புதன், ஜூலை 27, 2005

ஷக்திப்ரபா

மரத்தடி ::

  • "வயது என்னை ஆண்டுக்கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம் இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று நானொரு தேர்ந்த பொறுக்கியாகிவிடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. 'டெய்ஸி வளர்மதி' என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன்"

  • "சற்றே தாமதித்தேன். அது கவித்துவம் நிரம்பிய அபத்த கணம்"

  • "பதிலற்று இருக்கும் வரையில் தான் கேள்விகளுக்கு உயிர். கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தத்துவங்களின் சூட்சுமம்"

  • "சட்டைப் பையில் ஒரு அணில் குஞ்சை விட்டுக்கொண்டாற் போல் மனத்தில் ஒரு கனவை உலவ விட்டு வாழ்க்கை நடத்துவது எத்தனை குறுகுறுப்பைத் தருகிறது!"

  • "என் ஞாபக அடுக்குகளில் இருபது வருடத்துக்கான பழைமைச் சுவடுகள் ஏதுமின்றி, இன்று காலை சந்தித்தவர் போல், பார்த்ததுமே அத்தனை நரம்புகளையும் தட்டியெழுப்பிவிட வல்லவராயிருந்தார்."

    குதிரைகளின் கதை - பா ராகவன்

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு