புதன், ஏப்ரல் 13, 2005

நமக்குத் தேவை நல்லதொரு முடிவு

திருமாவளவன் - Sify.com :: மிக அருவறுப்பான காட்சிகளையும், ஒழுக்கக்கேடான பண்புகளையும் அவரது படங்களில் காட்டி வருகிறார். தமிழர் மரபுகளை கொச்சைப் படுத்தும் வகையிலும் அறுவறுப்பான காட்சிகளை அவரது மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் வைத்து உள்ளார்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தனிப்பட்ட கமல ஹாசனுக்கு எதிரானது அல்ல. அவர் நடிக்கும் படங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் எண்ணமும் எங்களுக்கு இல்லை.

தமிழ் இனத்துக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரானவராக நடந்து வரும் கமலஹாசனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தமிழ்ப்பற்று அதிகம் உள்ளவர்போல் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறார். எனவே தமிழ் உணர்வு உள்ளவர்கள் அவர் நடித்து வெளிவர உள்ள மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.



RAAGA - Anbe Sivam - Tamil Movie Songs ::

சதுரங்க ஆட்டத்திலே
முதலாளிகள் காய் நகர்த்த
தொழிலாளிகள் கைகள் என்ன
பூப்பறிக்குமா?
இல்லை...
காய் பொறுக்குமா?

கரைகள் தூங்க விரும்பினாலும்
அலைகள் விடுவதில்லை

மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை

ஓடி ஓடி ஓளிந்தபோதும்
வாழ்க்கை விடுவதில்லை

நாம தனி மரம் இல்ல
தோப்பு
வைக்க போறேன் பார்
ஆப்பு


Sify.com :: 'மும்பை எக்ஸ்பிரஸ்' (U) படத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. சென்னை எழும்பூர், தியாகராய நகர், கே.கே. நகர் ஆகிய இடங்களில் அந்த படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.

கமல் :- இங்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் நான் ஆங்கிலத்தில் பேசினேன். ஆங்கிலம், நாட்டை இணைக்கும் தேசிய மொழி ஆகி விட்டது. நாட்டின் ஒற்றுமைக்காக ஆங்கிலத்தில் பேச வேண்டியுள்ளது.

இதற்காக எங்களுக்கு தமிழ் ஆர்வம் இல்லை என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். எங்களுக்கு தமிழ் ஆர்வம் இருக்கிறது. தமிழ் மோகம் இருக்கிறது.

கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. அதில் கலாட்டா என்பது, இந்தி வார்த்தை. சில நேரங்களில் அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

கலைஞர்கள் ரொம்பவும் மென்மையானவர்கள். எங்கள் மனதை ஊனப்படுத்த வேண்டாம். நான் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும், இதுதான் நமக்கு கடைசி படமாக இருக்குமோ என்ற பயத்தில்தான் நடிப்பேன்.

பொதுவாக பட பூஜைகளில் நான் ஆர்வம் காட்டுவது இல்லை. தொடக்க விழா எதற்கு... நேராக வேலையை ஆரம்பித்து விட வேண்டியது தானே என்று நினைப்பேன்.

இது, சடங்குக்காக நடக்கிற விழா அல்ல, இப்படி ஒரு விழா நடத்தி, நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று காட்ட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், நான் தனி ஆள் என்று நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு மிரட்டுவார்கள்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு