திங்கள், ஏப்ரல் 11, 2005

கொழுப்பாச்சி - 2

ஒரிஜினல் கொழுப்பாச்சி - 1

கொசுறு :: அல்வா தலைநகரம்

திமுக தொண்டர் படை:
வாரே வாரே
வாராரே
அட தள்ளு

செல்வி ஜெயலலிதா:
வாரே வாரே
வாராரே
ஒத்துடா

ஜெயகாந்தன் தொண்டர் படை:
வாரே வாரே
வாராரே
அடங்குடா

ஜெயகாந்தன்:
நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
இல்ல இல்ல

ரத்தத்தின் ரத்தங்கள்:
நீ எந்த உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
இல்ல இல்ல

தொப்புள் கொடி உறவா
இல்ல இல்ல

அல்ல
கட்சிக்கொடி உறவா
இல்ல இல்ல

ஜெயகாந்தன்:
ஹே
மேட்டுக்குடி உறவா
இல்ல இல்ல

அட
கள்ளு கட உறவா
இல்லவே இல்ல

கலைஞர் கருணாநிதி:
உன்ன யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் தம்பிடா
---------------

ஜெயகாந்தன்:
சாமி வரம் தந்திட்டா
கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா
நான் அய்யனாரு பக்தண்டா

செல்வி ஜெயலலிதா:
மண்ண நம்பி வேரு
விண்ண நம்பி ஆறு
என்ன நம்பி யாரும்
கெட்டதில்ல பாரு

சோனியா காந்தி:
உனக்கொரு பேரு
எனக்கொரு பேரு
ஒண்ணு சேர்த்து பாரு
இந்தியன்னு பேரு

ஜெயேந்திரர்:
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே
---------------

ரஜினிகாந்த்:
அம்மை அப்பன் தானடா
ஓ...
நம்மையாளும் சாமிடா

சசிகலா:
கருவறை தோழிடா
ஓ...
நம்ம உயிர் நாடிடா

கமல்ஹாஸன்:
கண்ணப் பொத்தி வாழு
காதப் பொத்தி வாழு
வாயப் பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு
ஓ...

ஜெயகாந்தன்:
ஆத்திகம்தான் மூச்சு
சத்தியம்தான் பேச்சு
ஆசை எல்லாம் போச்சு
நம்ம புத்த கொடி ஏத்து
ஓ...

விஜயேந்திரர்:
அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

1 கருத்துகள்:

நல்லாவே ரிவீட்டு வைக்கிறீங்க. மிக ரசித்துப் படித்தேன்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு