புதன், ஏப்ரல் 20, 2005

மந்திரமுகி கதை

அமெரிக்காவில் சொட்டைய கூஜாவின் வீட்டை பழனி வாங்குகிறான்.

சூனியக்காரி மந்திரமுகி இந்த வீட்டில் ஆயிரம் தலைகளை காவு வாங்கியதாக சரித்திரம். கடைசியாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சொட்டைய கூஜா. இதனால் அவளின் ஆஸ்தான கேப்டன் சவுரவ் (கிரிக்கெட் வீரன்) ஓய்வு பெற்றதாக தகன எரிப்பாளர் தாடிவாலா முன்கதை சுருக்குகிறார்.

மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் சொட்டைய கூஜாவின் வீட்டில் உலாவுவதாக வதந்தி. அவற்றை சச்சின் டெண்டுல்கரின் முப்பதடி மட்டை காத்திருப்பதாக ஐதீகம். மந்திரமுகியின் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் சேப்பாக்கம் மைதானம் இன்றும் தெரிகிறது. சேப்பாக்கத்தின் பெவிலியனில்தான் முன்னாள் அணித் தலைவன் சவுரவ் வசித்திருந்தான்.

இந்நாளில் அங்கு டிராவிட் வசிக்கிறார். அவரும் கிரிக்கெட் கேப்டன்தான்.

காவேரியை பழனி காதல் மணம் புரிந்திருக்கிறான். இது பிரிந்திருந்த பழனியின் பழங்குடியில் பிளவை வலுப்படுத்துகிறது. என்றாலும் பழனியின் மொத்த குடும்பமும் அறுபடை வீடுகளுடன் மந்திரமுகி மாளிகையில் குடிபுகுகிறது.

இவர்களுடன் மறைவாணனும் விடுமுறையை பழனியுடன் களிக்க வருகிறார். வீட்டை கவனித்துக் கொள்ள அவுட் ஹவுஸில் பாட்டியும் பேத்தி சச்சுவும் வசிக்கிறார்கள். சச்சுவை சர்ச்சு என்றழைத்து வெறுப்பேத்துவதை கர்ம சிரத்தையாக மறைவாணன் சிறப்புற செய்து வருகிறார். எனினும், சர்ச்சுக்கு... சாரி... சச்சுவுக்கு மரை கழண்டுவிட மறைவாணனிடம் காதல் வந்து விடுகிறது.

'மறைவாணன் இருக்க மரை கழல்வதேன்' என்று படம் நெடுக வசனம் இடம் பெறுகிறது.

மற்றவர்க்குள் மனதுக்குள் மறைத்து வைப்பதை மறைவாணன் தன்னுடைய அமெரிக்கப் படிப்பால் உணர்ந்துகொள்கிறார். புகழ்பெற்ற பல மனவியல் பேறாயர்களையும் பேராசிரியர்களையும் மாணாக்கர்களாக வைத்துக் கொண்டவர்.

அக்கம்பக்க குழந்தைகளுக்கு சச்சு வாய்ப்பாடு கற்றுத் தந்து வருகிறார். காலையில் எழுந்தவுடன் 'ஒரோண் ஒண்ணு... ஈரோன்னு இரண்டு' என்று தமிழ் நாராசமாக நித்திரையை கஷ்டப்படுத்துவதால், வகுப்புகளை நிறுத்த உத்தரவிடுகிறார் மறைவாணன். பெரிய இடத்து பழனி நண்பனாக இருப்பதால், இது எளிதில் சாத்தியமாகிறது. வாய்ப்பாடுகளைப் படிக்காமல் தான் கழற்றி வைத்த நட்/போல்ட்களை மெக்கானிக் வேலை பார்க்குமாறு அறுவுறுத்தி சிறுவர்களை விரட்டியடிக்கிறார். பொழுதுபோக்கு நின்று போனதால் சச்சுவின் காதல் வலுவடைகிறது. சச்சுவை மேலும் கவருமாறு 'ஒன் ஒன் சார் ஒண்... டூ ஒண் சார் டூ' என்று ஆங்கிலப் புலமையை காட்டி நம்மையும் முடுக்குகிறார் மறை.

காவேரிக்கு கர்னாடகமாக அடைந்து கிடக்க போரடிக்கிறது. பக்கத்தில் சென்று காய்ந்து போன மந்திரமுகியின் அறைக்குள் நுழைய ஆசை. ஆனால், புக விட மாட்டேன் என்று தடுத்து வருகிறார்கள். சச்சுவின் உதவியை நாடுகிறார் காவேரி. நண்பனிடம் தனது மதிப்பை உயர்த்த மறைவாணனும் சச்சுவின் உதவியைக் கோருகிறான்.

சச்சுவும் சேவல் பண்னையை பழனியின் மேல் ஏவி விடுகிறாள். மறைவாணன் சேவல்களிடமிருந்து பழனியைக் காப்பாற்றுகிறான். மாம்பழத்தில் விஷம் தோயித்திருப்பதை பழனிக்கு உணர்த்துக்கிறான்.

  • சச்சு பழனியைக் கொல்ல முயன்றது ஏன்?

  • மந்திரமுகியால் பலி வாங்கப்பட்ட ஆயிரம் வீரர்களின் ஆவிகளும் பழனியின் அறுபடை வீட்டாரையும் பிடித்திருக்கிறதா?

  • டிராவிட் நிலைமை என்ன ஆச்சு?

  • ஆயிரம் வீரர்களின் ஆவிகளை மேய்க்க வரவழைக்கப்பட்ட புது பயிற்சியாளர் யார்?

    மந்திரமுகியின் இத்தைகைய புதிய கேள்விகளுக்கு சொட்டைய கூஜாவின் விடையை வெள்ளித்திரையில் காண்க!

    - பாஸ்டன் பாலாஜி

  • 3 கருத்துகள்:

    BB ithuku peru than lollu ;)

    do U mean LOL :))

    பாஸ்டன், பட்டைய கெளப்பிட்டிப்பா,

    :-)

    எம்.கே

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு