திங்கள், ஏப்ரல் 25, 2005

விஜய்

ஜூனியர் விகடன்:

கேள்வி: "இளைய தலைமுறையினருக்கு ஏதாவது கருத்துச் சொல்லுங்களேன்...?"

"கருத்து சொல்ல நான் கந்தசாமி இல்ல. நம்ம ஒவ்வொருத் தருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் எழுதி வைத்திருப்பான். அதை எப்படியாவது வெளிப்படுத்தி நாம முன்னேறிக் காட்டணும், அவ்வளவுதான்" என்றார்

கேள்வி: "அரசியல் ஆசையில்லாவிட்டால், அப்புறமேன் இப்படியான திருமணங்களை எல்லாம் நடத்தி வைத்து ஸ்டன்ட் அடிக்கிறீர்கள்?"

"நீங்கள் நினைப்பது போல் பாலிடிக்ஸுக்காகவோ, பப்ளிசிட்டிக்காகவோ நான் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கவில்லை. எனக்கு வித்யா என்றொரு தங்கை இருந்தாள். மூன்றரை வயதிலேயே எதிர்பாராதவிதமாக அவள் இறந்து போய் விட்டாள். உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் அவளுக்கு திருமணப் பருவம் வந்திருக்கும். ராஜா வீட்டுக் கல்யாணம் போல் அவளுடைய மணவிழாவை நடத்தி இருப்போம். ஆனால், அதற்கு எங்களுக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது. எங்களின் மனக்குறைக்கு மருந்து போடுவதற்காகவே ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம். அதன்படியே என் தங்கைகளாக எண்ணித்தான் 18 பெண்களுக்கும் திருமணங்களை நடத்தி வைத்தேன். மற்றபடி இதற்கு வேறேதும் காரணமில்லை"

4 கருத்துகள்:

முதல் கேள்விக்கு பதிலாக இளைஞர்கள் தன்னுடைய "கட் அவுட்"க்கு பாலபிஷேகம் செய்வதை நிறுத்த சொல்லி இருக்கலாம்.

அடுத்த கேள்வியின் பதில் உண்மையாக இருப்பின் இ.த வுக்கு ஒரு சல்யூட்.

முதல் கேள்வி:
கருத்து சொல்றதுக்கு இவர் கந்தசாமி இல்லாவிட்டால், படத்தில் கிமீ கணக்கில் வசனம் பேசுவதை முதலில் நிறுத்தட்டும்.

இரண்டாவது கேள்வி:
தங்கை இறக்காமல் இருந்திருந்தால் 18 பேருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கமாட்டாரா? பெண்களுக்கு திருமணத்தைவிட, அவர்கள் தங்கள் காலில் நிற்பதற்கு கல்வி அவசியம் என்பதை சினிமாவில் பெண்களை அவமதிக்கும் இந்த சாக்கடைகள் உணர்ந்துகொண்டால் சரி.

>>காலில் நிற்பதற்கு கல்வி அவசியம்

ஆமாம்... இருந்தாலும் 'ஆக்கபூர்வமான' இந்த மாதிரி தொண்டுகளால், அஜீத் போன்ற 'குதிரை'களும் களத்தில் குதித்து போட்டிக்கு ஏதாவது செய்தால், நன்மை என்னவோ நாட்டுக்குத்தானே? அந்த எண்ணத்தில் பாராட்டவே தோன்றுகிறது.

>>அடுத்த கேள்வியின் பதில் உண்மையாக இருப்பின்

அந்தத் தங்கையின் புகைப்படம் 'சுக்ரன்' படத்தின் இறுதியிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த மாதிரி ரியல் நிகழ்வையும், ரீல் வசனங்களையும் கலப்பதால் -- ரசிகர்களை 'சொல்வதெல்லாம் நடத்திக் காட்டுவார்' என்னும் தோற்றத்தையும் உருவாக்கலாம்?!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு