கல்லூரி தரப் பட்டியல்
சில மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று குழம்பும் அளவு மதிப்பெண் எடுத்து விடுவார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கான கருத்துக் கணிப்பையும் தரப்பட்டியலையும் டேட்டாக்வெஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
வழக்கம் போல் ஐஐடி கான்பூர், சென்னை, மும்பை, காசி, எல்லாம் இடம் பிடித்திருக்கிறது.
தலை பத்தை விட்டு பிட்ஸ், பிலானி இறங்கியிருப்பது வருந்தத்தக்கது. திருச்சி, வாராங்கல், சூரத்கல் ஆகியவற்றை விட பிலானி பின்தங்கியுள்ளதாக சொல்வது இன்னும் வருத்தம். ஜாதவ்பூர் போன்ற பெருமைவவாய்ந்த கல்லூரிகளை விட கிருஷ்ணா போன்ற புதியவர்கள் மதிப்பைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.
நுழைவுத் தேர்வுகளை குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், நுழைவுத் தேர்வை உதாசீனப்படுத்தும் பிட்ஸ், பிலானியின் சரிவை கருத்தில் வைத்துக் கொள்வது முக்கியம்.
என்னுடைய முந்தைய பதிவு: நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்
தொடர்புள்ள செய்தி: CIOL : News : IIT Kanpur voted best tech school: Survey
நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி 'subscribed service' ஆக இருக்கிறது. பட்டியலை பார்க்க முடியவில்லை.
சொன்னது… 5/26/2005 01:45:00 PM
சுரேஷ், பட்டியலை இங்கும் இருக்கிறது: Lost in Media: India's Best Colleges
நன்றி குமார். அமெரிக்காவிலும் 'சாட்', ஜி.ஆர்.ஈ, ஜிமாட், போன்ற தேர்வுகள் எல்லா விதமான படிப்புகளுக்கும் இருக்கிறது. இவற்றை சில கல்லூரிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (சத்யபாமாவைப் போல்).
அந்த மாதிரி அனைத்து இந்தியாவுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு. அவற்றுக்கான பரீட்சையும் +2 பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டு, பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் அனைவருக்கும் சௌகரியமாக இருக்கும்.
சொன்னது… 5/31/2005 05:51:00 AM
கருத்துரையிடுக