புதன், பிப்ரவரி 16, 2005

தீராநதி -- ஜன. 2004

தபசி

எல்லாம் பார்த்துவிட்டேன்
என்று சொல்வதில்
எந்த அர்த்தமில்லை
எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்தான்
எல்லா அர்த்தமும்


புரிதலின் வழிமுறை - மனுஷ்யபுத்திரன்

அதை
அவ்வளவுதான்
புரிந்து கொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களை விடவும்
நீ அதைப் புரிந்து கொண்டதற்குஅசோகமித்திரன்

'தி குருசிபிள்' என்ற நாடகத்தில் தனுஷ்கோடிதான் முக்கிய ஆண் பாத்திரம். நாற்பது ஆண்டுகள் முன்பு அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் எழுதிய இந்த நாடகம் இன்று உலகின் பல நாடுகளின் நிலவரத்துக்குப் பொருந்தும். பொய்க்கருத்துகளை உலவ விட்டே வேண்டாதவரைச் சித்திரவதை செய்து அழிக்கவும் செய்வதுதான் நாடகத்தின் மையப் பொருள்.

ராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு