செவ்வாய், ஏப்ரல் 19, 2005

புள்ளி

ஜெயபாஸ்கரன் :: Aaraamthinai - ilakkiyam/kavithai

எதற்கெடுத்தாலும்
''புள்ளி'வைத்துப்
பழகி விட்டார்கள்
மனிதர்கள்.

பிடிக்காத பெயர்கள் மீது
'புள்ளி' வைத்து ஒதுக்குவதே
வேலையாகிவிட்டது
பல பெரும் 'புள்ளி'களுக்கு.

பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பதை விடவும்
அதற்கொரு முற்றுப் 'புள்ளி'
வைப்பதில்தான்
ஆர்வமாக இருக்கிறார்கள்
எல்லோரும்.

தற்காலிகமான
முற்றுப் 'புள்ளி' யைத்
தகர்த்துத் தாண்டுவது
ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை
பிரச்சனைகளுக்கு.

கரும்புள்ளி
செம்புள்ளி'யை தவிர்த்துவிட்டு
'கரும்புள்ளி'யை மட்டும்
குத்துகிறார்கள்
தேர்தல் தோறும்
வாக்காளர்களுக்கு.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு