ரோஜா
காதல் ரோஜாவே
எங்கே
நீ எங்கே
கண்ணீர் வழியுதடி
கண்ணே
கண்ணுக்குள் நீதான்
கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ
ஏதானதோ
சொல்
தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளியோடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகமிரண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா?
சொல்!
வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை
ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை
தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாகத் தேய்ந்து போ
பாவையில்லை
பாவை
தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்பே
சேவையென்ன சேவை?
//வீசுகின்ற தென்றலே
வேளையில்லை
நின்று போ?//
வேலையில்லை இன்று போ! என்பதே சரி :-)
சொன்னது… 6/07/2005 02:44:00 PM
அப்படியிருக்குமோ என்று யோசித்தேன் :-) அப்புறம் இது சரியான 'வேளை'யில்லை. நல்ல டைமா பார்த்து வா என்று சொல்கிறாரோ என நினைத்து மாற்றியிருந்தேன்.
நன்றி.
சொன்னது… 6/08/2005 10:56:00 AM
கருத்துரையிடுக