வியாழன், மே 26, 2005

Anniyan Trailer

அன்னியனின் திரை முன்னோட்டம் இங்கே கிடைக்கிறது. (தகவல்)

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் ஒலி மட்டுமே கேட்டது. ஒளியுடன் பார்க்க எனக்கு டிவெக்ஸ் தேவைப்பட்டது. உங்களுக்குப் பொருத்தமானதை இறக்கிக் கொண்டுவிடுங்கள்.

ட்ரெயிலர் பார்த்தவுடன் தோன்றிய சில:

  • நவநவீன ஆடைகளிலும் சதா அழகாய்த்தான் இருக்கிறார். (கண்ணும் கண்ணும் நோக்கியா).

  • I Know What you did last Summer-இல் ஆரம்பித்து மேட்ரிக்ஸ் வரை 'எப்படம் யார் யார் எடுத்தாலும், அப்படம் தமிழ்ப்படம் ஆக்குவது அறிவு' என்று கூட்டுப்பதிவு முதல் காலச்சுவடு வரை இடிபடப்போவது உறுதி.

  • 'எகிறி குதித்தேன்' பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்.

  • ஜீன்ஸில் வந்த 'அன்பே அன்பே', அய்யங்காரு வீட்டு அழகாகவும், இந்தியனின் நிழல்கள் ரவி கொலையும், இன்னும் பல ஷங்கரின் மறக்கமுடியாத காட்சிகள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டிருக்கும்!?

  • பிரும்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர் என்றாலும், பத்தாயிரத்து முன்னூற்றி ஏழு (10,307) கராத்தே வீரர்களை க்ளைமாக்சுக்கு அடித்து நொறுக்குவதாக காட்டுவதெல்லாம் திருப்பாச்சிக்கிரமம்.

  • விவேக், சிரிக்கும் லாரிகள், சைபர் குற்றம் (?), பிரகாஷ்ராஜ், சில் த்ரில்லர்கள், கல்கி அவதாரம் என்று ஜனரஞ்சகமாக இருக்கிறது.

    சந்திரமுகியை விரட்ட அன்னியன் தயார் போலத்தான் தெரிகிறது.

  • 4 கருத்துகள்:

    அண்ணாத்தே, படம் ஓடணும். இல்லாட்டி ஷங்கர் ஏற்கனவே இருக்கும் ஒரு லிஸ்டில் சேர்ந்து மறுபடியும் 'முதல் படத்திலிருந்து' ஆரம்பிக்கணும்.

    விக்ரமிற்கும் இது ஜெயிக்கணும், இல்லாட்டி எலிகள் எல்லாம் விக்ரம் பூனை மேல ஏறி ஆடும்; பாடும். :-)


    எம்.கே.குமார்

    >> மறுபடியும் 'முதல் படத்திலிருந்து'

    அதுதான் 'அன்னியன்' என்று பேசிக்கறாங்களே ;-)

    //'எகிறி குதித்தேன்' பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்//
    நீங்களும் சினி டெக்னீஷியானா (non-linear editing specialist) ? இப்படி போட்டுத்தாக்குறிங்களே?

    >>நீங்களும் சினி டெக்னீஷியானா

    டயலாக் விடறவன் எல்லாம் எழுத்தாளரா என்பது மாதிரிதான் காஞ்சி ;-)

    (நான் சினிமா நுர்பம் தெரிந்தவன் அல்ல; ஏதாவது வித்தியாசமாய் பட்டால் எப்படி என்று கொஞ்சமாய் தெரிந்து கொண்டவன்... அவ்வளவே)

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு