செவ்வாய், ஏப்ரல் 12, 2005

ரயில்வே தேர்வில் கேள்வி

Rajini figure in railways exam question paper ::

ரயில்வேயில் மூத்த விளம்பர ஆய்வாளர் (Senior publicity officer) பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வு குறித்த thatstamil.com செய்தி. ஒரே ஒரு ஆய்வாளர் பதவிக்கு நாடு தழுவிய அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 170 பேர் இத்தேர்வை எழுதினர். சென்னை சாலிக்கிராமம் கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளியில் இத்தேர்வு நடந்தது.

எம்.ஏ. ஜர்னலிசம் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்வெழுத தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி:

ரஜினி நடித்து விரைவில் வெளியாக உள்ள படத்தின் பெயர் என்ன?

1. ஜக்குபாய்

2. சந்திரமுகி

3. ஜி

4. மூன்றுமே அல்ல

7 கருத்துகள்:

அதெல்லாம் சரி பாபா, ஒத்தியாச்சு ஒட்டியாச்சு, நீங்க என்ன நினைகிறீங்க, அதையும் சொன்னாத்தானே சுவாரசியம்..

கருத்து சொல்வதற்கு ஆயிரம் பெயர் இருப்பாங்க காசி ;-)) இருந்தாலும் ஆசையா கேக்கறீரு...

விளம்பர ஆய்வாளர் தேர்வுக்கு இவ்வளவு கஷ்டமாக கேள்வி கேட்டிருக்கக் கூடாது. நானாக இருந்தால் இதற்கு பதிலாக இந்த மாதிரி ஏதாவது வினவியிருப்பேன்:

மார்க்கெட் இழந்த திரைப்பட நட்சத்திரத்தின் மதிப்பைக் கூட்டுவது எப்படி?

1. மதிப்பு கூட்டு வரியை நிதியமைச்சரைக் கொண்டு அமல்படுத்துவது.

2. போலி நடிகையை வைத்து விழியம் தயாரித்து உலவ விடுவது.

3. முண்ணணி நட்சத்திரத்துடன் கிசுகிசு பரப்புவது.

4. முண்ணணி சாமியாருடன் கிசுகிசு பரப்புவது.

5. பூச்சி மருந்து உட்கொள்வது.

6. மேற்சொன்ன அனைத்தும்.

1971-ல் நான் கேள்விப்பட்ட இன்னொருக் கடினமானக் கேள்வி: M:G = 2:3, G:R = 9:13, M:G:R-ன் மதிப்பு என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. I am unable to comment under blogger name.

இது குழப்பக் கூடிய கேள்விதான். M:6, R:13 என்பதால், N,O,P,Q ஆகிய இடைப்பட்ட நான்கு எழுத்துக்களுக்கு 7 கூடிவிடுகிறதே என்றெல்லாம் கூட குழம்பலாம் :O

I can't participate in this game :(

But just a correction:

It's Publicity Inspector - not "Officer" - these terms vary significantly in Railway parlance.

செய்திதாள்களில் சந்திரமுகி பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு அதிகாரியாக் வருபவர் செய்திதாள்களை படித்திருக்க வேண்டும். அந்த அர்த்ததில் தான் இப்படி கேள்வி கேட்கப்பட்டது.
இதே இந்தி நடிகரின் படத்தை பற்றி கேட்ட்ருந்தால் சூப்பர் நு சொல்லியிருப்பீங்க

>>இந்தி நடிகரின் படத்தை பற்றி கேட்ட்ருந்தால் சூப்பர் நு---

கேள்வி சூப்பரா அல்லது இல்லையா என்பதை விட, இந்த மாதிரி சுளுவாகக் கொடுத்து தேர்வு எழுதுவோரின் பொது அறிவை அவமானப்படுத்த வேண்டுமா என்பதை சொல்லுங்களேன். ஹிந்தி திரைப்படத் துறையை குறித்து தமிழ் ஊடகங்களில் கவனிப்பு குறைவுதான்; என்பதால், இந்தி நடிகரைக் குறித்த கேள்வி கேட்டிருந்தால் நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்கும்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு