திங்கள், மே 02, 2005

முஸ்லிம் திருமண விவாகரத்துக்கு புதிய கட்டுப்பாடு

vikatan.com :: முஸ்லிம்கள் மும்முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் புதிய கட்டுபாடு விதித்துள்ளது.

போபாலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் 2 நாள் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில், நிருபர்களிடம் பேசிய வாரியச் செயலாளர் அப்துல் ரகீம் குரேஷி "முஸ்லிம் திருமண விதிமுறை மாதிரிச் சட்டம் 'நிக்காஹ் நாமா' தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் பார்வையில் 'தலாக்' செய்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். எனவே முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தம்பதிகள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். 'தலாக்' என்பது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே 'நிக்காஹ் நாமா'வில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்.

'தலாக்' கூறுபவர்கள் ஒரே முறையில் மூன்று முறை 'தலாக்' கூறமுடியாது. ஒரு 'தலாக்'க்கும் இன்னொரு 'தலாக்'க்கும் குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளி இருக்கவேண்டும். ஒரு முறை 'தலாக்' சொன்னால் அதை மூன்று மாதத்துக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு: NDTV

5 கருத்துகள்:

முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் ''முத்தலாக்'' என்று கூறி மனைவியை விவாகரத்து செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல, மாறாக கண்டிக்கத்தக்கது.

வைத்தியர் தந்த மூவேளை மருந்தை மூன்று வேளைகளாக உபயோகித்துக் கொள்ள வேண்டும் - மூவேளை மருந்தையும் ஒரே நேரத்தில் உட்கொண்டுவிட்டு - நான் மூன்று வேளை மருந்தையும் சரியாகச் சாப்பிட்டேன் என்று சொல்வது எப்படி அறியாமையோ, இதே அறியாமைதான் ஒரே நேரத்தில் ''முத்தலாக்'' சொல்வதிலும் நிறைந்திருக்கிறது.

மூன்று ''தலாக்'' என்பது வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பயன்படுத்திக் கொள்ளும் மூன்று சந்தர்ப்பங்களாகும். இது புதியக் கட்டுப்பாடல்ல, இதுதான் இஸ்லாத்தின் இயல்பான விவாகரத்து முறை.

நன்றி அபூ முஹை. முத்தலாக்கை வெவ்வேறு சமயங்களில், மாத இடைவெளி விட்டுத்தான் சொல்ல வேண்டும் என்னும் முறையை முன்பொருமுறை ஆசாத்தும் சொல்லியிருந்தார்.

எண்டிடிவி செய்தியில் இருந்து:

According to its guidelines, Muslim couples in India will now have the option to sign a document, which will involve arbitration in case they want to divorce.

The document however, left the most controversial aspect of divorce--the practice of triple talaq untouched.

Many were hoping that the Muslim board would stand up for the rights of several Muslim women, divorced by their husbands who simply uttered the words talaq thrice in just one sitting.

The Muslim board however, stopped short at condemning the practice.

But many within the board say triple talaq has to be declared illegal. They also pointed out that today's model nikahnama lacks teeth since it is not binding on a couple.

நன்றி Bala
 //*மாத இடைவெளி விட்டுத்தான் சொல்ல வேண்டும்*//

''தலாக்'' மாத இடைவெளி விட்டுத்தான் சொல்ல வேண்டுமென்பது சரியல்ல - தலாக் சொன்ன பிறகு தம்பதியர்கள் மீண்டும் சேர்ந்து வாழ சில மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதை சற்று விரிவாக விளக்குகிறேன்.

ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்து கொள்ள மூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று சந்தர்ப்பங்களையும் வாழ்நாளில் எந்த சமயங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தம்பதியரிடையே பிணக்கம் ஏற்பட்டு, கோபத்தில் - மனைவியை அந்த வினாடி வெறுத்தவன் (பின்பு யோசிப்பான் என்பது தனி விஷயம்) ''இனி உன்னோடு வாழ்வதில் அர்த்தமில்லை'' என்று அவசரப்புத்தியில் தலாக் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம், மனைவி மூன்று மாதவிடாய் காலங்கள் காத்திருக்க - இந்தக் காலங்களில் மனைவியின் பராமரிப்பைக் கணவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்று மாதவிடாய் காலத்திற்குள் மனைவியைத் திரும்பவும் கணவன் சேர்த்துக் கொள்ளலாம், அப்படி கணவன் சேர்த்துக் கொண்டால் - அவனுக்கு வழங்கப்பட்ட தலாக் சொல்லும் மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விட்டதால் வாழ்நாளில் அவனுக்கு இன்னும் எஞ்சியிருப்பது இரண்டு (தலாக்) சந்தர்ப்பங்கள் மட்டுமே.

மீண்டும் தம்பதியரிடையே பிணக்கம் ஏற்பட இந்த முறையும் கணவன் - மனைவியை இரண்டாவது தடவையாக தலாக் சொல்லி - மீண்டும் மனைவியைச் சேர்த்துக் கொண்டால் - இப்போது அவனுக்கு வாழ்நாளில் ஒரே ஒருமுறை தலாக் சொல்லும் சந்தர்ப்பம் மட்டுமே இருக்கிறது.

இரண்டு தடவை தலாக் சொல்லி - இருமுறையும் மீண்டும் தன் மனைவியை மீட்டிக் கொண்டவன் மூன்றாவது முறையாக தலாக் சொல்வதை நன்கு யோசித்தேச் சொல்ல வேண்டும். அவசரத்தில் முன்பு இரண்டு தடவை தலாக் சொன்னது போல் - மூன்றாவது முறையும் அவன் தலாக் சொன்னால் - அப்படி சொன்ன நிமிடத்திலிருந்து விவாகரத்து ஏற்பட்டுவிடும். முன்பு இரண்டு தடவை தலாக் சொல்லிவிட்டு மீண்டும் மனைவியைச் சேர்த்துக் கொண்டது போல் மூன்றாவது முறை தலாக் சொல்லிவிட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளவே முடியாது. (அப்படி சேர வேண்டுமானால் இன்னும் கடினமான நிபந்தனை விதிக்கிறது இஸ்லாம்)

இதுதான் முத்தலாக் என்னும் இஸ்லாமிய விவாகரத்துச் சட்டங்கள். மூன்றாவது முறை பயன்படுத்தும் தலாக்கில் இனி சேரவே முடியாது என்ற நிலை இருப்பதால் இனி மனைவியோடு சேர்ந்து வாழக்கூடாது எனக் கூடுதல் ஆத்திரத்தில் ''முத்தலாக்கும்'' சொல்லி விட்டேன் என்று சொன்னாலும் அது மூன்று தலாக் சந்தர்ப்பத்தில் - முதல் தலாக் சந்தர்ப்பமாகவே இஸ்லாம் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் சில அறியாமை முஸ்லிம் அறிஞர்கள் முத்தலாக்கென்று சொன்னால் அது மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் சொன்ன மாதிரிதான் என்பார்கள் இதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் ஆதாரமில்லை. இப்படி சொல்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. கணவன் கண்டிப்பாகப் பிரிந்தேயாக வேண்டும் என்றால் முதல் தாலாக்கிலேயே பிரிந்து விடலாம் மீண்டும் சேரும் தவணைக்குள் சேராமல் இருந்தால். (எழுதியவற்றில் மேலும் சந்தேகமிருந்தால் எழுதுங்கள்)

(இஸ்லாத்தில் ஆண்கள் தலாக் சொல்வது மாதிரி பெண்கள் தலாக் சொல்ல அனுமதிக்கிறதா? என்றால் தலாக் விஷயத்தில் ஆண்களைப்போல், பெண்களுக்கு மூன்று சந்தர்பங்களெல்லாம் வழங்கவில்லை. ''கணவரைப் பிடிக்கவில்லை'' அல்லது ''இவரோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை'' என்ற ஒரு வார்த்தை சொன்னால் போதும் அந்தக் கணவனிடமிருந்து மனைவி பிரிக்கப்பட்டு விடுவாள். ஆண்களுக்கு வழங்கிய மாதிரி பெண்களுக்கும் மூன்று சந்தர்ப்பங்கள் வழங்குவது சாத்தியமில்லை - கணவனை வேண்டாம் என்று மனைவி சொல்லிய பிறகு மீண்டும் அவர்கள் சேருவதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் - ''என்னையாப் புறக்கணித்தாய்'' என்று வஞ்சம் வைத்து கணவன் மனைவியைப் பழி வாங்கி விடுவான்.)

விரிவான விளக்கங்கள். நன்றிகள்.
-பாலாஜி

Nice details!!!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு