புதன், பிப்ரவரி 16, 2005

கேள்வி #1

உங்களின் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாகவும், ஐந்து வயதில் தவறிப் போய்விடும் என்று முன்னமேயே அறிந்திருந்தால், கருவைக் கலைத்து விடுவீர்களா? அப்படி கண்டிபிடிக்க இயலாமல், குழந்தை பிறந்துவிட்டால் வீட்டிலேயே கவனிப்பீர்களா அல்லது அவர்களுக்குரிய அரண் கிடைக்கும் இல்லத்தில் சேர்த்து விடுவீர்களா?

தோன்றிய ஊற்று: வினாத் தொகுப்பு - க்ரெகரி ஸ்டாக் - ஐ.எஸ்.பி.என் 0-89480-320-4

2 கருத்துகள்:

கருவைக் கலைப்பது என்பது எத்துணை கொடுமையானது என்பதை சில வருடங்களுக்கு முன்புதான்
சரியான முறையில் அறிந்து கொண்டேன். குழந்தை பிறந்த பின் அதை சரியான முறையில் வளர்க்காமல் விடுவதும் கொடுமைதான்.

ஆனால் ஐந்து வயதில் குழந்தை இறந்து விடும் என்று தெரிந்தால், உருவான குழந்தையை அழித்து விடாமல், பெற்றெடுத்து, அந்த ஐந்து வயது வரை அதை சந்தோசமாக வாழவைத்து, வழியனுப்பலாம்.

தெரியாமலே குழந்தை பிறந்து, பின் அது குறிப்பிட்ட வயதில் போய் விடப் போகிறது என்று தெரிந்தாலோ அல்லது வாழ்நாள் பூராவும் மூளைவளர்ச்சி குன்றியதாகவே இருக்கப் போகிறதென்றாலோ....
அதை அதற்குரிய முறையில் கவனிக்கக் கூடிய பொறுமையும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே வைத்துக் கவனிப்பது நல்லது. சும்மா வீட்டுக்குள்ளே கடனே என்று பிள்ளையை வைத்து விட்டு இருக்காமல் அந்தக் குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு தகுந்த.. ஆர்வமுள்ள எல்லா விடயங்களிலும் நாங்கள் அதனோடு சேர்ந்து பங்கு பற்ற வேண்டும். அந்த அன்பில் குழந்தை தன்னளவில் சந்தோசமாகவே இருக்கும்.

விரிவான பகிர்தலுக்கு என்னுடைய நன்றிகள்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு