வெள்ளி, ஜூன் 17, 2005

Anniyan Watch

1. தமிழ் விமர்சனம்: தேக்கட

2. சிஃபி

3. இந்தியா க்ளிட்ஸ்

18 கருத்துகள்:

review from spicyindiancurry blog is actually copied from sify.com. checkout the links

http://sify.com/movies/tamil/review.php?id=13873632&ctid=5&cid=2429
http://spicyindiancurry.blogspot.com/2005/06/anniyan-review.html

change the link to the original source.

Thank you!

அல்வாசிட்டி

teakada: Anniyan: Shankar's movie can get very emotionally charged and awe-inspiring, when you're in the dark room, but when you come out of the theatre, am not sure how much of the 'message' you can really digest. A friend of my friend who was driving us back home was so pumped up about the movie that he was going gaga about the Anniyan character and how badly he wished there were atleast 4 such to clean up India. While we crossed the light opposite IMC6 he was like, Indians in general are bad and how they need to reform themselves, so that India can prosper. For a few moments there, I thought it was the cynical me, that didn't think that such movies can have any impact on anyone other the money these guys will make. The guy turns the ignition on, picks up one of those unmarked TDK CD-RW thing and plays his favourite song from Anniyan. Someone probes about the source of the .mp3 and he promptly reels out the list of web sites, where the Songs are available for download. Not to drop the conversation, he continues, "If I was unmarried, I would love to do what Anniyan does. Blah blah blah ..."

அருண் வைத்யநாதன்

Blog :: Homepage of Karthick R: "Have to say if Chandramukhi had come after this, it would have been a flop. The richness of the film, a typical Shankar film. Creativity dancing all over the film. One of the best scenes I thought of the movie was, mami�s drawing kolams in the streets of London, in one of the songs."

Touring Talkies: Tamil movie Anniyan - Review (with no spoilers)

Never Ending Dreams.....: ANNIYAN - Review

Blogs by Arvind Srinivasan: [Movie Watch] Anniyan: "'oru vaati parkalam'
'vikram acting super'
'vivek kalakitaaru'
'idhu oru nalla social awareness padam' "

Balaji's Thots: Anniyan: "The song sequences would've made any other director proud but are a little disappointing coming from Shankar."

Wise Donkey: Dont watch Anniyan if: "1.You are going to watch it on pirated CDs
2.You are going to buy a black ticket to watch it
3.You are going to the theatre to just have fun and tease the person in front of you
4.You want to show off your Anniyan ringtone 25 times during the movie
5.Its going to be just another movie, and the message is not going to mean anything for you (OK Ok, its none of my business:D)
Read somewhere on the effect of the play Harichandra (The king who refused to utter a lie inspite of hardships) on Gandhi when he was young. "

Reflections: Anniyan - Must Watch

know about me - Joshy Varoky Francis: ANNIYAN REVIEW

Anniyan drawing huge crowds : Down South : Tamil News : ApunKaChoice.Com: "The roads in front of cinema halls screening Anniyan in Tamil Nadu were blocked with traffic jams caused by movie buffs scrambling to see the latest movie of their favorite star Vikram ."

CP: anniyan: "evanugallukku shankar eppadi padam eduthalum thiruntha maattanga. "

Thoughtful scribbling: "what did ur telugu friends say abt the movie"

"Reflections" - Doctor Bruno's Blog: Anniyan (Stranger) in Marmadesam (Mysterious Land): "What is more interesting is the fact that the character in Indra Soundarajan's novel was called as 'Karrupu' meaning black where as Shankar calls his character 'Stranger in Black'

The second similarity is the fact that the hero is a afraid of many things, including expressing his love to the heroine

In both stories, the hero is affected in Child hood

In both stories, the character has a animal as vehicle. While it was a white stallion for 'Karrupu' it is Ox for Anniyan "

Caught behind but not out!: 'Anniyan'- Vikram all the way!

SSK Chronicles: Anniyan - a review: "story was kinda normal weakling fightin for justice, but the way it was made it was too good."

Mere_Dil_Se: Comments Anniyan Film: " donno how a director can survive in tamil film industry with only one story that he knows"

VKpedia: Review: ANNIYAN: "There is an old anecdote (possibly even apocryphal) about how a woman proposed to George Bernard Shaw telling him that if they married, their progeny would be blessed with her beauty and his brains. The inimitable GBS is known to have shot back, 'But what if he inherits my uncomely countenance and your stupid intellect?'"

Prasanna's news and events: ANNIYAN AVATHARITHUVITTAAN

திரைவிமர்சனம்

Yahoo! Groups : RaayarKaapiKlub Messages : Message 11230 - strajan123

Shankar sculpts a good Anniyan - rediff.com

that was a collection of all the links, Bala.c

tamil Sify.com

Webulagam

AC fails: Tension in theatre

Anniyan beats Chandramukhi

thatstamil

tamilcinema.com

அந்நியன்



‘இன்றைய இந்தியாவுக்குத் தேவை இந்த அந்நியன் தான்!’ என்கிறார் இயக்குநர் ஷங்கர்.



ஆட்டம், பாட்டம், அதிரடி, காமெடி என கலர்ஃபுல் கலவைக்கு நடுவே Ôகாஸ்ட்லி மெஸேஜ்Õ சொல்லும் டிபிக்கல் ஷங்கர் பிராண்ட்!

அய்யங்கார் வீட்டு அம்பியாக விக்ரம். வக்கீலின் செல்லப் பெயரே ‘ரூல்ஸ் ராமானுஜம்’. சட்ட திட்டங் களை மதித்து நடக்கிற அம்பிக்கு, உலகத்தின் மீது அத்தனை புழுக்கம். ‘ஏன் இங்கே யாருமே ஒழுக்கமா இல்லே? ஏன் இங்கே எல்லாமே தப்பா இருக்கு?’ என வேதனையுடன் அலைகிறார். இவர் புத்தி சொன் னாலும் யாரும் திருந்துவதாக இல்லை. இன்னொரு பக்கம் அம்பி உருகி உருகிக் காதலிக்கிற சதாவும், ‘இப்படி தொட்டதுக்கெல்லாம் ரூல்ஸ் பேசிண்டு அலையறவரோட வாழ்க்கை நடத்த முடியாது’ என காதலை Ôஜஸ்ட் லைக் தட்Õ நிராகரிக் கிறார்.

எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசும் ‘அம்பி’க்கு அடுத்தடுத்து நேரும் அவமானங்களும், அவர் உள்ளக் கொதிப்பும் அத்தனை பரிதாபம்! காதலை சதாவிடம் சொல்ல முடியா மல், ஒரு டிரங்க் பெட்டி நிறைய கிரீட்டிங் கார்டுகளை தானே எழுதி வைத்துக்கொண்டு, அம்பி தவிப்பது பரிதாபமோ பரிதாபம்!


விரக்தியிலும் வேதனையிலும் கிடக்கிற அம்பிக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்புகிறார்கள் வேறு வகையான இரு மனிதர்கள். கார ணம் | ‘மல்டிபிள் பர்சனா லிட்டி டிஸார்டர்’ (இந்த மன நோய் பற்றி ஏற்கெனவே புரிந்துகொள்ள உதவிய ‘குடைக்குள் மழை’, ‘சந்திர முகி’க்கு நன்றி)! அநியாயங் களை வேட்டையாடி அழித்து ஒழிக்கும் கொலைவெறி அந்நியன்; சதாவின் காதலைப் பெற ஃப்ரீக் அவுட் ரோமியோ வாக உலாவரும் ஜாலி ரெமோ ஆகிய இருவரும் அம்பிக்குள் குடியேறிய பிறகு, ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!

இந்த உண்மை \ ‘அம்பி’ உட்பட | எல்லோருக்கும் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது திகில் கிளைமாக்ஸ்! புரிந்துகொள்ள இது சற்றே கடினமான அவுட் லைன்தான். ஆனால், ஸ்கிரீ னில் அத்தனை பிரமாண்ட மான, நேர்த்தியான உருவாக் கத்தில் அசத்தியிருக்கிறார் ஷங்கர்!

மக்கள் பணத்தைக் கொள் ளையடிக்கிற, மாபெரும் தவறுகள் செய்கிற மெகா முதலைகளை விட்டுவிட்டு, சராசரி ரேஞ்சில் இருக்கிற சின்னச் சின்ன களைகளை மட்டுமே கிள்ளி எறிவது, அந்நியனின் Ôகெத்Õதுக்கு லேசாக இடிக்கிறது. சாலையோரம் அடிபட்டுக் கிடந்த ஒருவரை ஆஸ்பத் திரிக்கு அழைத்துச் செல்ல மறுத்த கார்காரருக்கு மரண தண்டனை தருவதெல்லாம் டூ மச்! அப்படியானால், இடித்துத் தள்ளிய ஆசாமி, உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்த கூட்டம், கார்களை நிறுத்தாமலே போனவர்கள் என்று எல்லாரையும் ‘கண்ணகி’ லெவலுக்கு கொளுத்தியிருக்க வேண் டாமா?

இருந்தாலும், அந்த தண்ட னைகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் காமிக்ஸ் ரகம்! திமுதிமுத்து நகரும் மெகா எருமைக் கூட்டத்துக்குள் தள்ளிவிட்டு ரத்தக் கூழாக் குவது... உடம்பு முழுக்க மசாலா தடவி எண்ணெய்க் கொப்பரைக்குள் துக்கி எறிவது (‘‘சிக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ் மாதிரி, நீ எனக்கு சொக்கன் சிக்ஸ்ட்டி ஃபைவ்!ÕÕ) என்று கதிகலக்கல்! காட்சிகளின் கோரத்தை நேரடி யாகக் காட்டி அருவருக்கச் செய்யாமல், நம் கற்பனைக்கே விட்டிருப்பது பொறுப்பான ஐடியா!

ஆக்ஷன் காட்சிகளோ பிரமிப்பு வகை! குறிப்பாக, கராத்தே ஸ்கூலில் ஏழெட்டு டஜன் ஆட்களை மூர்க்கமாக விக்ரம் அடித்து நொறுக்கும் சண்டைக் காட்சி... மிகத் துணிச்சலான ஸ்டண்ட் நடிகர்களும் கேமராக்களும், கிராஃபிக்ஸ§ம் இணைந்து நடத்தி யிருக்கும் மாயாஜாலம் \ அப்படியே Ôமேட்ரிக்ஸ்Õ அச்சு! ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினுக்கு சபாஷ்!

தப்பு செய்கிற யாரையும் மன்னிப்புக்கே இடமின்றிக் கொல்லும் அந்நியன், ஊழலுக்குத் துணை போகிற சதாவையும் கொல்லத் துடிக்கும்போது... படக் படக்கென்று அவனுக்குள்ளிருந்து ரெமோ வெளிப்பட்டு, சதாவைக் காப் பாற்ற முயல்வது விறுவிறு ஹைக்கூ!

Ôஅம்பிÕயின் கண்ணில் பட்ட தப்பு ஆசாமிகளுக்கு மட்டுமே மரண தண்டனை தருகிறார் அந்நியன். இதற்கு எதற்கு ‘அந்நியன் டாட் காம்’... அதில் புகார்கள் வரவேற்பு என்று ஏன் பில்டப்?

விறைப்பும் முறைப்புமாக நடிப்பில் மின்னுகிறார் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ். ஆனால், அவர் எதற்காக மாறுவேடம் போடுகிறார்... அதில் என்ன சாதிக்கிறார்? அந்தக் காட்சிகளில் த்ரில்லும் இல்லை... காமெடியும் இல்லை! விக்ரமின் திறமைக்கும் உழைப்புக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி இருக்கிறார் ஷங்கர். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரமிப்பூட்டும் நடிப்பு. மேனரிஸம், பாடி லாங்வேஜ் என ஒவ்வொன்றிலும் ஆச்சர்யமூட்டும் அனல்! கட்டுக் குடுமி அம்பியின் படபடப்பு, ஸ்பிரிங் முடி அந்நியனின் கொதிகொதிப்பு, ப்ளீச் தலை ரெமோவின் ஜிலுஜிலுப்பு என அசத்தல் பரிமாணங்கள். தோற்றத்தில், முக பாவங்களில், உடல் அசைவுகளில்... அட, குரலில்கூட வெரைட்டியான வித்தியாசம்... கலக்கிட்டீங்க விக்ரம்!

போலீஸ் பிரகாஷ்ராஜ், அம்பியை அடித்துத் துவைத்து விசாரிக்க, சடார் சடாரென அந்நியன் வெளிப்பட்டு மாறி மாறி பிரகாஷ்ராஜைக் கலவரப் படுத்துகிற காட்சி... ஜிலீர் சிக்ஸர்! அய்யங்கார் ஆத்து உச்சரிப்புக்கு மட்டும் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், Ôஅய்யங்கார் வீட்டு அழகேÕவும் Ôகுமாரீ...Õயும் வெண்பொங்கல் என்றால், Ôகாதல் யானைÕயும் Ôஅண்டங்காக்காÕவும் தலப்பா கட்டு பிரியாணி! ‘அண்டங்காக்கா...’வில் வண்ணமயமாக பெயின்ட்டோற்சவம் நடத்தியிருக்கும் கலை இயக்குநர் சாபுசிரிலின் பங்களிப்பு அபாரம்!


கேமராமேன்கள் மணிகண்டன் & ரவி வர்மனின் உழைப்பு இயக்குநரின் கருவை இன்னும் சுகமான பிரசவம் ஆக்கியிருக்கிறது.

‘அஞ்சு பைசாவ அஞ்சு கோடி பேர் அஞ்சஞ்சு தடவை திருடுறது தப்பா?’, ‘சட்டத்தை நீங்க மீறலாம், ஆனா நான் கையிலெடுக்கக் கூடாதா?’ போன்ற பளீர் சுளீர் வசனங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே ÔசுஜாதாÕ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். ‘இருபத்தைந்து வருடங்களில் சிங்கப்பூரும் ஜப்பானும் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது? பிறகு ஏன் இந்தியா மட்டும் இப்படியே இருக்கிறது?’ என்று அந்நியன் வாயிலாக ஷங்கர் கேட்கிறாரே, அந்தக் கேள்வி அப்படியே நெஞ்சில் தைத்து நிற்கிறது!

ஷங்கரின் மெகா ஹிட்களான ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’ படங்களை Ôஅந்நியன்Õ பல இடங்களில் நினைவூட்டி னாலும்... சாகாவரம் பெற்ற ஊழலையும் முறைகேட்டையும் எதிர்க்கிற கேரக்டர் கள் எப்போதுமே போரடிப்பதில்லை தான்!

‘அந்நியன்’... மசாலா மாயாஜாலம்!



| விகடன் விமர்சனக் குழு

(http://www.vikatan.com/av/2005/jul/03072005/av0501.asp)

Arun

Roza

Muthu

சஞ்ஜீத்

ஸ்ரீகாந்த் மீனாட்சி

http://www.kumudam.com/kumudam/290605/pg13.php

நீண்ட எதிர் பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது அந்நியன். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா?

பிஃப்டி, பிஃப்டி!

நாடு முன்னேறாததற்கு பொது மக்கள் மற்றும் பணியாளர்கள் செய்யும் சிறுசிறு அலட்சியத் தவறுகள், பொறுப்பின்மை, சட்டத்தை மீறும் ஒழுங்கின்மைதான் காரணம் என்று நம்பும் ஒரு பிராமண இளைஞன், அதனால் ‘மல்டிபிள் பர்ஸனாலிட்டி டிஸார்டர்’ மனநோயால் பாதிக்கப்பட்டு அவனையும் ‘அறியாமல்’ தவறு செய்தவர்களைக் கொன்று போடுகிறான், நாட்டைத் திருத்துகிறான் என்பதே கதை. ஜென்டில்மேன், இந்தியனாகும் த்ரில்லர் என்றும் சொல்லலாம்.

ஹாட்ஸ் ஆஃப் டு விக்ரம்! உடம்பின் ஒவ்வொரு நரம்பும், சதையும் துடித்துத் தெறித்து நடிக்கிறது. அய்யங்காராத்து அம்பியாகட்டும், ஃப்ரீக்_அவுட் இளைஞன் ரெமோவாகட்டும், வெறிகொண்டு எழுந்து தப்பு செய்தவர்களை வேட்டையாடும் அந்நியனாகட்டும் பின்னியெடுத்து விட்டார். பிரகாஷ்ராஜுடனான மோதலில் அம்பியும், அந்நியனுமாக மாறி மாறி அவர் பணிந்து, கர்ஜிக்கும்போது மற்றொரு நேஷனல் அவார்டு தெரிகிறது. ‘நான் எத்தனையோ நடிகர்களைப் பாத்திருக்கேன்.... உன்னை மாதிரி பார்த்ததில்லைடா’ என்று பிரகாஷ்ராஜ் பிரமித்துச் சொல்வது நிஜமான சர்ட்டிஃபிகேட். ‘ரெமோ’ விக்ரம், இளம் பெண்களின் இதயத்தைப் பிக்பாக்கெட் அடிக்கப் போவது நிச்சயம். விக்ரம் நடிப்பில் எங்கோ... எங்கோ.... போய் விட்டார்.

அப்பேர்ப்பட்ட ஜாம்பவான் விக்ரமிற்குக் கொஞ்சமாவது ஜோடியாகப் பொருந்துகிறாரா சதா? ம்ஹ§ம். ரொம்ப சாதா. ‘‘இந்த சப்ப ஃபிகருக்காக நீ ஏண்டா உருகற?’’ என்று விவேக் ஸேம்ஸைடு கோல் போடுமளவுக்கு அய்யோ பாவம்.

கிராஃபிக் டெக்னாலஜியைப் பொறுத்தவரை ‘மாட்ரிக்ஸ§’க்கு நான் கொஞ்சமும் சளைத்தவனில்லை என்று நிரூபித்திருக்கிறார் ஷங்கர். அந்த கராத்தே பள்ளியின் ‘டைம் ஸ்லைஸ்’ ஸ்டண்ட் காட்சி ஜாக்கிச்சானையும் வாய்ப் பிளக்க வைக்கும்.

ரவிவர்மனும், மணிகண்டனும் காமிராவில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அகிலா, ஜிம்மி ஜிப், ராம்பிங், ஸ்டடிகேம் என்று சுனாமி மாதிரி சுழன்றடித்திருக்கிறார்கள். இமைகள் மூடும் போது ஷாட் மூடுகிறது. ஒவ்வொரு கொலையின் போதும் தலைமுடி விÊயூஃபைண்டரின் முன்னே ஆடியபடி விழுகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

சுஜாதாவின் வசனத்தில் நிறைய மிளகாய்ப் பொடி. ‘பூச்சியெல்லாம் அந்தக்காலம். இப்ப டைனோஸார் மணினு ஒருத்தர் பாடறார்’ போன்ற இயல்பான நகைச்சுவையும் உண்டு.

ஆர்ட் டைரக்ஷனையும் பாராட்ட வேண்டும். ‘ரண்டக்க, ரண்டக்க பாடலில் கிராமம், மலை, பாலம், லாரி, கார் என்று பிருமாண்டமாக வர்ணம் பூசி அட்டகாசம் செய்திருக்கிறார்கள். காட்சிகளின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு ப்ராப்பர்ட்டியிலும் துல்லியமான நேர்த்தி. நூறுகோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட, உலகில் வேறெங்கும் இல்லாத ஜாதி அமைப்பு முரண்பாடு சிக்கல்கள் கொண்ட மிகப் பெரும் தேசமான இந்தியாவை தம்மாத்தூண்டு சிங்கப்பூருடன் ‘கம்பேர்’ செய்து விமர்சனம் பண்ணும் மிக மேலோட்டமான அணுகுமுறை சலிப்பை ஏற்படுத்துவது உண்மை. ஃபேண்டஸியா, யதார்த்தமா என்று கதை சொல்லும் பாணியிலும் ஒரு தடுமாற்றம் தெரிகிறது. மற்றபடி, அந்நியன்_

இன்னொரு அல்ட்ரா மாடர்ன் இந்தியன்!

http://www.unmaionline.com/2005071/2005071u1.html

அந்நியன் - என்ற ஒரு படம் தயாரிக்கப் படுவதாக தகவல் வந்த போதே அது நிச்சயம் பார்ப்பன ஆதரவுப் படமாக இருக்கும் என ‘உண்மை’யில் எழுதியிருந் தோம். குடுமி வைத்து நாமம் போட்ட ஒரு பார்ப்ப னக் கதாபாத்திரம்தான் அந்த அந்நியன் என்பதை, அன்று வெளிவந்த நடிகர் விக்ரமின் புகைப்படம் உணர்த்தியது.
பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித இனத்திற்கே அந்நியர்கள். பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று தம்மைக் கூறிக்கொண்டு பிற மக்களோடு அந்நியப்பட்டே வாழுகின்றனர், தம் செயலாலும் சிந்தனையாலும்.

இந்த அந்நியனை இயக்கியிருப்பவர் ஷங்கர். இவர் பார்ப்பனர் அல்ல; தமிழர் தான். ஆனால் இவரின் முதல் படம் தொட்டு இந்த அந்நியன் வரை இவருக் குப் பின்புலமாகச் செயல்படுவது பார்ப்பன பால குமாரனும் சுஜாதாவும். இந்த சகவாசத்தால் ஒன்றரைப் பார்ப்பனராகவே மாறிப் போனார் ஷங்கர்.

பார்ப்பனியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தம்மை இறுத்திக் கொள்ள புதுப்புது உத்திகளைக் கையாலும். சூத்திர அடிமைகளை கைக்கொள்ளும் முறையை வரலாற்றை வாசிக்கும்போது உணரமுடியும். வாய் வழியாகப் பரப்பப்பட்ட இராமாயணம் எழுத்து வடிவமாக்கும் காலத்தில் ஒரு திறமை வாய்ந்த கவிஞன் கம்பனை பார்ப்பனியம் பயன் படுத்திக் கொண்டது. அவன் கற்ற தமிழ்ப் புலமை தமிழினத்திற்கு துரோகம் செய்தது. இராம அவதாரம் தமிழர் பண்பாட்டில் சிதைவை ஏற்படுத்தி பார்ப்பனியம் புகுந்தது.

இன்றைய திரை ஊடகக் காலகட்டத்தில் பார்ப்ப னர்களுக்குக் கிடைத்த கம்பன்தான், இந்த ஷங்கர்.

திரைப்படத் தொழில் நுட்பத்தின் நுணுக்கங் களைக் கற்றுக் கொண்டு பார்ப்பனப் பாதந்தாங்கி யாக அவதாரம் எடுத்துள்ளார் ஷங்கர். இவரது முதல் படம் ஜென்டில்மேனில் இட ஒதுக்கீடுக்கு எதிரான கருத்தே கதையானது. பின் அடுத்ததடுத்த படங்களி லும் உயர் ஜாதியச் சிந்தனைகள், இந்தியன் என்னும் பெயரில் போலி உணர்வைத் தூக்கிப் பிடித்தல், பார்ப்பனக் கலாச்சாரத் தாக்கம் போன்றவை இடம் பெற்றிருக்கும். கூடவே கவர்ச்சி என்னும் பெயரில் ஆபாசமும் இருக்கும். அந்நியனுக்கு முந்தைய ‘பாய்°’-ல் முழுக்க ஆபாசம் மட்டுமல்ல வக்கிரமே நிரம்பி இருந்தது. இதுதான் ஷங்கர்.

சரி, அந்நியனின் கதை என்ன?

ரூல்° ராமானுஜம் என்னும் அய்யங்கார் பார்ப்பான் தான் கதாநாயகன். எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்கவேண்டும், நியாயமாக நடந்து கொள்ளவேண்டும், நீதி தவறக்கூடாது என்பது இவரது குணம். (பிறவி பேதம் பேசும் மனுநீதியைப் பின்பற்றும் பார்ப்பனர்கள் நீதி நியாயம் பேசலாமா?) இதற்காக குரல் கொடுக்கிறார். கண்ணில் படும் தவறையெல்லாம் கண்டிக்கிறார். உலகில் யாரும் நேர்மையாக இல்லையே என அழுகிறார். இது இவரது ஒரு முகம். இவரே அந்நியன் என்ற இன்னொரு அவதாரம் எடுக்கிறார். தவறு செய்பவர்களை தண்டிக்கிறார். அதற்கு கருட புராணம் என்னும் ஒன்றைக் காட்டி அதில் கூறப்பட்டுள்ளவாறு தண்டனை தருகிறார். சம°கிருத °லோகங்களைச் சொல்லுகிறார். அந்தக் கொலைகளுக்கு கருட புராணத்திலுள்ளவாறு சம°கிருத பெயரைச் சூட்டு கிறார். இவரே, தான் விரும்பும் பெண்ணை அடைய ரெமோ என்ற மூன்றாவது முகத்தையும் காட்டுகிறார். ஒருவரே இப்படி மூன்று வடிவமெடுப் பதற்கு ஆரடவiயீடந யீநசளடியேடவைல னளைடிசனநச என்று பெயர் எனச் சொல்லுகிறார்கள் இயக்குநர் ஷங்கரும், வசன கர்த்தா சுஜாதாவும். இதற்கு இண்டர்நெட்டிலிருந்து ஆதாரங் களைக் காட்டுகிறார்கள். முடிவில் ‘ரூல்°’ ராமானுஜம் செய்த கொலைகளுக்கெல்லாம் சட்டப்படி தண் டனை கிடையாது என்று நீதி மன்றம் விடுவித்து விடு கிறது. இதுதான் கதை. இந்தக் கதை மீது நமக்கென்ன கோபம் என்கிறீர்களா? சொல்கிறோம் கேளுங்கள். பார்ப்பன ரூல்° ராமானுஜத்துக்குக் கண்ணில்படும் தனிமனித ஒழுக்கம் தவறியவர்களெல்லாம், சட்டத் தைக் கடைப்பிடிக்காதவர்களெல்லாம் தமிழர்கள், கருப்புத் தோல்காரர்கள் அதாவது சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள். அந்தக் கதாபாத்திரங்களின் தோற்றமும் அவர்கள் செய்யும் பணிகளும் இதனை எளிதாய் கூறுகிறது.

அழுக்கு சட்டை கைலி, சீவாத தலை, மழிக்காத முகம், காலையிலேயே கூயளஅயஉ ஒயின்° ஷாப்பில் பிராந்தி குடித்துவிட்டு சைக்கிளில் செல்லும் ஒருவர் ரூல்° ராமானுஜம் மீது எச்சில் துப்பி விடுகிறார். இதனால் கோபப்படும் ‘ரூல்°’சை, அலட்சியப் படுத்தி செல்லும் அந்த மனிதரைக் கொல்கிறார் அந்நியன். இந்த மனிதரால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லையாம்; அதனால் கொன்று விடலாமாம். இது அந்நியனின் தத்துவம். நமது கேள்வி இதுதான். அவன் அந்த நிலையில் இருக்க யார் காரணம்? அவனுக்கு கல்வியும் வேலையும் கொடுக்காதது யார் குற்றம்? 57 ஆண்டு சுதந்திர இந்தியாவில் அமைச்சர் களாகவும், அதிகாரிகளாகவும் ஆளுவோர்களாகவும் பெரும்பா லும் இருந்த பார்ப்பன வர்க்கம் ஏன் பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை?

அடிப்படை மனித உரிமை யிலிருந்து வாழ்வியல் உரிமை, கல்வி உரிமை வரை ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருக்கிறதே ஏன்?

பார்ப்பன மதமும், கடவுளும், ஜாதிப் பாகுபாடும் உலகில் உள்ள மற்ற மனிதர்களைப் போல வாழவிட வில்லையே?

இத்தனை தவறுகளையும் பார்ப்பான் செய்து விட்டு குடிகாரன் மீது கோபப்படுவது அவனைக் கொல்வது எப்படிச் சரியாகும்? நீதிமன்றமும், சட்டமும் இருக்கும் போது கொலை செய்வது கோட்சேயின் சித்தாந்தமல்லவா?

விபத்துக்குள்ளான ஒருவரை காரில் ஏற்றிச் செல்லுமாறு ஒருவரை நிறுத்துகிறார் ‘ரூல்°’. அவர் வண்டியை நிறுத்திவிட்டு பின் ஏற்றிக் கொள்ளாமல் சென்று விடுகிறார்.

பின்னர், ஒரு ஆம்புலன்சை அழைத்து மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார் அங்கு உயிர் போகிறது. அரை மணி நேரம் முன்னே வந்திருந்தால் உயிர் போயிருக்காது என்று மருத்துவர் கூறுகிறார். இதனால் கோபம் கொண்டு காரை நிறுத்தாமல் போனவரை எருமை மாடுகளை மிதிக்க வைத்து அந்நியன் கொல்லுகிறார்.

இதில் தவறு கார் உரிமையாளர் மீது அல்ல என்பது படம் பார்க்கும் எல்லோருக்கும் புரிகிறது. சென்னையில் தொலைபேசி செய்த உடனேயே ஆம்புலன்° கிடைத்துவிடும். இது இன்றைய மருத்துவ வளர்ச்சி. அப்படி இருக்க ஏன் வழியில் போகும் கார்களை நிறுத்த வேண்டும்? கார்கள் நிற்கவில்லை என்றவுடன் ஆம்புலன்°-சுக்குப் போன் செய்யும் ‘ரூல்°’, அதனை முன்பே செய்திருந்தால் அந்த உயிரைக் காத்திருக்க முடியதா? யார் காதில் பூ சுற்றுகிறார் ஷங்கர். இங்கே ‘ரூல்°’தான் குற்ற வாளியே தவிர கார் உரிமையாளர் அல்ல.

இதேபோல ஒரு ரயில் கேண்டின் உரிமையாளர், தொழிலதிபர், வீட்டு உரிமையாளர் ஆகியோரை கருட புராணத்தில் சொன்னபடி எண்ணெய் சட்டியில் வறுத்தும், அட்டைகளை விட்டு கடிக்கச் செய்தும், பாம்புகளை விட்டுக் கொத்தச் செய்தும் கொல்லுகிறார் அந்நியன். இப்படி தவறு செய்யும் பார்ப்பனரல்லாதாரைக் கொல்லும் அந்நியன், ஒரு பார்ப்பனரையும், ஒரு பார்ப்பனத்தியையும் விட்டு விடுகிறார்.

இங்கேதான் மனு நீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் பார்ப்பன சித்தாந்தம் ஓங்கி ஒலிக்கிறது.

தன்னைக் காதலிக்க மறுக்கும் பார்ப்பனத்தியைத் காக்கும் போது மட்டும் ஆரடவiயீடந யீநசளடியேடவைல னளைடிசனநச வற்று அந்நியன் ‘ரெமோ’வாகி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறார். இதேபோல இன்னொரு சங்கீத சபா செயலாளரிடம் (பார்ப்பனர்) சபாவில் தம் காதலிக்கு பாட வாய்ப்புக் கேட்டு போகிறார். எம்.பி சிபாரிசில் தகுதி இல்லாதவருக்கு வாய்ப்புக் கொடுக்கும் சபா செயலாளர் கதாநாயகிக்கு வாய்ப்பை மறுத்துவிட குடுமி சிலுப்ப எழுந்து அந்நியனாக மாறுகிறார் அம்பி. ஆனால் இவரது அடிக்கு பயந்து மட்டுமே(எப்படி பாடுகிறார் என்று கேட்காமலே) வாய்ப்புக் கொடுத்ததும் ‘அந்நியன்’ மலையேறி விடு கிறார். இப்படி வாய்ப்புக் கொடுத்த சபாக்காரருக்கு தண்டனையிலிருந்து விடுதலை. மிரட்டியே வாய்ப்புப் பெற்ற அந்நியனுக்கு என்ன தண்டனை?.

சூத்திரர்கள் உயிர்ப் பிச்சை கேட்கும் போதெல் லாம், மன்னிப்புக் கேட்கும் போதெல்லாம் கருணை காட்டாத அந்நியன், ஆரடவiயீடந யீநசளடியேடவைல னளைடிசனநச ஏற்பட்டு வேறு வடிவம் கொள்ளாத அந்நியன் பார்ப்பனர்கள் மீது மட்டும் பரிவு காட்டுவது ஏன்? ஷங்கரும், சுஜாதாவும் பதில் சொல்வார்களா? பைத்தியம் பிடித்தாலும் பார்ப் பானுக்குப் பூணூல் பாசம் போகாதே!

ஷங்கர் கண்களுக்கு தவறு செய்யும் பார்ப்பனர் கள் யாருமே தென்படவில்லையா? நாட்டை வி°கி பாட்டிலுக்குச் காட்டிக் கொடுத்ததி லிருந்து சங்கர் ராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள சங்கராச்சாரி கள் வரைக்கும் பார்ப்பனர்கள்தானே. இதுவரை இந்தியாவில் நடந்துள்ள பல ஊழல்களிலும் தொடர்புள்ளவர்களைப் பட்டியல் போட்டால் அரசு நிர்வாக ரீதியாக துணை போனவர்களையெல் லாம் பார்ப்பனர்கள் தானே அதிகம் இருப்பார்கள்.

படத்தில் எதற்கெடுத்தாலும் ரூல்° பேசும் ராமானுஜம், எந்த சட்டத்தின்படி பூணூல் போட் டுள்ளார்? எந்தப் பிரிவின் படி நாமம் போட்டு குடுமி வைத்துள்ளார்? அனைவருக்குமான சட்டப்படியா? மனுதர்மப்படியா? சொல்ல முடியுமா?

உலகில் மரண தண்டனைக்கு எதிராக வலுவான கருத்து உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில் கொடும் வன்முறை மூலம் மனித உயிர்களைப் பறிக்கும் செயலுக்கு ஊக்கமளிப்பது மனித நேயம் உள்ளவன் செய்யும் செயலா?

ஜப்பான் குண்டு வீச்சுக்குப்பின்னும் அழிவிலி ருந்து மீண்டு வளர்ந்துவிட்டது. இந்தியா ஏன் வளர வில்லை தெரியுமா? அதற்குக் காரணம் தனிமனித ஒழுக்கமின்மை, சட்டத்தை மதிக்காமை போன்றவை தான் என்கிறார் சுஜாதா.

ஜப்பானில் ஜாதி முறைகள் இல்லை; யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை, எல்லோருக்கும் உழைக் கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவைப் போல மதப் பிரிவுகளும், ஏராளமான கடவுள்களும் அங்கு இல்லை. அதனால்தான் ஜப்பான் முன்னேறியுள்ளது. ஆனால் இத்தனை கொடுமைகளையும் வைத்துக் கொண்டு இன்னும் அதனை நியாயப்படுத்தும் பார்ப்பனக் கூட்டம் இருக்கும் வரை இந்தியா எப்படி வளரும்?

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை இவைகள்தானே.

கறுப்புப் பணத்தால்தான் இந்தியாவுக்குச் கேடு என்று சுஜாதாவும் ஷங்கரும் சொல்கிறார்கள். சரிதான்; உண்மைதான்; ஒப்புக் கொள்வோம்.

அந்நியன் படத்துக்கு ஷங்கருக்கு சம்பளம் ரூ. 7 கோடி என்று கூறப்படுகிறது. இதில் எவ்வளவு வெள்ளை? எவ்வளவு கறுப்பு? ஷங்கர் வெளிப்படுத் துவாரா? கறுப்புப் பணம் புழங்காமல் சினிமாத்துறை இயங்க முடியுமா? உள்ளே உட்கார்ந்து கொண்டு உருட்டி உருட்டி திண்று விட்டு ஊருக்கு உபதேசம் செய்வதா?

கறுப்புப் பணம் புரளும் சினிமாத் துறை மீது அந்நியனின் கருட புராணக் கத்தி பாயாதது ஏன்?

அந்நியன் படம் பெரிய பட்ஜெட் படம். 25 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதனால் தியேட்டர்களில் டிக்கட் விலையை 20 ரூபாய் ஏற்றியுள்ளார்கள். (டிக்கெட்டுக்கு கொடுத்த பணத்துக்கு மதிப்பில்லை என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருவோர்) இது எந்த ‘ரூல்°’ படி? ஷங்கர் வாய் திருப்பாரா? இது போக ப்ளாக்கில் பல மடங்கு கூடுதல் விலையில் ஷங்கரின் அந்நியன் டிக்கட்டுகள் விற்கப்படுகின்றன. இதையெல்லாம் ஷங்கரின் அந்நியன் தண்டிக்க மாட்டாரா? குறைந்தபட்ச பொது நல உணர்வும் படத்தில் கூறும் நேர்மையும் இருந்தால் ஷங்கரும் சுஜாதாவும் சம்பளமில்லாமல் அந்நியன் படத்தில் பணி புரிந்திருக்க வேண்டும்.

அந்நியன் படம் நியாயமான, ஏற்கனவே உள்ள கட்டணத்தில் காட்டப் படும் என்று அறிவித்திருக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை?

தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். அது இல்லாதவர்களைக் கொல்லும் ஷங்கரையும், சுஜாதாவும் கேட்கிறோம். உங்களது இந்து மதத்தில் ஒழுக்கமுள்ள ஒரு கடவுளைக் காட்டத் தயாரா? இராமாயண, மகாபாரதக் கதைள் போதிக்கும் தனி மனித ஒழுக்கம் பற்றி வண்டி வண்டியாக எழுதலாமே. அவ்வளவும் அசிங்கமல்லவா? சுஜாதாவின் மதம் போதிப்பது இதைத்தானே. அவ்வளவு தூரம் போவானேன். அண்மையில் கைதான காஞ்சி ஜெகத்குரு சங்கராச்சாரியாரின் தனிமனித ஒழுக்கம் நாற்றமெடுத் ததே. அம்மாமிகளின் சங்கதிகளெல்லாம் வெளிவந்ததே. நக்கீரனில் ரவி சுப்ரமணி யன் எழுதும் “நானும் அவரும்” தொடர் இதனைப் பற்றி ஏராளமாகச் சொல்லுகிறது.

அறிவு நாணயமும், கொஞ்ச மாவது சொந்தச் சரக்கும் இருந் தால் இத்தொடருக்கும், அதே நக்கீரனில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற தொடரில் அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதுவதற்கும் சுஜாதா மறுப் பெழுதட்டும். பிறகு சூத்திர, பஞ்ச மர்களைப் பற்றி கதை எழுதலாம்.

படம் முழுக்கவே பார்ப்பன வாடை. பார்ப்பனர்கள் நல்லவர்கள்; மிகவும் அப்பாவிகள்; நியாயத்திற் குக் குரல் கொடுப்பவர்கள்; எல்லா இடங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்கள் என்ற பிம்பத்தையே படம் உணர்த்துகிறது. “ஊழல் செய்வதெல்லாம் கருப்புத் தோல் தமிழர்கள் தான்; அந்தக் காலத்திலெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே பணியில் இருந்த போது இப்படியெல்லாம் இல்லை” என்ற உணர்வை திட்டமிட்டு ஊட்டு வதற்குக் காரணம் உங்களையெல்லாம் படிக்கவிட்டதுதான் தவறு என்ற எண்ணத்தை மக்கள் நெஞ்சில் நஞ்சாக விதைக்கத்தான்.

படத்தில் ஒரு வழக்கு மன்றக் காட்சி, “சட்டப்படி உன்னைத் தண்டிக்க முடியாது” என்று ‘ரூல்°’-ன் தந்தை (வழக்குரைஞர்) கூறுகிறார். இதற்கு ஆரடவiயீடந யீநசளடியேடவைல னளைடிசனநச -அய் காரணமாகக் காட்டுகிறார். காந்தியைக் கொன்ற கோட்சே கீதையைக் காட்டி “நான் கொன்றது இந்து தர்மப்படிதான்” என்று கூறி தண்டனையிலிருந்து தப்ப முயன்றதை இந்தக் காட்சி நினைவுபடுத்துகிறது.

அந்நியனுக்கு ஏற்பட்டுள்ள நோயை முழுவதும் குணமாக்காமல் பாதி சிகிச்சையிலேயே குடுமியை வெட்டி அனுப்பிவிடுகிறார் மருத்துவர். அந்நியன் சொல்லும் அலட்சியத்தனத்தில் பாதியில் அனுப்பிய மருத்துவருக்கு என்ன தண்டனை?

இறுதிக் காட்சியில், ‘ரூல்°’-ன் நோய் குணமாகாமலேயே ரயிலில் குடிக்கும் ஒருவரைக் கொலை செய்கிறார். அதோடு படம் முடிகிறது. இதிலிருந்து ஷங்கரும் சுஜாதாவும் சொல்ல வருவது இதுதான். இனிமேலும் ‘ரூல்°’ அந்நியன் வேடத்தில் அற்ப காரணங்களுக்காக யாரையும் கொலை செய்வார்; அதற்குத் தண்டனையே கிடையாது. அதாவது பார்ப்பான் எது வேண்டுமானாலும் செய்வான் அவனுக்கு தண்டனை கிடையாது என்று மனுநீதியைப் புதுப்பிக்கும் பார்ப்பன வன்மத்தின் அடையாளம்தான் இந்த ‘அந்நியன்’. மாற்று மதத்தினர் மீது காழ்ப்புக் கொள்வது வன்முறையின் மூலம் அவர்களை அழித் தொழிப்பது போன்ற இந்துத்துவ வெறியை ‘ஃபேன்டஸி’யாக சொல்லியிருக்கிறது இந்த அந்நியன். உடம்பெல்லாம் மனித விரோத விஷம் மட்டுமே பரவியிருப்பதால் அந்நியன் விஷத்தை மட்டுமே கக்குகிறது .



‘அந்நியன்’ படம் பார்த்துவிட்டு வெளியில்
வரும் இரண்டு பார்ப்பனப் பெண்கள்...
“ஏண்டி, இந்த மாதிரி அசட்டு அம்பியை யாருதான் கட்டிப்பா?”

“ஆமா நம்ம பசங்க எல்லாமே அம்பியாட்டமேதான் இருக்கா, நேக்கும் ‘ரெமோ’தான் புடிச்சிருக்கு”

“சரி, இதெல்லாம் இருக்கட்டும், நாம காலேஜ் போகாம கட்டடிச்சுட்டு, கடமை தவறி வந்து படம் பாத்துண்டிருக் கோமே அந்நியன் வந்துட்டா என்னடி பண்றது?”

“அடிப்போடி, அந்நியன் நம்மளை ஒன்னும் பண்ண மாட்டான் ஏன்னா நாம அய்யங்கார வீட்டு அழகாச்சே”

(இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள்)



நான் வசூலை அள்ளிய பிறகு...



அப்போ, இப்போ என்று இந்தப் படம் எப்போ வரும் என்பது கடந்து ஆறு மாத காலமாக பத்திரிக்கைகளில் செய்தியாகிக் கொண்டிருந்தது. கடந்த ஏப். 14ல் வெளியிடப்பட இருப்பதாக செய்திகள் வந்தன. பிறகு மே மாதத்தில் தேதிகள் சொல்லப்பட்டன. நாட்கள் நகர்ந்ததற்கு திரைமறைவில் நடந்த சில விஷயங்கள் தான் காரணம் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம். ஆரடவiயீடந ஞநசளடியேடவைல னுளைடிசனநச என்ற இந்த நோயை வைத்து கடந்த ஏப்ரல் 14ல் சந்திரமுகி படமும் வெளிவந்தது.
எனவே “ஒரே நேரத்தில் வெளி யிட்டால் இருவருக்கும் லாப மில்லை. அதனால் முதலில் நான் வெளியிட்டு விடுகிறேன். நான் 50 நாள் வசூலை அள்ளிய பிறகு நீங்கள் வெளியிடுங்கள்” என்று ரஜினி கேட்டுக் கொண்டதால் தான் படம் இவ்வளவு நாள் தாமதம் என்கிறது மேற்படியார் தரப்பு.



தமிழ்நாட்டின் முதல் குற்றவாளிகள் யார்?



ஷங்கர், ரங்கராஜன் அய்யங்கார் (சுஜாதா) போன்ற அறிவு நாணயமற்ற அறிவு ஜீவிகள் ஒவ்வொரு காட்சியி லும், தங்களது பார்ப்பன அரசியல் மோசடிகளையும், சூழ்ச்சி களையும், வன்மங்களையும், நேர்மையற்ற முறையிலும், திறந்த மனதுடன் விவாதிக்க மறுத்து குழப்பமான வகை யில் பரப்பி வைத்திருக்கும் நிலையில் அந்நியனது ஒவ் வொரு ‘பிரேமும்’ கடுமையான கண்டனத்திற்குரியதாக இருக்கிறது.
திரைப்பட இயக்குநர் ஒரு பக்கச்சார்பாக (வர்க்க-சாதி) நின்று தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ற காட்சி களை தொகுத்து நம்முன் வைக்கும் போது, திறந்த மனதுடன் அவர்களுடன் விவாதிக்க வாய்ப்பற்றுப் போய் விமர்சகனும் தனது வர்க்க சாதிக் கண்ணோட் டச் சார்புக் கேற்ப தனது நியாயங்களை முன் வைத்து சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உழைக்காமல் சோம்பித்திரிபவனுக்கு மரண தண்டணை வழங்கும் ஷங்கருக்கும், வசனம் எழுதி நியாயப்படுத்திய சுஜாதா ஐயங்காருக்கும் நாம் சில நினைவூட்டல் கேள்விகளை எழுப்ப வேண்டியுள் ளது. உழைக்காத சோம்பேறிகளுக்கு மரணதண்டனை என்றால் தமிழ்நாட்டின் முதல் குற்றவாளிகள் யாராக இருக்க முடியும்?

திரைப்படத்தில் காட்டப்படும் விளிம்புநிலை மனிதன் கொத்து வேலை செய்யும் தன் அப்பன் ஆத்தா பணத்தை பிடுங்கி தண்ணி அடிப்பதாக காட்டப் படுகிறது. ஆனால் ஊரார் பணத்தில் பருப்பும் நெய்யும் தின்று கொளுத்துப்போய் தன்னிடம் ஆசிவாங்க வந்த பாப்பாத்திகளை விதவிதமாக சீண்டிப் பார்த்த சங்கரன்கள் என்ன மண்வெட்டி பிடித்து தினமும் உழைத்துக் கொண்டா இருக்கிறார்கள்? உங்கள் அந்நியன் /அம்பி பார்வைக்கு அது ஏன்படவில்லை?

கூஏளு 50 வண்டியின் பிரேக் கேபிள் விற்பனை செய்யும் மார்வாடி சேட்டிடம் அம்பி கோபம் கொள்கிறான்; அவன் அதனை உற்பத்தி செய்த எத்திராஜீலு நாயுடு முகவரியைக் கொடுக்கிறான். நாயுடுவை அந்நியன் அட்டைகளை விட்டு கொள்கிறான். அந்த தண்டனைக்குப் பெயர் கிருமிபோஜனமாம், ஏன் கூஏளு சுந்தரம் ஐயங்காரை எதிரி என்று காட்டு வதற்கு எது உங்களைத் தடுத்தது. உங்கள் அந்நியன் அடிக்கடி பேசும் வசனம் இந்தியாவில் தயாராகும் எதுவும் தரமில்லை. அதில் கூஏளு அய்யங்காரது உற்பத்தியும் அடக்கம் தானே? அவரைநோக்கி ஷங்கரின் அந்நியன் கத்தியை நீட்டாதது ஏன்?

சமீப காலத்தில் உழைக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கூலி ஏழைவிவசாயிகள் வறுமையின் காரணமாக விஷம் குடித்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும் நாம் கேள்விப்பட்டதுதான். இதற்கெல்லாம் காரணமான ஆளும் வர்க்கத் தின்/ அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு உயர்தட்டில் வாழும் ஷங்கரும், சுஜாதா ஐயங்காரும் இல்லையா?

இந்தக் குற்றங்களுக்கும் இதற்கு முந்தய வரலாற் றில் தமிழ்ச் சமூகத்திற்கு பார்ப்பனர்கள் செய்த குற்றத்திற்கெல்லாம் தண்டிக்க வேண்டும் என்று பார்ப்பனரல்லாதார் புறப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் பார்ப்பன இனத்தின் நிலை என்னவாகியிருக்கும்?


-குமரன்தா°



--------------------------------------------------------------------------------


பத்திரிக்கைகளின் பார்வை இப்படி...



‘கல்கி’யின் இனப்பாசம்
“பிராமண சமுதாய மக்களைக் கிண்டலுக்கும், நகைச்சுவைக்கும் பயன்படுத்தி வந்திருக்கும் சமீப கால தமிழ் சினிமாவில் ராமானுஜம் பாத்திரம் அசத்தல் விதி விலக்கு” என்று கல்கி (26.6.05) புளகாங்கிதம் அடைந்து அந்தப் பாத்திரமேற்ற விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது கொடுக்கலாம் என்றும், ஷங்கரின் சமூகப் பொறுப்புணர்ச்சிக்கு தலை வணங்கலாம் என்றும் கூறுகிறது. படத்தை ஆகா... ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியுள்ளது கல்கி.


மேலோட்டமான அணுகுமுறை
“நூறு கோடி மக்கள் தொகை கொண்ட, உலகில் வேறெங்கும் இல்லாத ஜாதி அமைப்பு முரண்பாடு சிக்கல் கொண்ட மிகப்பெரும் தேசமான இந்தியாவை தம்மாத்தூண்டு சிங்கப்பூருடன் ‘கம்பேர்’ செய்து விமர்சனம் பண்ணும் மிக மேலோட்டமான அணுகுமுறை சலிப்பை ஏற்படுத்துவது உண்மை” என்று குமுதம் (29.6.2005) கூறுகிறது. இதே குமுதம் இரண்டு வாரங்களாக “நான் தமிழன்” என்ற தொடரை ஜாதி வாரியாக எழுதத் தொடங்கியுள்ளது.


100க்கு 48
வழக்கமான சினிமா பார்வையில் ஒன்றிரண்டு குறைகளைச் சொல்லி விட்டு, படத்தை பாராட்டி எழுதி 100க்கு 48 மார்க் போட்டுள்ளது ஆனந்த விகடன்.


ஆபத்தான சிந்தனை
திரைப் பார்வையில் மிகச் சரியாக அந்நியனின் குறைகளையும், ஷங்கரின் நம்ப முடியாத பிரமாண்டங் களையும் சுட்டிக் காட்டியுள்ள இந்தியா டுடே (ஜூலை 6, 2005), ஷங்கரின் “இந்தியன்” படத்தை “பாசிச சினிமா” என்று வர்ணித்த இயக்குநர் கோவிந்த் நிஷ்லானியின் கருத்தை நினைவு கூர்ந்துள்ளது.

“ஷங்கரின் படங்களில் நிலவும் மேல் ஜாதி ஆதரவு தனியாக ஒரு பெரிய கட்டுரையில் விவாதிக்கப்படடி வேண்டியது. ‘அந்நியன்’ ஆபத் தான சிந்தனையை முன் வைக்கிறது” என்ற இந்தியா டுடேயின் கருத்து பாராட்டப்படவேண்டியதாகும்.


புண்ணியனாம்...
சன் டி.வி.யின் திரை விமர்சனத்துக்கு ஏற்கனவே ரொம்ப நல்ல (?) பெயர். தாங்கள் வாங்கும் படங்களை நெம்பர் 1 என்பார்கள். வாங்க முடியவில்லை என்றால் ஒரே ‘போர்’ என்பார்கள். ஷங்கரை வெகுவாகப் புகழ்ந்து விட்டு “தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் புண்ணியன் இந்த அந்நியன்” என்று கூறுகிறது சன் டி.வி.



--------------------------------------------------------------------------------




நம்புங்கள், இந்தப் படத்திற்கு ‘ரு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. கொடூர வன்முறையாளன், கொலைவெறி யாளன்- இந்த கதாநாயகன் ஆனாலும் படத்துக்கு ‘ரு’ சான்றிதழ் எப்படிக் கிடைத்தது? என்று எல்லோரும் வியக் கிறார்கள். ‘படம் பார்த்தார்களா இல்லை யான்னு தெரியலை?’ என்கிறார்கள். படம் பார்க்காமல் தான் ‘ரு’ சர்டிபிகேட் கொடுத்திருப்பார்கள். ஏன்னா கத்தியைப் பார்த்தாலே குதிக்கிற நம்ம சென்சார்போர்டு எப்படி விட்டிருக்கும்.
‘அய்யங்காரு கதை’ன்னதும் நாமத்தை மனசுல வச்சுக்கிட்டு ‘ரு’ சர்டிபிகேட் கொடுத்துட்டாங்கபோல, படத்தை பார்த்திருந்தாங்கன்னா ‘ஞு’ சர்டிபிகேட் கொடுத்திருப்பாங்க. ஏன்னா ஹீரோ போட்டிருப்பது ஒற்றை நாமமாச்சே. படத்துக்கு வசனமெழுதினது சுஜாதா வாச்சே. (‘ஈர்க்குச்சியில இழுத்த கோடு’ன்னு, இதே சுஜாதா இந்தியன் படத்தில வசனம் எழுதியிருந்தாரே - இதுக்குப் பேர்தான் சுய விமர்சனமோ!?)



--------------------------------------------------------------------------------


மனுதருமத்தின் ‘கா°ட்லி’ மறுபதிப்பு
பல வண்ணங்களில், ஆர்ட் பேப்பரில் அச்சடித்து, நேர்த்தியான பைண்டட் வால்யூமாகத் தருவதைப் போலத்தான் இதுவும். “தவறு செய்யும் சூத்திரனுக்கு சிரச்சேதம் (தலை); பார்ப்பானுக்கு மட்டும் சிகைச்சேதம் (தலைமுடி)” என்று கூறும் மனு தருமத்தை நிலைநாட்ட, நினைவூட்ட ஷங்கர் வெளியிட்டிருக்கும் டிஜிட்டல், கிராபிக்°, டைம் °லை° என்ற கட்டமைப்பிலான மனு தருமத்தின் ‘கா°ட்லி’ மறுபதிப்புதான் அந்நியன்.

From: "Mythili Narayanan" Subject: Anniyan .vimarsanam

இன்னிக்கு ராத்திரிக்குள்ள
அந்நியன்படவிமர்சனம்
மன்னுபுகழ் மரத்தடில வரலேன்னா
புண்ணியமே இல்லைன்னு' புருடா' புராணத்துல போட்ருக்காம்!


அந்நியன்
*******
இந்த ஸ்ரீரங்கம் சின்னபட்டுமாமிக்கு அந்நியன் படத்துல அம்பிதான்
ஸ்ரேஷ்டமாத் தெரியறான். அந்தக் கண்ணாடியப் பாத்துண்டு கைல குழைச்ச ஸ்ரீசூர்ணத்தை வெள்ளிக் குச்சீல தடவி
நெத்தில இட்டுக்கற அழகென்ன...இறுக்கிகட்டின குடுமியோட டூவீலர்ல ஆபீஸ் போறப்போ
சாலைல நடக்கற அக்கிரமம் பாத்து ஆத்தாமையா குரல் கொடுக்கறதென்ன...கெணத்திடில சொம்புல ஜலத்தை
மொண்டு விட்டுண்டே புலம்பறதுதான் என்ன....?
அந்தப்பையன் விக்ரம் அம்பியா தத்ரூபமா நடிச்சிருக்கான். சட்டத்தை மதிக்காதவாளைப்பாத்தா பதறிப் போயி
ட்றான். நந்தினிய ரொம்ப ஆழமாக்
காதலிக்கறதை கடுதாசில எழுதி அவ அம்மா அப்பாட்ட போயி 'அபிவாதயே'சொல்லி அதைக்
கொடுக்கறதுலதான் அவனோட வெகுளித்தனம் கொள்ளிடத்து சலவை மாதிரி பளிச்சுனு தெரியற்து. கடுதாசிய
நந்தினி படிக்கற்ச்சே மேம்பால்த்துல
ஒரு நடை நடப்பான் பாருங்கோ...ச்சாரி சொல்றாப்ல கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்துவோட
கம்பீர நடைதான் போங்கோ!

அவன் அம்மாகிட்ட சொல்லி வீதி மண் எடுத்து சுத்தி போடச் சொல்லணும்

அய்யாங்காரு வீட்டு அழகா பாட்டு யார் எழுதினா? வாலி எழுதிருந்தா
ஐய்யங்காரு ஆத்து அழகேன்னு தான் எழுதி இருப்பார்.

திருவையாறு போறதுக்கு முன்னாடி மாட்டுவண்டிகளில நந்தினி ஒண்ணுத்தலயும் அம்பி இண்ணொன்னுலயும் போறது
ரெண்டே நிமிஷம் வந்தாலும் அந்த வீதி எங்க ஊரு உத்தரவீதின்னு எனக்கு நன்னாத் தெரிஞ்சிபோயிடுத்து
..
நந்தினிக்கு பாடசான்ஸ் கேட்டு போறச்சே."நான்
பூச்சி ஸ்ரீனிவாசய்யங்கார் பேரன்' அப்டீம்பான் அம்பி.அதுக்கு சபா காரியதரிசி."இப்போல்லாம் பூச்சி கி
டயாது டைனோசர் மணிதான்" ந்னு
சொல்வார்..இது புரிஞ்சவாளுக்கு சிரிப்பை வரவழைக்கும்

அம்பிக்கு ஜிக்ரி தோஸ்தா வரான் ச்சாரி. நெடுக சிரிப்பு மூட்டிண்டேதான் இருக்கான்..அதுல அம்பிக்கு
கண்ணடிக்க சொல்லிததர்ச்சே'உன்னையெல்லாம் ஏண்டா சுனாமி கொண்டுபோகலே?' அப்டீம்பான்
பாருங்கோ அப்போ எங்க ஊர்...ரங்கராஜா தியேட்டரே அதிர்ர அளவுக்கு சிரிப்பு
வெடிச்சது.

ஆனாலும் படம் பாக்றச்சே முதல்வன் ஜெண்டில்மேன் இண்டியன் எல்லாரும் வந்துட்றாங்கறதை மறுக்க முடியாது

நாங்க லேடீஸ் கிளப்புல ஒருதடவை நேஷனல் கேக்குனு பண்ணினோம்

மைதாமாவு கேக்தான் அதையே வித்தியாசமா பண்ணிப்பாத்தோம் ஜோராத்தான் வந்தது.

மைதாமாவு நெய் சக்கரைதான் பிரதான சாமான்கள்
முதல்ல ஆர்ஞ்ச் கலர் சேத்து கிளறி மாவை தட்டுல கொட்டுவோம் அப்றோம் வெள்ளையா இயல்பாவே
இருக்கறதை கொட்டுவோம் கடைசியா பச்சை கலர் சேத்து மேல கொட்டுவோம் தேசியக் கொடி வண்ணத்தில
இதுக்கு பேரு நேஷனல் கேக்னு பேர்.

கேக்குக்குப் போட்ட பொருளெல்லாம் ஒண்ணுதான் தேசிய உணர்வை நினைவு படுத்றாப்ல கலர்
சேத்துக்கொஞ்சம்கவர்ச்சியா செஞ்சோம்
ஆர்ஞ்ச் பச்சை வெள்ள எல்லா கேக்லயும் ஒரே டேஸ்ட் தான் ஆனா கலர்
தான் வித்தியாசம் அதுப்போலத்தான் அந்நியனும்.

அது கிடக்கட்டும் விடுங்கோ..அம்பீ பத்தி தான் நான் சொல்ல வந்தேன்..

அம்பீக்கு சம்ஸ்க்ருதமெல்லாம் தெரியற்து கருடபுராணம் பாத்து சம்ஸ்க்ருத
வார்த்தைகளுக்கு அர்த்தமெல்லாம் சொல்றான்..
கடைசி காட்சில க்ராப்
வெட்டிண்டு அரைக்கை சட்டையோட அமக்களமா வரான் அம்பீ. திவ்யமான படம் அந்நியன்னா அதுக்குக்
காரணம் அம்பி கதாபாத்திரம்தான்..

**************************************************************
ஹாய் ஐயாம் ப்ரேம்லதா ·ப்ரம் பேங்க்ளூர்..
அந்நியன் மூவி...வாவ் ·ப்ண்டாஸ்டிக்! ரெமோ! ச்ச்ச்ச்சோ ச்வீட் ரெமோ! அந்த ஹேர்
ஸ்டைல் அந்தபார்வை அந்த நடை...! சிம்ப்ளி சூபர்ப் யார்!
கண்ணூம் கண்ணும் நோக்கியா. ஸோ க்யூட் ரெமோ!...லவ்லீ ! மௌண்ட் கார்மல் காலேஜ் பூரா இப்போ
ரெமோபத்தி
தான் பேசறோம்...ரோஸ் செடியா நந்தினி வீட்டு வாசல்ல வச்சி அசத்துவான் ரெமோ. ஜுஜிபி உம்மா
வேணாமாம்...தடாலடியா'இங்க கொடு'ன்னு உதட்டைக்கட்டிக்கேட்பான் பாருங்க..ரொமாண்டிக்கா இருக்கும்!
ஹையோ..கொல்றான் ரெமோ ராஸ்கல்!
****************************************************************
ஏய் ஸ்ரீரங்கம் சின்னபட்டு ?பெங்களூர் ப்ரேமலதா? என்ன நினைசிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்?

அந்நியன் படத்தை விமர்சிக்கிற அழகு இதுதானா? டைரக்டர் ஷங்கர் பிரும்மாண்டமா படம் எடுத்திருப்பது
உங்கள் கண்ணுல படலையா?சுஜாதாவின் பஞ்ச் டயலாக்ஸ்,அந்த க்ரா·பிக் டெக்னாலஜி, கராத்தே பள்ளியின்
சண்டைக்காட்சி எல்லாம் உங்கள் புருவங்களை உயர்த்தவில்லையா?

அந்நியன் யார் அவன் எங்கிருக்கிறான் என்பதை த்ரில்லர் மாதிரி கொண்டு போவதை கவனித்தீர்களா?
வெப் சைட் வைத்துக் கொண்டு தன்னால் இயலாத நிலையில் சட்டத்தை மீறுபவர்களை அம்பி தண்டிப்பதையாவது
உணர்ந்தீர்களா இல்லையா?

அம்பி அந்நியனாக மாறும் போது அந்த முறுக்கேறிய உடம்பும் உருண்டு திரண்ட தோளும்
ஆவேசம் ததும்பும் முகமும் ஒவ்வொரு கொலையின்போதும் வ்யூ·பிண்டரின் முன்னேதலைமுடி சுருள்
அருவியாய் விழுவதையும் கண்டு கலவரப்பட்டீர்களா இல்லையா?

காமிரா மேன் ரவிவர்மனும் மணிகண்டனும் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக புகுந்து விளையாடி
இருப்பதையும் அந்த'ரண்டகக் ரண்டக்க' பாடலில் சாலையும் பாறையும் வீடும் மாடமும்
பாலமும் பஸ்ஸ¤ம் என்று எல்லாமே பெயிண்டோவியமா காட்சி அளிப்பதை ரசிக்கவில்லையா?

இயக்குனரின் மெகா கற்பனைக்கு கலை இயக்குனர் சாபுசிரிலும் இசையால் மனதை இசைய
வைத்த ஹாரிஸ் ஜெயராஜையும் பாராட்டத்தோன்றவில்லயா?

மூன்றுவித தோற்றங்கள் முன்றுவித உடல்மொழி மூன்றுவித உரையாடல் உச்சரிப்பு என்று தன்னிடம் கொடுத்த
வைரக்கல்லை தன் நடிப்பால் பட்டை தீட்டி ஜொலிக்கும் மொத்தவிக்ரமை நான் பாராட்டறேன்
ஆனால் இவை எதையுமே குறிப்பிடாத உங்க இருவரையும் தண்டிக்க என்ன தண்டனை என்று தேடிக் கொண்டிருக்கி
றேன் கருடபுராணத்தில்...

என்ன நான் யாரா ?

நாந்தான் உங்க இரண்டு பேரத்தொடர்ந்து விமர்சனம் செய்ய வந்திருக்கும்மூன்றாவது நபர் .எல்லாரையும் பி
டிச்சி ஆட்டப் போகிற 'சன்னியன்'!


******************
அய்யெயோ என்ன இது? அந்நியன் பட விமர்சனம் யாருமே எழுதவில்லையே என்று அந்நியன்
படம் பார்த்த பாதிப்போடு எழுதவந்த நானும் இப்போது மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர் என்கிற மன நோயி
ல் மாட்டிக் கொண்டுவிட்டேனா? !
அன்புடன்
ஷைலஜா.

From: "prabhu_g_rajadurai" Subject: Re: thambi, sumo and Chennaiyan - M.P.D. case

(2. ·போர்ஜரி ·போர்டொண்டி:
தாய்ப் பட்டாவை ஒழுங்காகப் படிக்காமல்,
வில்லங்க சர்ட்டிபிகேட் வாங்காமல்,
நிலம் பதிவு செய்யத் துணிந்த வக்கீலுக்கு
*·போர்ஜரி ·போர்டொண்டி* தண்டனை.

அன்புடன்
ஆசாத்)

அன்பார்ந்த ஆசாத் பாய் மற்றும் அனைவருக்கும்,

நலம்தானே! வெகு நாட்கள் இணைய தமிழே படிக்காதலாலோ என்னவோ, எனக்கு தங்களது மேலே
கண்ட மடல்
திரும்பத் திரும்ப படித்தாலும், எதனைப் பற்றி எழுதியுள்ளீர்கள் என்பது புரியவில்லை. பரவாயி
ல்லை. ஆனால்
நீங்கள் குறிப்பிடும் போர்ஜரி, போர்டொண்டி பற்றி சில வார்த்தைகள்.

முதலில் போர்ஜரி என்பதற்கும் 420க்கும் சம்பந்தம் கிடையாது. 420 தண்டனை என்பது, இந்திய
தண்டனைச்
சட்டத்தில் ஒரு குற்றமாக கருதப்படும் 'ஏமாற்றி ஒரு சொத்தினை பெறுதல்' (cheating and
dishonestly inducing delivery of property) என்ற குற்றத்திற்கான விளக்கம்
மற்றும் அதற்கான
தண்டனை அதிக பட்சம் 7 வருடங்கள் என்று கூறும் பிரிவு. ஏமாற்றுதல் (cheating) என்பது பிரி
வு 415ல்
விளக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுதலில் பலவகை. அதில் ஒருவகை இந்த 420.

போர்ஜரியினை விளக்கும் பிரிவு 463. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை போர்ஜரி என்பதற்கான
விளக்கம்
போலி ஆவணங்களை (false document) தயாரித்தல் என்பதே! தற்பொழுது போலி
ஆவணத்தோடு போலி
மின்னியல் ஆவணம் (false electronic record) என்பதனையும் சேர்த்து போர்ஜரிக்கான வி
ளக்கம்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது. போர்ஜரியிலும் பலவகை. அதில் ஒரு வகை 'ஒருவரது புகழினை கெடுக்கும்
நோக்கத்தோடு மின்னியல் ஆவணம் தயாரிப்பது (forgery for the purpose of harming
reputation). கடந்த சில வாரங்களாக குழு மடல்களில் நான் கண்ணுறும் ஒரு
குற்றச்சாட்டு...'யாரோ
மற்றொருவரின் பெயரினைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வண்ணம்
எழுதுவதாக'.
இந்தச் செயல் சட்ட விளக்கத்தின்படி ஒரு குற்றச் செயலே! இதில் விளையாட்டு வி
னையாகும் அபாயம் உள்ளது.

கடந்த வருடம், மதிப்பு மிக்க ஒருவரைப் பற்றி தவறாக மற்றொருவர் குழுவில் எழுதிய
பொழுது, 'தான்
தன்னுடைய வழக்குரைஞரை அணுகி அவதூறு வழக்கு தொடரப் போவதாக' என்னிடம் கூறி
னார். அப்போது எனக்கு
அவரது வார்த்தைகள் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. தற்பொழுது திருமலை, சிவகுமார்
போன்றவர்கள் கடந்த சில நாட்களில் எழுதியதைப் படிக்கையில் 'மேட்றிக்ஸ்' 'ஜானி குவெஸ்ட்'
கதைகளைப்
போல இணைய பறிமாற்றங்கள், இணையத்தினை கடந்து நிஜ வாழ்க்கையிலும் காயமேற்படுத்தப் போகி
றதோ
என்ற அச்ச உணர்வில் இந்த மடலை எழுதுகிறேன்.

அன்புடன்
பிரபு ராஜதுரை

பின்னர் மறுமொழியிடும் பொழுது அது என்ன தாய்பட்டா, வக்கீல், தண்டனை என்பதை சற்று வி
ளக்கவும்.

Anniyan Review - Marathadi
From: "Abul Kalam Azad"
Subject: thambi, sumo and Chennaiyan - M.P.D. case

சென்னையன்
-----------

தம்பி:
திரையில் காட்டப்படும் காட்சிகளால் பாதிக்கப்படுபவன்.
அவை நடைமுறைக்கு ஒவ்வாத பட்சத்தில் மனம் புழுங்குபவன்.
எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவன்.

சுமோ:
திரைதான் வாழ்க்கை. அதன் சகலவிதமான பொய்களும்
சரியானவையே என்னும் எண்ணத்தில் இருப்பவன்.

சென்னையன்:
சென்னையில் தாதா. கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது இவனது
தினசரி வேலை.

இந்த மூன்றுவிதமான ஆளுமைகளையும் தன்னில் கொண்டு தம்பி
யாக சென்னையில் டொக்கு சந்து ஒன்றில் ஒண்டுக் குடித்தனத்தில்
வாழும் ஒரு அப்பாவிதான் உண்மையான 'தம்பி'.

இனி பார்க்க இருப்பவை தம்பியின் பலவாளுமைக் குறைபாட்டின்
விளைவுகள்.

1. ஆர்த்தோபீட்டிக்ஸ் அட்டாக்:

தம்பி:
நல்லா இர்ந்துச்சுங்க அந்தப் பொண்ணு. ஒண்ணுமே தெரி
யாம 'போயா போ'ன்னு கையக் காட்டி சத்தம் போடும்
அவ்வளவுதான். அதுக்குப் போயி இப்படிப் பண்ணிட்டாங்களே.
பாவாடை தாவணில அழகா வந்த பொண்ண அர ட்ரவுசர் போட்டு
ஆடவிட்டுட்டாங்களே. பெரிய பெரிய டைரக்டருங்களே இப்படிப்
பண்ணா, படத்தப் பாக்றவங்க கெட்டுப் போகமாட்டாங்களா?
நாளைக்கு பாரம்பரிய உடைக்கு மதிப்பே இருக்காதே. இந்த அநி
யாயத்த தட்டிக் கேக்க ஆளே இல்லீங்களா?

சுமோ:
ஹேய் தம்ஸ்! டோண்ட் க்ரை மேன். ட்ரண்ட் தெரியாம பேசாத
மேன். ஹாவ் யூ சீன் 'க்யா போல் தீ து' ஆர்
'கோயி மில் கயா' ஸீ ரானி முகர்ஜி மேன்,
ஆல் ஆர் ஹா·ப் ஒன்லி.

சென்னையன்:
ஏய் ஜில்பா! அடங்குடா!

இதயக் கனில தலீவர் மாறுவேஸ்த்துல வந்தமேறி சுர்ட்ட
முடி வுட்டுக்குனு இன்னா காட காட்டிக்னுக்கீறியா? இன்னா
தெய்ர்யத்துல இந்தி சீன் பிலிம் காட்ற நீ? ஆங்? தோடா,
கட்டப் பஞ்சாயத்துப் பார்ட்டிங்கல்லாம் இந்திப் படம்
பாக்காதுங்களா? எத்தினி சேட்டுங்ளுக்கு மேட்டர் பைசல்
பண்ணிக்றேன். ஆங். வண்டாரு பெர்ஸா இந்தியத் தூக்கிக்னு.

'தீவாங்கீ' ஒண்ணு வன்ச்சு, பாத்தியா. சீமா பிஸ்வாஸாண்ட
சைலண்டா பேஸிக்னே கபால்னு 'ஏய் ரண்டி'ன்னு
அஜய் தேவ்கன் ஒரு கொரலு வுட்டான் தெர்மா? அது எம்பிடிமா!

அதேதானமா இங்க வுல்டா பண்ணி வுட்டீங்க.

வுட்டதுதான் வுட்டீங்கோ காலவதியாப்போன திட்டெல்லாம் இப்ப
வுர்ரீங்களே இது செரியா. இப்பல்லாம் பாடு டான்ஸ்
ஆடுன்னெல்லாம் நாங்க திட்றதில்ல..இப்பக்குற ரேஞ்சே
வேறமா. அது கூடத் தெரியாம அயோத்தியா குப்பத்த சுத்தி வந்து
படம் எடுக்றியா?

தம்பி மன்சு கஷ்டப்பட்டுச்சு. அத்தொட்டு நான் சொல்றம்பார்
ஜஜ்மெண்ட்டு.

நல்ல பொண்ணுக்கு அர நிஜார் மாட்டி, வாட்டர் பெட்ல வுர்ளவுட்ட
கைக்கு கட்டப் பஞ்சாயத்துல இன்னா பனிஸ்மெண்ட் தெர்மா?

*ஆர்த்தோபீட்டிக்ஸ் அட்டாக்*

அஞ்சு வெர்லையும் விர்ச்சு வெச்சு பஞ்சா மேல உர்ட்டுக்
கட்டையால ரத்தம் வர்ர வெரிக்கும் அடிப்போம். அப்பாலிக்கா
ஆர்த்தோபீட்டிக்ஸ் வார்டுக்கு அன்ப்பிவெப்போம். செட்டிங் செரியா
பண்லேன்னு சொல்லி சென்ட்ரல் லாட்ஜு புத்தூர் வைத்தியராண்ட
போவ்வெப்போம். அதுவும் செரியாவாம திரியும்
ஆர்த்தோபீட்டிக்ஸ் வார்டு.

இப்டீ மவ்ன ஆறு மாஸ்த்துக்கு கையத்தூக்கினு அலைய
வெப்போம். அதாண்டா ஆர்த்தோபீட்டிக்ஸ் அட்டாக்.

தாஸே! பார்ட்டி கைய விர்ச்சு வெச்சு வெர்லு மேல
காலை அய்த்துரா, பாச்சா அந்த உர்ட்டுக் கட்ட எர்ரா!

*

சென்னையனின் அட்டகாசங்கள் தொடரும்...

2. ·போர்ஜரி ·போர்டொண்டி:
தாய்ப் பட்டாவை ஒழுங்காகப் படிக்காமல்,
வில்லங்க சர்ட்டிபிகேட் வாங்காமல்,
நிலம் பதிவு செய்யத் துணிந்த வக்கீலுக்கு
*·போர்ஜரி ·போர்டொண்டி* தண்டனை.

3. திருட்டு விசிடி திருக்கை வால்:
கதவுக்குமேல் இருக்கும் வீடியோ கேமராவை விவேக் இயக்கி
விட்டுச் சென்ற பின், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் கேசட்டில்,
கேமிரா இருந்த கோணத்திற்கு எதிர்ப்புறத்தில் படமான காட்சி
களைக் காட்டி உடாலக்டி அடித்ததற்கு
*திருட்டு விசிடி திருக்கை வால்1* தண்டனை.

(1 - திருக்கை மீனின் வால். ஒரு காலத்தில் சாட்டையாக
உபயோகப்பட்டது. கடற்கரையோரவாசிகள் சிலருக்கு இதன் தன்மை
தெரியும்).

4. அண்டர்க்ரவுண்ட் அஸ்ஸால்ட்:
டிசிபி, டிஜிபி வித்தியாசம் புரியாமல், எல்லைகள் இல்லாமல்
திருவல்லிக்கேணியிலிருந்து விழுப்புரம் வரை அவரே போவது,
·போரன்சிக் முதல் சைபர் க்ரைம் வரை அவரே பார்த்துக்கொள்வது
போன்ற போலீஸ் டிபார்ட்மெண்ட் குளறுபடிகளுக்கு
*அண்டர்க்ரவுண்ட் அஸ்ஸால்ட்* தண்டனை.

சென்னையனை பதினைந்தாம் தேதியன்று மரத்தடியில் சந்திக்கலாம்.

(அதுவரையில் மறுமொழியும் தர இயலாது. மன்னிக்கவேண்டுகிறேன்)

அன்புடன்
ஆசாத்

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு