தமிழ் தேசிய இயக்கம்
கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
'பாபி' பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)
அருமையாய் நடித்தனர்...
(என டயரியில் எழுதுகிறாராம்)
- ந. ஜெயபாஸ்கரன்
(அ.கு.: தலைப்பு இவர் கொடுத்தது அல்ல.)
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களில் இதை படித்திருக்கிறேன். முதல் வரிகள் ஞாபகம் இல்லை.
ஹிந்தி எழுத்துக்களை அழிக்க எதற்கு தமிழ் தேசியவாதியாய் இருக்கவேண்டும். இந்தி தெரியாதவராகவும்,(எரிச்சலுடனோ, ஜாலியாகவோ) ஒரு விண்ணப்பத்தை நிரப்பும் போது தேவையற்றதை அடிப்பதை போல கூட செய்யலாமே!
மேலும் தமிழ்தேசியவாதி ஹிந்திபடம் பார்பதை கிண்டலடிப்பதும் அசட்டுத்தனமாய் இருக்கிறது. ஹிந்தி படம் பார்பதில் என்ன பிரச்சனை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! அப்படி 'போலி'யாய் இருந்தால் அதில் என்ன தப்பு? தமிழ் தேசியம் பேசிய பாவத்தால் டிம்பிள் கால்களின் கவர்சியை தவறவிட வேண்டுமா?
சொன்னது… 2/16/2005 10:13:00 PM
படைப்பாளி எழுதாத தலைப்புக்கு ஏற்கெனவே இருக்கும் ஓர் இயக்கத்தின் பெயரைத் தலைப்பாய்ப் போட்டு கலந்து தந்திருப்பது எவ்வகையில் நியாயம். அவரே எழுதாத ஒன்றை நீங்கள் உங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள். மற்றும்படி தமிழ்த்தேசியவாதி இந்திப்படம் பார்ப்பதையோ இந்தி படிப்பதையோ எதிர்த்ததாய் நினைவிலில்லை. தமிழ்த் தேசிய இயக்கமாக தம்மைக்காட்டிக்கொண்டவர்கள் மீது தவறா அல்லது அதை விளங்கிக்கொண்டவர்கள் மீது தவறா என்பது புரியவில்லை.
நீங்களே தலைப்பிட்டு கவிதை தந்ததால் இதன்மீதான விமர்சனம் அனைத்தும் உங்களையே சாரும் என்ற வகையிலேயே இதை எழுதினேன்.
சொன்னது… 2/17/2005 02:54:00 AM
சுஜாதாவின்' மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்' என்னும் புத்தகத்தில் இருந்துதான் இந்தக் கவிதைய எடுத்தேன். தங்களின் கேள்விகளுக்கு நன்றி ரோஸாவசந்த் & வசந்தன்.
சொன்னது… 2/18/2005 04:43:00 AM
கருத்துரையிடுக