விந்தியா
விவரணப்படம் தேவை
தமிழோவியத்தில் ரஜினி ராம்கி ஜோதிகாவின் டாகுமெண்டரி குறித்து எழுதியுள்ளார்.
சன் டிவியில் 'நட்சத்திரம்', கேடிவியில் சில நிகழ்ச்சிகள், 'நடித்ததில் பிடித்தது' என பல நிகழ்ச்சிகள் சாதாரணமாகவே இருக்கிறது. புகழ்பெற்ற நடிகரின் புகழ்பெற்ற படங்கள், அதிகம் அறிமுகமாகாதவர் என்றாலும் சிறப்பான காட்சிகள் அல்லது பெரிய இயக்குநர்களின் படத்தில் தோன்றிய காட்சிகள் என்றே நிரப்பிச் செல்கிறார்கள்.
சமீபத்தில் 'வயசுப் பசங்க" படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.
'கண்ணம்மா' படத்தில் வில்லத்தனமான நடிப்பு. 'சங்கம'மில் வெகுளியான அறிமுகம். அப்பாவிக் களை சொட்டும் புதுமுக நாயகி. நடனமே தெரியாமல் அட்ஜஸ்ட் செய்த பாவங்கள்.
நடுவே 'சார்லி சாப்ளின்', 'என் புருஷன் குழந்தை மாதிரி' படங்களில் குணச்சித்திர வேடம். கடைசியாக 'யெஸ் மேடம்' போன்ற படங்களில் கவர்ச்சி ஆட்ட சாயம்.
இவரை எடுத்துக் கொண்டு விவரணப் படம் கொடுத்தால் எவ்வளவு அலசல்களை முன்வைக்கலாம்?
- தமிழ் சினிமா நாயகிகளின் நிலைகள்
- மேனேஜர்க்களின் கட்டுப்பாடுகள்
- பெற்றோர் கூடவே கவனிப்பதின் பலன்கள்
- முதல் கோணல் முற்றும் கோணல்?
- ஒரு படத்தில் இரண்டாம் மனைவியாக நடித்ததால் தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டவர்கள்
- இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் நடிப்பதால் மதிப்பிழத்தல்
- ஊடகத் தொடர்பாளர்களுடன் நட்பு பாராட்டலின் அவசியங்கள்
இது போன்ற பல்முகங்களை பல சந்திப்புகளின் மூலம் கொடுக்க முடிபவர்களைத்தான் டாக்குமெண்டரிகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
முன்னுமொரு காலத்தில் மாலா மணியன் செய்து கொண்டிருந்தார்கள். டிடி-II அல்லது மெட்ரோ சானலில் ஏழரை மணிக்கு ஒளிபரப்பாகும்.
>>கொஞ்சம் வெட்டியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். அல்லது, ரொம்ப think பண்றீங்க---
ரொம்ப மண்டை காயுது சார்... அப்படியே 'வயசுப் பசங்க'ளை யோசித்துப் பார்த்தால், இந்தப் பதிவு.
Boston Bala சொன்னது… 6/06/2005 12:50:00 PM
கருத்துரையிடுக