வெள்ளி, மார்ச் 04, 2005

ஓய்வு நிதி

thatstamil.com: ராஜிவ் கொலை: நளினி உள்ளிட்ட 4 பேர் மே மாதம் விடுதலை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரின் சிறைக் காவலும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

சிவராசன், தனு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் அகிலா உள்ளிட்ட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 38 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த தனு, சிவராசன் ஆகிய இருவரும் பெங்களூரில் கமாண்டோ படை சுற்றி வளைத்தபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 12 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து 26 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நளினி தனது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார்.

அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி, பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது 14 ஆண்டு ஆயுள் தண்டனை சிறைக் காவல் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே மே மாதத்தில் 4 பேரும் விடுதலை ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெண்டு அணாக்கள்:
'மஹாநதி', 'திருப்பாச்சி', 'ஜெண்டில்மேன்' போன்ற படங்களில் இருந்து தெரிந்த விஷயம்தான் என்றாலும், எந்தவிதமான கொடூரங்கள், குற்றங்கள், கொள்ளைகள் செய்தாலும் நான்கைந்து வருடங்களில் ரிலீஸ் ஆகி, திருடிய பணத்தோடு ஜம்மென்று செட்டிலாகி விடலாம். 401(கே), வைப்புநிதி, காப்பு பத்திரம், சேம நலன் திட்டம் என்றெல்லாம் அறுபது/எழுபது வயது வரை மாங்கு மாங்கென்று கஷ்டப் பட வேண்டாம்.

பல நேரங்களில் மரண தண்டனை பொருத்தமில்லாதது; காட்டுமிரண்டித்தனமானதுதான். ஆனால், சில நாடுகளில் உள்ளது போல் செய்யப்பட்ட நான்கு குற்றங்களுக்கு, ஆறேழு சட்டப்பிரிவின் படி, நான்கைந்து ஆயுள் தண்டனை (4*14 ==> 56; நன்னடத்தையில் பாதியாகக் குறைந்தாலும் இருபத்தெட்டு வருடங்கள்?) விதிக்கும்வரை, இந்தியாவில் இன்னும் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப் பட வேண்டும்.

போன வாரம் சன் டிவியில் கேட்ட செய்திகளில் கூட பல கோடிகளை வங்கிகளில் லவுட்டிய திருடனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டாலும், அவையிரண்டும் ஒரே சமயத்தில் அனுபவிக்குமாறு (?!) தீர்ப்பளித்திருந்தார்.

'மஹாநதி' பாஷையில் சொல்வதானால் ஏழு வருடங்களில் அவன் ரிலீஸ் ஆகி விடுவான். இன்னும் ஏழு வருடம் (ஜெயிலில்) வேலை செய்தால் போதும். பென்ஷன் ரெடி!

2 கருத்துகள்:

இந்த ஏக காலத்திலனுபவிப்பது என்ற எண்ணம் விந்தையாகவே உள்ளது. ஃபிரான்சில் "reclusion criminelle a perpetuite" என்று ஒரு தண்டனை உண்டு. அதாவது அவ்வகைக் குற்றவாளி இறந்த பிறகுதான் வெளி வருவான். அமெரிக்காவில் 999 வருடச் சிறை நிறையப் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. இங்கும் பிரேமானந்தாவுக்கு இரட்டை (அல்லது மூன்று) ஆயுள் தன்டனை கொடுக்கப் பட்டுள்ளது. அதை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பபட்டது.
அது சரி தூக்கு தண்டனை பெற்ற மற்ற மூவருக்கு எப்போது அதை நிறைவேற்றுவார்களாம்? இதே மாதிரி மஃப்தூல் பட் என்பவனுக்கு தூக்கை நிறைவேற்றக் காலதாமதம் செய்ததில், மாத்ரே என்பவரைக் கடத்தி பேரம் படியாமல் அவர் கொலை செய்யப்பட, பிறகு குற்றவாளிதூக்கிலிடப் பட்டான் அதை முதலிலேயே செய்துத் க்டொலைக்காமல் போனதில் இன்னொரு உயிர் பலியானதுதான் மிச்சம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

ஏக காலத்திலனுபவிப்பது என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வலையில் வக்கீல் யாராவது பதிய ஆரம்பித்தால் வசதியாக இருக்கும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு