வெள்ளி, மார்ச் 04, 2005

லவ்வர் பாய்

எங்கெங்கு காணினும் வில்லனடா: காதலைக் காலி பண்ண ஒரு கூட்டமே அலைகிறது. நிஜத்தில் ரகுவரன்கள், நாசர்கள், பிரகாஷ் ராஜ்களெல்லாம் பல ரூபங்களில் நம் அருகிலேயே உலவிக்கொண்டு இருக்கலாம். அவர்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்தால் தான் காதல் கத்திரிக்காயைச் செழிப்பாக வளர்க்க முடியும். வில்லன்களைக் கண்டுபிடிக்க இதோ சில ‘கில்லி' டிப்ஸ்...

1. அதிரடி ஆர்வக் கோளாறு நண்பர்கள்... உங்கள் காதலை வைத்து ஏதாவது அட்வென்ச்சர் பண்ணி ஹீரோவாக ஆசைப்படும் விபரீத வில்லன்கள்.

2.‘நாம காய்ஞ்சு கெடக்கும்போது, ஒரு லட்டு ஃபிகரை தேத்திட்டானே!'எனஅடிவயிற்றில் அல்சருடன் அலைகிற அனகோண்டா டைப் நண்பர்கள்.

3. எதிர் வீட்டு அங்கிள்கள்! ஒரு காலத்தில் கெட்ட ஆட்டம் போட்டு அடங்கியிருக்கும் இவருக்கு நம்முடைய நடவடிக்கைகளை வாட்ச் பண்ணுவதே சுகமான பொழுதுபோக்கு.

4. காதல் தேவதூதர்கள்... வேறு யார்? தெருப் பொடியன்கள்தான்.

இவர்கள் தவிர, லேட்டானால் புதர் இடுக்கில் எட்டிப் பார்த்து விரட்டும் பார்க் வாட்ச்மேன், காம்பஸ் கடலையை வீட்டுக்குத் தெரியப்படுத்தும் வாத்தியார்ஸ்... என எங்கெங்கு திரும்பினாலும் காதல் வில்லன்கள்தான்!கமல்ஹாசன்: "கமல் & ரஜினி படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகுது..!"

"எங்கள் இருவரின் படங்களும் ரிலீஸாகிறபோது இருதரப்பு ரசிகர்களுக்கும் திருவிழாதான். ஆனால், எங்களுக்குள் மட்டுமில்ல, எங்களின் ரசிகர்களிடையே கூட கசப்பு உணர்வு இருக்காது. நானும் ரஜினியும் வெகுஜாக்கிரதையா எங்களுக்குள் அப்படி க்ளாஷ் எதுவும் வராமப் பார்த்துக்கிட்டோம். இந்தத் தலைமுறை நடிகர்களிடம் அது கொஞ்சம் மாறியிருக்குனு நினைக்கிறேன். சினிமாவிலேயே திட்டிக்கிறாங்களே!"
....

"பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்... இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!

என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!"Friends Of the Disabled: உடல் ஊனத்தையும் மீறி சாதனை புரிந்தவர்களைத் தேசிய அளவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் ‘கெவின்கேர் எபிலிட்டி' விழாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்தார்.

13 வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடக்க வேண்டிய நிலையிலும், ‘Friends Of the Disabled' அமைப்பைத் தொடங்கி, நூற்றுக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிற ராஜிந்தர் ஜோகர், தவறான மருந்து தரப்பட்டதால், பார்வை இழந்த நிலையிலும் சி.ஏ. படிப்பை முடித்த, நாட்டின் ஒரே பெண்மணியான ரஜனி கோபால கிருஷ்ணா, ‘சமர்த்யா' அமைப்பின் மூலம் உடல் ஊனமுற்றவர்களின் நலனுக்காகப் பல விஷயங்களை உற்சாகமாகச் செய்கிற உதாரணத் தம்பதியான அஞ்சலி - சஞ்சீவ் ஜோடி என இந்த வருடச் சாதனை யாளர்கள் மூவர்.

‘‘வெளிநாட்டுச் சூழ்நிலையும் இந்தியத்தனமும் இணைந்த ‘க்ராஸ் & ஓவர்' படங்களின் சீஸன் இது... அந்த வகையில் பாப் பாடகிகள் மடோனா, ஜானட், ஜெனிஃபர் லோபஸ், பிரிட்னி ஸ்பியர்ஸ் மாதிரி யாரையாவது இந்திய சினிமாவில் நீங்க பாட வைக்கலாமே?"

‘‘ஐடியா நல்லா இருக்கு! ஆனா, தமிழ் தெரியாதவங்களை அதிகமாகப் பாட வைப்பதாக ஏற்கெனவே என் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இன்னும் இப்படியெல்லாம் செய்தேன்னா, ‘இந்திய மொழியே தெரியாதவங் களைப் பாட வைக் கிறேன்'னு தேசிய அளவில் நல்ல பேர்(?!) கிடைச்சுடும்ல!"

நன்றி: ஆனந்த விகடன்.காம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு