புதன், மார்ச் 23, 2005

மஸ்தானா... யெஸ்தானா?

மோடியின் விசா நிராகரிப்பை சமாளிக்க பத்து வழிகள்

1. அமெரிக்க ஜெயில்களில் சிறைவாசம் இருக்கும் எவரையாவது மணமுடித்து கே-3 விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

2. ப்ரூனே, ஸ்லேவேனியா போன்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்று விசா கைகழுவுதல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையலாம்.

3. வலைப்பதிவு ஆரம்பித்து கனடாவின் ப்ளாக்கர் படுத்தப்பட்டது போல் தன்னுடைய சோகங்களையும் பகிரலாம். (உதவி: Nerve Endings Firing Away)

4. வாஷிங்டன் போஸ்ட் முதல் வாஷ் செய்யாத வலைப்பதிவு வரை இடம்பிடிக்கத்தான் விசா கிடைக்காததாக மழுப்பலாம்.

5. விழியம் மூலம் சந்திப்பு நடத்துவதை பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக சொல்லலாம்.

6. 9/11-ற்கு பிறகு பின் லாடென் உறவினர்களை பறக்க அனுமதித்தது போல், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு மட்டும்தான் ஜார்ஜ் புஷ் அவசர அவசரமாக உதவுவார். அமெரிக்காவினுள் நுழைவதற்கு மதச் சுதந்திர சட்டம் கொண்டு தடுப்பதாக புலம்பலாம்.

7. சிறைக்குள்ளிருந்தே குற்றங்கள் அரங்கேறும் நவீன உலகத்தில், தனக்கு விசா மறுக்கப்பட்டதை முரண்நகையாகக் கருதலாம்.

8. ஏப்ரல் ஒன்றாம் தேதி நினைவாஞ்சலிக்கு பத்து நாள் இருக்கும்போதே சொற்பாழிவாற்ற அழைக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டதாக நினைக்கலாம்.

9. சிபிஐ-யை மிரட்ட முடிந்தது போல் தூதரகத்திடம் உதார் செல்லுபடியாக அமெரிக்காவின் கன்ஸலேட் ஜெனரலை மாற்றப் போராடலாம். (உதவி: Jivha - the Tongue)

10. மீசை தாடியில் மண் ஒட்டாமல் சுவதேஷி கோஷத்தை தூசி தட்டலாம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு