புதன், மார்ச் 23, 2005

விகடன் கேள்வி

ஹாய் மதன்:

பி.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

எது சாமர்த்தியம்? எது புத்திசாலித்தனம்? எது சாணக்கியத்தனம்?


எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இருப்பது சாமர்த்தியம். சாமர்த்தியமான தலைவரோடு கூட்டுச் சேருவது புத்திசாலித்தனம். பிறகு, அந்தத் தலைவரைக் கவிழ்த்துவிட்டுத் தானே தலைவராவது சாணக்கியத்தனம்!

my cents: Normal question; Tongue twisted answerடி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஜெமினி கணேசன், கிளிண்டன், சார்லஸ் -- உண்மையான காதல் மன்னன் யார்?


'காதல் மன்னன் யார்' என்று எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள்? நிறைய பேரைக் காதலிப்பவரா? அல்லது, ஒரே ஒருத்தியைத் தீவிரமாகக் காதலித்து, அவளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பவரா?

கிளிண்டன் அபரிமிதமான செக்ஸ் உணர்வு கொண்டவர். அவ்வளவே! ஜெமினி கணேசன் நெகிழ்ச்சியான இதயம் படைத்தவர். சில திருமணங்களும் செய்து கொண்டவர். ஆனால், காதலுக்காக எந்தத் தியாகமும் பண்ணத் தயாராக இருப்பாரா?

சார்லஸ், டயானாவை ராஜ காரியம் கருதித் திருமணம் செய்து கொண்டாலும், 35 வருஷங்களாக ஒரே பெண்ணை, அதுவும் ஐம்பது வயதைக் கடந்தவரை விடாமல் காதலிக்கிறார். நிஜமாகவே அவர் மன்னரும்கூட!

my cents: silly question; senseless answer.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு