை கொடுத்திருக்கிறார் ராஜ்.

அமெரிக்க வசிப்பில் கேட்கும் 'வினோத சப்தங்கள்' என்று சுஜாதா சொல்பவை வேறு ;-)



கண்களும் பார்வையும் - மாலன்: சினிமாவும் டிவியும் ஆண், பெண், குழந்தைகள், எல்லோர் பார்வையையும் மாற்றி விட்டன.
"இன்று இப்படி நடக்குமா? நடந்திருந்தால் அவளது புருஷனும் அந்த ஊரும் என்ன செய்திருக்கும்?"

அருணா ஸ்ரீனிவாசன்: "ஒரு சமுகத்தின் பார்வைகள் அமையும் விதத்தில் எந்த அளவு டிவி, சினிமா, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களுக்கு பங்கு இருக்கிறது என்பது நெய் / தொன்னை அல்லது முட்டை / கோழிக்குஞ்சு போன்ற சமாசாரம். சமூகத்தின் பார்வைகளைதான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் நிழலில் வரும் பாத்திரங்களை அல்லது "தத்துவங்களைப்" பார்த்து பார்வைகளும் மாறுகின்றன என்பதும் நிஜமே.

ஆனால் சமூகப்பர்வைகள் மாறுகின்றன என்று குற்றம் சாட்டி ஒட்டு மொத்தமாக ஊடகங்களைப் பழி சொல்வதும் சரியல்ல. எத்தனைதான் பார்த்தாலும் படித்தாலும் கேட்டாலும், வள்ளுவரின் "எப்பொருள்..." பின்பற்றிக் கொண்டிருந்தால் சுசி கணேசன் எழுப்பியுள்ள கவலைக்கும் இடம் இருந்திருக்காது.

பார்வைகள், பார்க்கும் நபர்களின் மன முதிர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது."


இரண்டையும் படித்துவிட்டு குட்டையை குழப்ப நானும் சில அலைகள்.

வெள்ளந்தியாக இருப்பவர்கள் ஊடகங்கள்/புத்தகங்கள் மூலம் corrupt ஆகிறார்களா? (அல்லது) மாற்று சிந்தனைகளின் மூலம் தங்களின் ஆணிவேர் தாக்கங்களில் இருந்து விடுபடாமல் இருக்கிறார்களா? அப்படி இருப்பது நல்ல விஷயமா? ஜார்ஜ் புஷ், கொண்டலீஸா ரைஸ் போன்றவர்கள் கூட பிடித்த பிடியில் நிலையாக உள்ளார்கள். அது சரியா? கொள்கைகள் வேறு... புரிதல்கள் வேறா?

கிராமம் முதல் நகரம் வரை எல்லோருக்கும், முதிர்ச்சியான பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் அவசியம் தேவை. இன்றைய ஊடக அமைப்புகள் -- 'முதிர்ந்த பயனுள்ள தெரிவுகளை கொடுக்கிறார்களா?' என்பது வேறு விஷயம்.

மாலன் சொன்ன சம்பவம் 'மனதைத் தொடும் சம்பவத்தின் கதை'. ஆபத்துக்கு உதவுவது கிராமங்களின் மனப்பான்மையாகவும், நமக்கென்ன போச்சு என்பது நகரத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் என்று பிரசன்ன வர்ணிப்பது போல் சில நகரவாசிகள் சிந்திக்க மட்டுமே இருக்கிறார்கள். கிராமங்களிலும் இப்படி பட்டவர்கள் (ஊடகங்கள் புகுந்து சாயம் அடிப்பதற்கு முன்பில் இருந்தே) பரட்டை கிளப்பாமலா இருந்திருப்பார்கள்?!

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு