வெள்ளி, ஜூன் 03, 2005

கிடாராட்டம்

பிட்ஸ், பிலானியில் வருடாவருடம் 'ஒயாஸிஸ்' (OASIS) என்னும் கலைவிழா நடக்கும்.

தார் பாலைவனத்தில் ஒட்டகம் கால் வைத்தால் பிலானியில் வாய் எட்டிப் பார்க்கும். 'ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை' என்று சென்னைப் பதின்மர்கள் புலம்பினால், வருடம் முழுக்கவே அதே நிலையில் ஆழ்ந்திருக்கப் பழகியவர்கள். கானல் போல் பல கல்லூரிகளும் வந்து குவிய ஒரு வாரம் பட்டாம்பூச்சிக்கள் நடக்க, கண்ணாமூச்சிகள் பறக்கும்.

கலை விழாவுக்குத் தேவையான 'ஒரே ஒரு நிமிடம்' (JAM), வினாடி வினாக்கள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு. அவற்றின் நடுவே 'மாக்டேவ்ஸ்' என்னும் கூத்து பிடித்துப் போனது.

எனக்குப் பிடித்த பாடல் ரேடியோவில் ஒலித்தால் கூடவே முணுமுணுப்பது, 'போட்டு வைத்த காதல் திட்டம்' நடுநடுவே வரும் மெல்லிய ராக் இசைக்கு ஏற்றவாறு, கையில் இல்லாத கிடாரைக் கொண்டு மீட்டுவது, 'காற்றில் எந்தன் கீதம்' ஆரம்பத்தில் வரும் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று வாய் மட்டும் திறந்து கண் மூடி லயிப்பது, 'தத்தித்தோம்...' என்று அழகனாய் தையல் மிஷினை பியானோவாக்குவது என்று அவ்வப்போது செய்து வந்ததை மேடையில் செய்து காட்டி பரிசு வாங்கும் போட்டி.

அதே போல் அமெரிக்காவிலும் 'காற்றில் கிடார்' வாசிப்பவர்களுக்கான போட்டி நடைபெறுகிறது: The official US Air Guitar Championships

நாளை (சனிக்கிழமை) Harpers Ferry சென்றால் கண்டு களிக்கலாம்.

விதவிதமான ஆடைக்கோலங்கள்; படுத்து, வளைந்து, உருண்டு, நெளிந்து, விழுந்து வாசிக்கும் கோலங்கள்; எல்லாமே காற்றில் செய்து; ரசிகர்களின் கரகோஷத்திற்கு சலாம் போட்டு அகலுவது வரை கோமாளித்தனமான பொய் ரியாலிடி.

2 கருத்துகள்:

அன்பின் பாஸ்டன் பாலா,
உங்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ, ஆச்சரியமாதான் இருக்கு. லேட்டஸ்ட் மாட்டர்களை உடனுக்குடன் தருகிறீர்கள். எல்லாமே சுவாரசியமா வேற இருக்கு. அடிக்கடி உங்க ப்ளாகுக்கு வரேன், படிக்கறேன். பின்னூட்டம் தான் எப்பவும் இடமுடியறதில்ல. அதுனால, படிக்கற பதிவுக்கெல்லாம், ஒரு நட்சத்திரக் குத்து குத்திட்டுப் போயிடறேன்.

ரசிச்சுப் படிக்கற பதிவுகள் உங்களுடையது.தகவல்களுன் ஏராளம்.

அன்புடன், ஜெயந்தி சங்கர்.

நன்றி ஜெயந்தி. - பாலாஜி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு