சிகரம் - எஸ்.பி.பி - வைரமுத்து
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத் தொட ஏணியில்லை
(வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை
(வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்
கால்கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்துசேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
(வண்ணம்)
க்ராமி படத்தை விடு ராசா. இந்தப்பாட்டை எட்டு வருசமாய்த் திருப்பிக் கேட்கத் தேடியிருக்கிறேன் என்றால், நம்புவியா?
சொன்னது… 2/14/2005 01:23:00 PM
இப்பொழுதாவது கிடைச்சுதா இல்லையா!?
244
சொன்னது… 2/14/2005 01:40:00 PM
நன்றி. நான் musicindiaonline இலே 2002 இலோ 2003 இலோ பிடித்துவிட்டேன். அனால், இங்கே நீங்கள் தந்த ram கோப்பு இணைப்பு மிகவசதி.
சொன்னது… 2/14/2005 02:14:00 PM
பாட்டுக்கு இசையும் எஸ்பிபி. இடையீடாய் வரும் இசையில் இஷ்டதிற்கு இழுத்து ரொம்பவே சொதப்பியிருப்பார். மற்றபடி நல்லபாடல்.
பெயரிலி, இதை தேடியது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் அப்படி தேடிய பாடல் 'தென்றலே நீ பேசு, உன் கண்களால் நீ பேசு! உன் மௌனம் என்னை வாட்டுது...' என்று பிபி ஸ்ரீனிவாஸ் இளசு இசையில் பாடியது. 8 வருடம் கழித்து உஸ்மான் ரோட்டில் வாங்கிய MP3இன் 139 பாடல் நடுவே எதேச்சையாய் சிக்கியது. அதற்கு பிறகு தூள்.காமில் பார்த்தேன். முடிந்தால் கேட்டு பார்க்கவும்.
சொன்னது… 2/14/2005 07:30:00 PM
"ஜீவன் வந்துசேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்" இல்லை.
"ஜீவன் வந்துசேரும்வரை
பிரேதம் போல் நான் கிடப்பேன்" என்று ஞாபகம்.
சொன்னது… 2/14/2005 07:32:00 PM
அப்பனே வசந்த், இணையம் இணைக்காத காலத்தில், சீனாவின் ஒரு மாநிலத்திலே தனியாக இருந்தால், இப்படியெல்லாம் பேசமாட்டீர்கள்.;-) பாட்டிலே ஒரு தனிப்பட்ட விருப்பு. அது பாடல் நல்லது என்பதற்காக அல்ல, ஆனால், அதை முதலிலே கேட்ட சந்தர்ப்பம் என்பதாக இருக்கலாம்.
இதைவிட நெடுங்காலம் தேடி இன்னும் அகப்படாத ஒரு பாடலும் உண்டு. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையிலே சௌந்தரராஜன் & சுசீலா(?) பாடும் "இது மாலைநேரத்து மயக்கம்; பூமாலை போல் ..." தமிழிலே எனக்குப் பிடித்த பாடலென்றால், இதைச் சொல்வேன். தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்.
சொன்னது… 2/14/2005 08:19:00 PM
அய்யோ பெயரிலி,
அவசரமாய் தட்டி ஏதோ வந்தது. இந்த பாடலை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன் (தேடத் தேவையில்லாமல் என் கேஸட்டிலேயே இருந்ததால்!) இசையமைப்புரீதியாய் சில பாடல்கள் பிரமாதமாய் இல்லாவிட்டால் கூட வசீகரிக்க வேறு காரணங்கள் இருக்க கூடும். இந்த பாடல் உங்களை 8 ஆண்டுகளுக்கு (சில லட்சம் திரைப்பட பாடளில்) தேட வைத்தப் காரணம் புரியாததால் எழுதினேன்.
ஒரு சந்தோஷ செய்தி 'இது மாலை நேரத்து மயக்கம்' என்னிடம் இருக்கிறது@!" MP3 வழங்கமுடியும். இருக்கும் சுமார் ஆயிரம் பாடல்களில் தேடி எடுத்து அனுப்ப சில நாட்கள் ஆகும். வசதியை சொல்லுங்கள்!
ஆனால் அதிலும் ஒரு சிக்கல். பாடல் TMS எல் ஆர் ஈஸ்வரி பாடியது என்று நினைக்கிறேன். அதுதான் என்னிடம் இருக்கிறது. வேறு 'மாலை நேர மயக்கத்தை குறிப்பிட்டிருந்தால்.. ஐயாம் ஸாரி!
சொன்னது… 2/14/2005 08:33:00 PM
/எல் ஆர் ஈஸ்வரி/
அதேஏஏஏதான்...
சௌந்தராஜன் ஈஸ்வரி கூடிப் பாடிய எல்லாப்பாடல்களுக்கும் ஒரு கிறக்கமுண்டு.
பாலாஜி, பின்னூட்டப்பெட்டியைத் திறக்கக் கடினமாக உள்ளது. என் இணைப்பிலே சிக்கலா அல்லது உங்கள் நிரலிலேதும் நெருடலா?
சொன்னது… 2/14/2005 09:03:00 PM
மாலை நேரத்து மயக்கம்... சுசீலா பாடினதா? எல்லாரீஸ்வரின்னா?
சொன்னது… 2/14/2005 09:34:00 PM
இகாரஸ் ஒழுங்கா எல்லாத்தையும் படிங்க ப்ளீஸ்!
பெயரிலி, இரண்டு வாரங்கள் கழித்து என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். MP3 மீன்னஞ்சலிலேயே அனுப்பமுடியும் என்று தோன்றுகிறது.
மேற்படி பாடலில் எனக்கு எல் ஆர் ஈஸ்வரி போல டிஎம்எஸ்ஸை பிடிக்கவில்லை. பொதுவாய் எம்ஜியார் சிவாஜி தவிர்த்து மற்றவர்களுக்கென இவர் தரும் குரல் பிடித்தமானதாக இல்லை. அதிலும் அண்ணன் சோகமாய் 'இது காலதேவனின் கலக்கம்..!!' என்று இருமியபடி வருவார். ஆனால் எல்ஆர்ஈஸுக்காக பாட்லை எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பது என் சொந்த ரசனை.
இரண்டு வாரங்கள் காத்திருக்கவும், நிலமை அப்படி, ப்ளீஸ்!
சொன்னது… 2/15/2005 12:42:00 AM
பெயரிலி: மறுமொழிப் பெட்டியை சரி செய்ய வேண்டும்!
'மாலை நேரத்து மயக்கம்' எல்லாம் சரிதான்.... காலையிலேயே மயங்க ஆரம்பிப்பவர்களுக்கு ஏதாவது பொருத்தமான பாட்டு இருந்தா சொல்லுங்க; எனக்கு அதுவும் வசதிதான் ;-)
சொன்னது… 2/15/2005 09:32:00 AM
அவசரத்துலே கொச கொச வென்று இருந்ததை முழுசாப் படிக்க முடியலை. ரோ.வ. சாரி. பின்னூட்டங்களை சீரமைத்த பாலாஜி.. நீர் வாழ்க... நாளைக்கு என்ன பாட்டு?
சொன்னது… 2/15/2005 10:30:00 AM
பொருத்தமான சரணம் யோசிச்சேன் ஐகாரஸ்... உடனடியா இதுதான் மாட்டிச்சு
"என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ!?"
சொன்னது… 2/15/2005 10:59:00 AM
கருத்துரையிடுக