புதன், ஏப்ரல் 20, 2005

கணினி புரட்சி

nakeeran: விழாவில் பேசிய நக்கீரன் கோபால்:

"தமிழுக்கு ஒரு புதிய கணினித் தகுதி கிடைத்திருக்கிறது. தமிழை உயர்த்துவதற்காக தாத்தா எட்டடி பாய்ந்தால்... பேரனான நான் பதினாறடி பாய்வேன் என்பதை நிரூபித்திருக்கிறார் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்...'' என்று குறிப்பிட்டார்.

ஹிந்து என்.ராம்... "கலைஞர் தன் தொடக்க காலத்திலிருந்து நடத்திவந்த தமிழ் போராட்டத்துக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி இது'' என்றார்.

துக்ளக் சோ இவ்விழாவில் மைக் பிடித்தபோது...

"கம்ப்யூட்டரில் தமிழுக்கு புதிய தகுதி கடைத்திருக்கிறது. இங்கே இன்னொரு தமிழ் கம்ப்யூட்டரும் (கலைஞரைப் பார்த்து) உண்டு. அரசியலில் என்று, என்னென்ன நடந்தது. எந்தெந்த பத்திரிகைகளில் என்னென்ன செய்திகள் வந்தன என்பது அந்த கம்ப்யூட்டருக்கு அத்துப்படி. எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இந்த தமிழ் கம்ப்யூட்டரையும் அனலைஸ் செய்யவேண்டும்'' என கலைஞரை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டுப் பேச அரங்கம் எங்கும் பலத்த சிரிப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்... "இந்திய மொழிகளில் மென்பொருள் கருவிகள் முதலில் தமிழில் செய்யப்பட்டதற்காக தயாநிதிமாறனுக்கு வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டார்.

விழாவுக்கு வேட்டியில் வந்திருந்த தயாநிதி மாறன்...

"இங்கு வந்திருப்பவர்களுக்குத்தான் இந்த இலவச மென்பொருள் கருவிகள் என்பதில்லை. நீங்கள் வீட்டிலிருந்தே இண்டர்நெட்டில் ரிஜிஸ்தர் செய்தால் அடுத்த 7 நாட்களுக்குள் இந்த தமிழ் மென்பொருள் கருவிகள் உங்கள் வீடுதேடி விரைந்து வரும்'' என்றார்.

தமிழிலேயே ஈமெயில் அனுப்பலாம். தமிழ் சொற்களை கம்ப்யூட்டரிலேயே எழுத்துப்பிழை திருத்தலாம். தமிழ் அகராதியை கணிணியிலேயே பெறலாம் என பல பயன்கள் கொண்ட இவ்விழாவில் இவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும் செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

மறுநாள் தஞ்சை தி.மு.க. மாநாடு பரபரப்பிலும் இவ்விழாவிற்கு வந்த கலைஞர்... "இது உலக அளவில் தமிழை கொண்டுசேர்க்கும் முயற்சி'' என வாழ்த்தினார்.

2 கருத்துகள்:

இண்டெர்னெட்டில் பதிவு செய்ய முடியவில்லையே !

உண்மையில் இன்று கணினியில் தமிழின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது என்பதற்கு இன்று தமிழில் புதியதாக எண்ணற்ற மென்பொருள்கள் வந்துகொண்டிருப்பதே காரணம். இதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

இதே போல் ஜோதிடம் பற்றிய ஒரு புதிய தமிழ் மென்பொருள் ஒன்று வந்துள்ளது. அதன் பயன்பாடும் மிக சிறப்பாக உள்ளது, அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இன்றே இந்த இணையத்தில் சென்று பாருங்கள்.
http://yourastrology.co.in

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு