செவ்வாய், ஜூன் 21, 2005

மறுப்புக்கூற்று - ஆனந்த் சங்கரன்

எதற்காக இந்த அசட்டு அடைக்குறிப்பு

அடைக்குறிப்புகளை எழுதிய பொருளை மெருகேற்ற அல்லது அதன் பொருளை உணர்த்த உபயோகம் செய்யலாம்.

ஆனால் பலர் அதை தவறான முறையில் பின்குறிப்பு போல் உபயோகம் செய்கின்றனர். குறிப்பாக வெகுகாலமாக இணையத்தில் உள்ளவர்களே எழுதுகிறார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும்.

உங்கள் எழுத்தை மேம்படுத்த நினைத்தால் அடைகுறிப்பை குப்பை போல் உபயோகம் செய்வதை நிறுத்துங்கள்.

உதாரணம் ..

முளையை கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றேன் (ஆமாம் பெருசா மூளை இருக்குன்னு நினைப்பா)

நான் இந்த வார எழுத போவது என்னவென்றால் (இவன் எழுதலைனு யாரு அழுதா)

இப்படி பல உண்டு.

நீங்கள் பின்குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். உங்களை யாரும் இந்த ஒரு கட்டுரையை வைத்து மதிப்பீடு செய்யமாட்டார்கள். உங்களின் எழுத்தை பலவற்றை படித்து பின்னர் இந்த ஆள் இப்படி என்று மதிப்பீடு செய்யலாம்? அதை இது போன்ற அசட்டு அடைகுறிப்பால் மாற்ற முயலாதீர்கள்.

3 கருத்துகள்:

யாருஙக்ஆனந்த்சங்கரன்?

//Anonymous said...
யாருஙக்ஆனந்த்சங்கரன்? //

இப்படி எழுதக்கூடாது!

யாருங்க இந்த ஆனந்த் சங்கரன்( இணைய வாத்தியார்?)
இப்படி எழுதுனாத் தேவலையா?

அது இருக்கட்டும், இந்த !!!!!!
பத்தி இன்னும் சொல்லையே?

>>இந்த !!!!!!
பத்தி இன்னும் சொல்லையே--

ஆனந்த்திடம் விசாரிக்கிறேன். அவர் நிறைய புலம்பிக் கொண்டிருந்தார். அரசியல் மேடைகளில் பேச்சின் துவக்கத்தில் 'அவர்களே... இவர்களே...' என்று ஒவ்வொருத்தராக கூப்பிடுவது போல் எழுதுவது, என்று நிறைய அடுக்கினார் (நண்பர்களுக்குள் இவ்வாறு அழைத்துக் கொள்வது சகஜம்தானே?) :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு