செவ்வாய், ஏப்ரல் 19, 2005

அமுதசுரபி - ஏப். 05

Sify.com :: Amudha Surabi

* பட்ஜெட் 2005
உண்மைதான், இந்த பட்ஜெட் நல்ல பட்ஜெட்தான். புதிய திட்டங்கள் பல கொண்டுவந்துள்ளார்கள். இந்தத் திட்டங் களால் யாருக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதைப் பற்றிய கவனம் போதுமான அளவு யாருக்கும் இருப்பதில்லை. இந்தப் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகப்படியாகாமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ஆண்டு வரவு செலவுகளில் பற்றாக்குறை விகிதம் ஓரளவு குறைந்திருப்பது ஒரு பெரிய சாதனை. வரும் ஆண்டில் அது மேலும் கணிசமாகக் குறையுமா என்பதுதான் சந்தேகம்.

* இராணி இரஸோமணி
பச்சைக் கிளிக்குப் பல்இல்லை
பெட்டைக் கோழிக்குக் கிரீடமில்லை
அத்தி மரத்துக்குப் பூ இல்லை
நதி பின் செல்வதில்லை
பின்னே செல்வதில்லை (நாம்) கோஷ்டியாக
சிவன் விஷமருந்தி தொண்டையில் அடக்கி
பார்வதி தியானத்திலமர்ந்து சிவா கண்களைத் திறக்க
வழி விடு, வழி விடு, மங்களகரமான அன்னியர்களே
மலடிகூட குழந்தை பெறுவாள் சிவன் விரும்பினால்

* கவிதைகள்
இதுதான் சாலை கண்மணியே! - நீ
எங்கே செல்ல விரும்புகிறாய்?
இதன்மேல் எத்தனை வாகனங்கள்! - நீ
எதிலே செல்ல விரும்புகிறாய்?
முதலில் செல்வது முக்கியமா?- நீ
முழுதாய்ச் செல்வது முக்கியமா?

* எத்தனை கோடி வளங்கள்!!!
நாம் மரபுசார் வளங்களை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தக் கற்றுக்கொள் வதுடன் உடனடியாக மாற்று எரிசக்தி வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்து வதன் மூலம் வருங்காலத்தினை வளமானதாக ஆக்கிக்கொள்ளலாம். அத்தகைய எரிசக்தி வளங்கள் பின்வருமாறு:-

1.சூரிய ஒளிச் சக்தியும் வெப்ப சக்தியும்
2.காற்றுச் சக்தி
3.உயிரியல், தாவர உயிரியல், கழிவுப் பொருள்களின் சக்தி
4.பிற மாற்று எரிசக்தி வளங்கள்

* அனைத்துலக நகரம் ஆரோவில்லில் மாற்று எரிசக்தி ஆய்வுகள்
இன்றைய நாளில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 1800 ஆரோவில்வாசிகள் பன்னாட்டு ஆரோவில் மையங்களுடன் இணைந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 5000 பணியாளர்களின் உழைப்பு உதவியுடன் 50,000 பேர் வசிக்கத் தகுந்த பசுமை வளையத்துடன் நவீன கட்டடங்களைக் கொண்ட இந்த ஆன்மீக நகரைத் திட்ட மிட்டு அமைத்து வருகின்றனர்.

* இங்கு கனவு காண்பது கற்றுத் தரப்படும்... :: வெ இறையன்பு
நலவாழ்வு குறித்த பிரகடனத்தில் நம் மண் சார்ந்த மூலிகைகள் எப்படி மருத்து வத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும், உலக வர்த்தகத்தில் மூலிகை மருத்துவத்தில் சீனம் பங்கு பெறுமளவு நாம் பங்களிப்புச் செய்யாமலிருக்கும் குறைபாடும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சோற்றுக் கற்றாழைக்கு இவ்வளவு மருத்துவ குணமா என்று வியக்க வைக்கும் உதாரணமொன்று மென்மை யாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

* கவிதாயினி குட்டி ரேவதி
படைப்பாளியின் சமையல் அறையில் மொழி முதலில் ஒன்றும் தெரியாததுபோல் அஞ்சறைப் பெட்டிகளுக்குள் அமர்ந்திருக்கும். ஒரே மாதிரியான உணவுகளை நாள்தோறும் சமைக்கும்போது மொழி, தன் சுவையை இழந்துகொண்டே வருகிறது. புதுமையான சமையலில் மொழி, இதுவரை காட்டாத சுவைகளை வெளிப்படுத்திவிடும். புதுவிதக் கலவைகளை உண்டாக்கும்போது அந்த உணவால் ஊரே மணக்கும்.

நல்ல உணவானது, சூடு, சுவை, மணம், ஆற்றல் ஆகிய நான்கையும் தருவதாய் இருக்கும். நல்ல படைப்பாளி ஒரே மாதிரி சமைக்கமாட்டார். வேதியியல் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைகளில் ஈடுபடுபவரைப் போல் அவரிடம் ஒரு தொடர்ந்த ஆய்வு இருக்கும்.

* நூல் நயம்
பங்குச் சந்தையில் லாபம் : ப. ந. ஜெயராம்
குரு தஷிணாமூர்த்தி சுவாமிகள் அருளுரை : கி. நாகராசன்
அருளாளர்கள் : கவிக்கோ ஞானச்செல்வன்
எனது கனவில் இந்தியா : அ. முகமது இஸ்மாயில்
இந்தியக் குடும்பங்களில் பெருகும் பிரச்சனைகள் : கடமை யள் அன்பு

* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு : நூல் நயம்
பல்வேறு மொழிகளில் கூறப்பட்டாலும் இந்திய இலக்கியம் என்பது ஒன்றுதான் என்ற கருத்துக்கு விளக்கவுரையாக வந்திருப்பவை தாம் எழுத்தாளர் சிவசங்கரியின் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' வரிசைத் தொகுப்புகள். ஏற்கெனவே வெளியான இரண்டு தொகுப்புகளைத் தொடர்ந்து மேற்குத் திசை மாநிலங்களான கோவா, மகாராஷ்டிரம், குஜராத், சிந்து ஆகியவற்றின் இலக்கிய முயற்சிகளைச் சிவசங்கரி தமது மூன்றாவதான இந்தத் தொகுப்பில் திரட்டித் தந்திருக்கிறார்.

* படிக்கக் கிடைத்தவை : நூல் நயம் :: வெங்கட் சாமிநாதன்
விக்கிரமாதித்யன் நிறைய எழுதுகிறவர். நீண்ட காலமாக எழுதி வருகிறவர். அவர் கவிதைகள் வெளிவராத பத்திரிகைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் உடன் பதில் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு சுவாரஸ்யமான கவிஞர், மனிதர். பொஹீமியன் என்று சொல்வார்கள், ஆங்கிலத்தில். தன் இச்சையாக தன் வழி செல்பவர். சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் அவருக்கு உவப்பதில்லை. கவிஞராகவும் அவர் ஒரு பொஹீமியன் தான். அவர் தன் கவிதைகளில் சொல்ல எடுத்துக் கொள்ளும் விஷயங்களும் சரி, கவிதை மொழியும் சரி, அவருடையதேயானவை. அம்மொழியும் வேண்டும் நமக்கு. அவ்விஷயங்களும் வேண்டும் நமக்கு.

* நாட்டின் மின் தேவைக்கு அணுவாற்றல்
நம் நாட்டின் முதல் அணுமின் நிலையம் மகாராஷ்டிர மாநிலத்தில் தாராபூர் என்னு மிடத்தில் அமெரிக்க உதவியுடன் 1964இல் நிறுவப்பட்டது. இரண்டாவதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ராவத்பாட்டா என்னுமிடத்தில் கனடா நாட்டு உதவியுடன் மற்றொரு அணுமின் நிலையம் நிறுவப்பட்டது. அதன் பிறகு, இதுபோன்ற அணுமின் நிலையங்கள் "நமக்கு நாமே' என்கிற அடிப்படையில் அயல்நாட்டு உதவியின்றி நம் நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கனநீர் உலைகள் ஆகும். மொத்தம் 14 அணு உலைகள் தற்போது நம்நாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றன.

* தெய்வீக உடல்
ஓர் இறையுடலிலே ஓர் இறைவாழ்க்கை. இதுதான் நாம் எதிர்நோக்கியிருக்கும் இலட்சியத்தினுடைய வழிமுறை. ஆனால் இந்த இறையுடல் என்பது என்ன? இவ்வுடலின் பண்பு எத்தகையதாக இருக்கும்? இதன் கட்டமைப்பு, செயல்பாட்டு முறைகள் எப்படி இருக்கும்? தற்போது நமக்குள்ள பல குறைபாடுகளுடன் கூடிய, குறுகிய எல்லைக்கு உட்பட்ட உடலிலிருந்து அந்தப் புதிய, பூரண உடலை எப்படி வேறுபடுத்திக் காண முடியும்? இந்த மண்ணுலகில், மண்ணியலையே அடிப்படையாகக் கொண்டு இயங்கப் போகும் அந்த உடல் வாழ்க்கையின் நடைமுறை என்னவாக இருக்கும்?

* வெப்பக் கூடு கருவாடு
நெய்த்தலை (நெத்தலி), மிகச் சிறிய மீன்; சாலை, சிறிய மீன்; இவற்றை அப்படியே உப்பில் முதலில் ஊறவைக்கலாம். பின்னர் வெயிலில் காயவிடலாம். சுறா, பேய்ச்சாலை போன்ற பெரிய மீன் வகைகளின் உடலை அறுத்துப் பிளந்து, தசைப் பகுதியைக் கீறி உப் பிடலாம், பின்னர் காயவைக்கலாம். உப்பூறல் உடலின் நீர்ப் பங்கையும் வேதி மாற்றத்தையும் குறைக்கும், கிருமிகளையும் அறுகாலிகளையும் அணுகவிடா. காயவைத்தலால் உடலின் நீர்ப் பங்கு கணிசமாகக் குறையும். காய்ந்த மீனில் உணவுச் சத்துக் கெடுவது மிகக் குறையும். மீன் இறந்து சில ஆண்டுகள் வரை அதன் உணவுச் சத்தைக் கருவாடாகப் பேணலாம்.

* சவாலே சமாளி
கூட்டம் நடந்துகொண்டிருக்கையில், ஆணையாளரும் பரபரப்புடன் வந்து சேர்ந்தார். அதே சமயத்தில், எங்கள் எல்லோரையும் வம்பு செய்து வேடிக்கை பார்த்த சுற்றறிக் கையும் பொள்ளாச்சி தாலுகா அலுவலகக் கடைநிலை ஊழியர் மூலம் வந்தது. அதைக் கூட்டத்திலிருந்த துணை ஆட்சியருக்குத் தெரிவித்தோம்.

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போயிற்று!

* பணம் - வாமன கதை :: ரேவதி பாலு
வேலை செய்யும்போது பக்கத்திலேயே நின்று திருத்தங்கள் சொன்ன அய்யாவும் அம்மாவும், வேலை முடிந்து கூலிக்காக நின்ற போது, "நாளைக்கு வாயேம்ப்பா! வாங்கிக் கிட்டுப் போயிடலாம்!' என்று சர்வ சாதாரண மாகச் சொன்னபோது, நாள் முழுவதும் வேலை செய்த உடல் அசதியோடு மனவலியும் சேர்ந்துகொண்டது செல்வராஜூக்கு.

* தேவன் வருவாரா? :: ஜெயகாந்தன்
"அதோ நெலாவிலே பாரேன்.... அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்.... ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்... அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு...

* தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன் தடம் :: திருப்பூர் கிருஷ்ணன்
"கடந்த கால எழுத்தாளர்களில் நீங்கள் ஒரே ஒருவரைத்தான் சொல்ல வேண்டும் என்றால் யாரைச் சொல்வீர்கள்?' என்று கேட்டேன். புதுமைப்பித்தன் பெயரைச் சொல்வார் எனக் காத்திருந்தேன். ஆனால் யோசித்துவிட்டு "அழகிரிசாமி' என முணு முணுத்தார் அவர். "இப்போது இருப்பவர்களில் ஒருவரை மட்டும் சொல்லவேண்டுமானால்?' எனக் கேட்டேன். யோசிக்காமல் தயக்கமின்றி "ஜெயகாந்தன்' என்று தெரிவித்தார்.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் :: ஜெ ஜெயலலிதா
இந்த நேரத்தில், கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் சாண எரிவாயுக் கலன்கள் பிற வாயுக் கலன்களை அமைத்தும்; விவசாயப் பெருமக்கள் சூரிய சக்தி பம்புகளை விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தியும்; தொழிற் சாலைகள், தாவர எரிவாயுக் கலன்களை, சூரிய வெப்பக் காற்று மற்றும் சுடுநீர்க் கலன்களை அமைத்தும்; மின்சாரத்தைச் சேமித்துப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

* வெற்றித் திருமகள் : சுதாராணி ரகுபதி
பெங்களூரில் பிறந்தவர்; மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்திலும் சமூகவியலிலும் பட்டம் பெற்றவர்; கே.பி. கிட்டப்பா பிள்ளை, யு.எஸ். கிருஷ்ணா ராவ், மயிலாப்பூர் கெüரி அம்மாள் ஆகியோரிடம் பரதக் கலையைப் பயின்றவர்; வயலின் மேதை செüடையா, வாகேயகாரர் வித்து வான் மதுரை என். கிருஷ்ணன் ஆகியோரிடம் இசைப் பயின்றவர்; சிறு வயதிலேயே பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல பிரமுகர்கள் முன் பரதநாட்டியத்தை மேடையேற்றியவர்.

* புதிய திசையில் பயணிப்போம்!
காற்றாலை மின்சாரம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம், கடல் அலை மின்சாரம், சாண எரிவாயுக் கலன்கள், அணுவைப் பிளந்து மின்சாரம், ஹைட்ரஜன் சக்தி... என எண்ணற்ற முறைகளில் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். தாவரக் கழிவுகள், கரும்புச் சக்கை, நகரக் கழிவு, தொழிற்சாலைக் கழிவு, ஜவ்வரிசி - மரவள்ளிக் கிழங்கின் கழிவு, கோழி எச்சம் ஆகியவற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடிகிறது.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு