செவ்வாய், ஏப்ரல் 19, 2005

இயக்குநர் செல்வராகவன்

Ananadha Vikadan :: என் குடும்பத்தினர் யாரையும் என்னால் நேராகப் பார்த்துப் பேச முடியாது. யார் என்ன பேசினாலும், நான் தண்டமாக இருக்கிறேன் என்று குத்திக்காட்டுவது போல் இருந்தது! அப்போதெல்லாம், கடவுள் என் முன்னால் வந்து எனக்கு எதிரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி பேசிவிட்டுப் போவார்.

என் அப்பா கேட்டவுடன், ‘என் கதையைத்தான் முதலில் எடுப்பேன்!' என்று அடம் பிடிக்காமல், ‘சரி' என்று சொன்ன அந்த ஒரு சிறிய பதில்தான், என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. எவ்வளவு சிறிய வாய்ப்பிருந்தாலும், அதில் முன்னேற்றத்துக்கு ஒரு துளி தென்பட்டாலும் சம்மதித்து, சவாலை ஏற்பது உத்தமம்!

இன்றைய இளைஞர்களிடம் எனக்குப் புரியாதது இதுதான். எத்தனையோ சின்னச் சின்ன நல்ல வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டுவிட்டு, வாழ்க்கையெல்லாம் புலம்பியபடி திரியும் எத்தனையோ இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். காற்றிலே ஒரு நூல் பறந்து வந்தாலும், அதைப் பிடித்து முன்னுக்கு வர மாட்டேன் என்று வறட்டுக் கௌரவம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை... 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்று சொல்லி வைத்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை!

இப்படி அட்வைஸ் சொல்கிற அளவுக்கு நான் பெரியவன் இல்லை. அது எனக்கும் தெளிவாகத் தெரியும். ஆனாலும் காதல், கனவு, வாழ்க்கை பற்றிய என் வாழ்க்கைப் பாடங்கள் உங்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற ஆசையில்தான் எழுதினேன்... ‘கனா காணும் காலங்கள்!'

2 கருத்துகள்:

what a role model for youth.he is a director whose first film is a soft-porno film.only vikatan will give him so much space.shame

செல்வராகவன் என்னளவில் உண்மையிலேயே வித்தியாசமான இயக்குநர்தான். எல்லோரும் துள்ளுவதோ இளமை பற்றி பேசியே காலத்தினை கழிப்பார்கள். அது சாப்ட்-போர்னோ என்பது சரிதான். ஆனால், கோழி கூவுது, அலைகள் ஒய்வதில்லை,வைகாசி பொறந்தாச்சுக்கு பிறகு, தமிழில் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து வந்த முக்கியமான படம். He directs the movie with a different color, he is one among the handful in the future of tamilcinema.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு