திங்கள், பிப்ரவரி 14, 2005

எஸ். என். நாகராஜன் - ஒரு சந்திப்பு

நன்றி: தமிழோவியம்.காம்

(1995 ஆண்டு காலச்சுவடு இதழ் எண் 10ல் இடம்பெற்ற எஸ்.என் நாகராஜன் நேர்காணல் 1993ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் இருந்து காந்தி குறித்த அவருடைய கருத்துக்கள்)

காந்தியினுடைய தர்மகர்த்தா ராஜ்யத்தை நீங்க பார்த்தீங்கன்னா அவர் மேல் சாதி ஆதிக்கத்தைத்தான் விரும்பராருன்னு தெரியும். காந்தியைப் பற்றி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு நூல் எழுதியிருக்காரு. Gandhi and his Ismன்னு சொல்லி. அதுல காந்தி சொன்னதை முக்கியமா போடறாரு.

'ஆங்கில ஏகாதிபத்தியம் அழிந்துவிட்டால் என்னுடைய கனவு எல்லாம் அழிந்துவிடும்'.
அப்ப ஏகாதிபத்தியம் ஒழியக்கூடாதுங்கறதுதான் அவரோட அபிப்பிராயம். அதே ஏகாதிபத்தியத்தை மாவோ எப்படிப் பார்த்தாரு? ஏகாதிபத்தியத்தை ஒழிச்சாத்தான் மக்கள் வாழ முடியுங்கறது அவருடைய நிலைப்பாடு. காந்தி தாழ்த்தப்பட்டவங்கள எப்படிப் பார்க்கறாரு? அடுத்தாப்ல உடலை எப்படிப் பார்க்கறாரு? பெண்களை எப்படிப் பார்க்கறாரு? இந்திய பண்பாட்டுல ஆன்மிகவாதம் சாதாரண மக்களையும் பெண்களையும் உடலையும் ஒரே தரத்தில்தான் வைக்கின்றது. அந்த மூணுமே மயக்கத்தை உருவாக்கக்கூடியதுங்கறதுதான் நம் ஆன்மீகத்தின் ஆதிக்கக் கருத்து. காந்தியினுடைய அணுகுமுறை துறவியினுடைய அணுகுமுறை. இறுதியில் துறவிக்கோலம் போலியாகத்தான் முடியும். இதற்கு காந்தியும் விதிவிலக்கல்ல. உடலை வருத்திக்கறாரு. ஆயுதத்தை எடுக்காதேங்கறாரு. சௌரி சௌராவிலே அவர் எடுத்த முடிவு அதுதான். ஆயுதத்தை எடுத்தா ஆங்கில பூர்ஷ்வா மட்டும் ஒழியமாட்டான். நம் பூர்ஷ்வாவும் ஒழிஞ்சுடுவான். காந்தி அதற்குத் தயாராக இல்லை. ஆக காந்தி ஒரு பூர்ஷ்வா வர்க்கத்தோட பிரதிநிதி. காந்திக்கு மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கணும்னு இல்லை. அவருக்கு மேல்தட்டு ஜாதியோட நல்ல ஆட்சி அமையணும்னுதான் விருப்பம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு