வியாழன், ஜூலை 28, 2005

டூட்டா சப்னா ஷாங்காய் கா

நடுத்தர வர்க்கத்துக்கும் சராசரி இந்தியனுக்கும் அயல்நாடென்றால் பரிவான பார்வை உண்டு. எதை எடுத்தாலும்

'அந்த நாட்டைப் பார்! எப்படி வளர்ந்திருக்கிறது?'
'பக்கத்து வீட்டுப் புள்ளை எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறது!'
'உன்னுடைய கஸின் அமெரிக்கா சென்றுவிட்டானே'
என்று துலாக்கோலை வைத்து ஒப்புமைப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம்.

ஹோண்டாவின் போராட்டத்தினால் ஏற்றுமதி குறைந்து விடும் என்று சொல்லும் எகனாமிக் டைம்ஸ் போல் 'ஸ்டாரு'ம் சீனாவை முந்துவது நிராசையாகியது என்று ஒளிபரப்பியிருக்கிறார்கள். (நன்றி: திலிப் டிசுஸா)

இன்னும் 'அந்நியனி'ன் பிரமிப்பில் இருந்தே விடுபடவில்லை. ஐம்பது வருடம் முன்பு வரை ஏம்போக்கியாகவிருந்து தென்கிழக்காசியாவையும் இந்தியாவையும் ஒப்பிடும்போது ஆற்றாமை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதே பாதிப்பில் எவராவது திரைப்படத்திற்கு நிகரான ஃபிலிம் காட்டும் வித்தையாக சிம்பொனி ஷெனாய் ஒலிக்க குறும்படம் எடுத்திருப்பார்.

திலீப்பின் வலைப்பதிவு முக்கியமானது.

நான் நடுத்தர வர்க்கம். 'அடுத்தவனைப் பார்' என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன். கூட்டு வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் மின்னுவதைப் பார்த்து பொறாமைப் படுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழில் இன்னும் கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் பற்றிக் கொள்ளவில்லையே என்னும் அன்னிய அங்கலாய்ப்பு தோன்றுகிறது.

சிலரின் பக்கங்கள்: கிருபா ஷங்கர் | Dilip D'Souza

1 கருத்துகள்:

//திலீப்பின் வலைப்பதிவு முக்கியமானது.//

excellent article. Thanks for the link

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு