திங்கள், ஜூன் 20, 2005

நம்பமுடியவில்லை!

Shaalini (Vijay TV Salanam, Kanaa Kanden)ஜூனியர் விகடன்: கடந்த 15-ம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் நடிகை ஷாலினி.

'கும்பகோணம் கோபாலு' என்ற படத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக 'மயூரி' என்ற பெயரில் அறிமுகமானவர்தான் இந்த ஷாலினி. அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஷாலினி கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வலியப் போய் சான்ஸ் கேட்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தார்.

மலையாளத்தின் பக்கம் தனது கவனத்தை திருப்பியவர், மம்மூட்டி, மோகன்லால் போன்றோருடன் சினிமாக்களில் தலை காட்டினார். 'ஸ்த்ரீ' என்ற டி.வி. சீரியலில் நடித்து கேரளாவில் படுபிரபலமானார். அதன்பிறகு தமிழுக்கு வந்தவர் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சலனம்' சீரியலில் நடித்தார். அதன்பிறகு 'விசில்', '7ஜி ரெயின்போ காலனி', 'கனா கண்டேன்' என வரிசையாகப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

5 கருத்துகள்:

இதில் நம்ப முடியாததிற்கு என்ன இருக்கு? நடிகையும் தூக்கும் , அரசியல்வாதியும் Dr பட்டமும் போல
இணை பிரியாதது தானே ?

அதிகமாக சர்ச்சைகளில் சிக்காமல், எளிமையான கதாபாத்திரங்களில் அழுத்தமாக நடித்து வந்தவர். தேவதர்ஷிணியைப் போன்றே, தன்னுடைய கதாபாத்திரங்களால், சலனம் போன்ற தொடரை வெற்றியாக்கினார்.

Some of the roles she portrayed had conviction, self-confidence, neat no-nonsense image. Due to her cool acting skills, I tended to believe she also had the same assertion. Now disappointed!

Related link
http://sudhishkamath.blogspot.com/2005/06/death-of-actress.html

Even Ju.Vikadan has sensationalised the story with the bit about absconding lover. It is even more depressing to hear from her friend. இறந்தவர்களை தூஷிக்கக்கூடாது என்று மரியாதையுடன் சாவு வீட்டில் இருப்பார்கள். நடிகைகளுக்கு மட்டும் பத்திரிகைகள் இந்த விதியை விலக்கி விடுகின்றது. குறைந்த பட்ச privacy-ஐ கூட கொடுக்காதவர்களையும், வாங்கி மேய்பவர்களையும் நினைத்து வருந்தத்தான் முடியும்.

விசிலில் மாயாவாக (நாடகத்தில்) பெரிய விழிகளுடன் வருவாரே அவர்தானே?., நடிகைகளையும், தற்கொலையையும் பிரிக்க முடியாதோ?. வருத்தமாக இருக்கிறது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு