ஆளுங்கட்சி ஆதங்கம்
கழுகு: சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலை மையம் கொண்டு, உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விவாதங்கள் ஆளுங்கட்சியினரை சோர்வடையச் செய்திருக்கிறது. 'நம்ம கவுன்சிலர் ஒருவரின் காரையே தி.மு.க. எரித்திருக்கிறது. ஆளுங்கட்சியினர் இருபது பேர் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அண்ணாசாலை போன்ற மிக முக்கியமான போக்குவரத்துத் தடங்களில் எக்காரணம் கொண்டும் சாலை மறியல் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு! ஆனால், ஸ்டாலின் அங்கே சாலை மறியல் செய்தார். அவரால்தான் ஒட்டுமொத்த போக்குவரத்தும் தடைபட்டு மூச்சுத் திணறியது. ஆனால், இதையெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் சரிவர உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கவில்லை' என்பது ஆளுங்கட்சியினரின் ஆதங்கம்.
தேர்தல்/மறியல் தகவல்கள்/பிண்ணணி
கருத்துரையிடுக