திங்கள், ஜூலை 25, 2005

திங்கள்

நியு யார்க் டைம்ஸ்: வருத்தப்படுகிறோம்; ஆனால் மன்னிப்பு கோர மாட்டோம்

பிபிசி: நாஜிகளின் புகழ் பாடும் பாடப்புத்தகம்

பிபிசி: விடுதலைப் புலிகள் 'சிறுவர்'களை பணியில் சேர்க்கிறார்கள்

11 கருத்துகள்:

LTTE and UNICEF from Tamilnet:

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14396

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=14666

"விடுதலைப் புலிகள் 'சிறுவர்'களை பணியில் சேர்க்கிறார்கள்"
பிபிசி எப்பவும் புலி எதிர்பு பிரச்சாரம் தான்னே ...வேற என்ன எழுதும்!!!

நன்றி தங்கமணி.

>>பிபிசி எப்பவும் புலி எதிர்பு பிரச்சாரம் ---

அப்படியா :ஓ 'தி ஹிந்து' மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

தலைவா, BBCக்கு British Bulls...ing Corporation என்று இன்னொரு பெயர் இருப்பதும், சந்தர்ப்பத்தைப் பொறுத்து பெரும்பாலும் அது சரியாகவே இருப்பதும் தாங்கள் அறிந்ததுதானே?? ;-)

BBC tooo.... unreal! Anyway, whats the take on NPR?

Just for backup/storage purposes from BBC tamil....

செய்தியரங்கத்தில் :

மட்டக்களப்புப் பகுதியில் 18 வயதிற்குட்பட்ட இளம் பிராயத்தினரை புலிகள் சேர்ப்பது கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது - யுனிசெஃப் அறிக்கை

இலங்கயின் கிழக்கே மட்டக்களப்புப் பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 18 வயதிற்குட்பட்ட இளம் பிராயத்தினரை இயல்பாகவும் கட்டாயப்படுத்தியும் படையில் சேர்ப்பது கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது என ஐநாவின் குழந்தைகள் நல நிதியமான, யுனிசெஃப் அமைப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கள் அமைப்பில் இருந்த இளம் பிராயத்தினர் 9 பேரை விடுதலைப் புலிகள் சில வாரங்களுக்கு முன் விடுவித்ததாக வந்த செய்திகளையடுத்து யுனிசெஃப் அமைப்பின் புதிய குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து கொழும்பில் உள்ள யுனிசெஃப் அமைப்பின் இலங்கைப் பிரிவின் ஊடகத்துறை அதிகாரி ஜெஃப் கியல் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் -

"குறிப்பாக இலங்கையின் கிழக்கே மட்டக்களப்புப் பகுதியில் இந்த ஜூலை மாதத்தில் சிறுவர் சிறுமியரை விடுதலைப் புலிகள் தங்களது படையில் சேர்ப்பது அதிகரித்துள்ளதாக எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் ஜுன் மாதத்தில் 18 இளம் பிராயத்தினர் விடுதலைப் புலிகளின் படையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஜூலை மாதத்தில் இதுவரையில் மட்டும் 28 சிறுவர் சிறுமியர் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஜூலை மாதம் இன்னும் முடிவடையக் கூட இல்லை. இந்தச் செயல் உண்மையில் அதிகரித்துள்ளது இது தற்போது எங்களுக்கு மிகவும் கவலை தரக் கூடிய விவகாரம்" என்றார்.

தமிழோசை: இளம் பிராயத்தினரை தாங்கள் படையில் சேர்ப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலிகள் எப்பொழுதும் மறுத்து வந்துள்ளார்கள். அப்படி சேர்ப்பதை நிறுத்தி விட்டதாகவும் கூறுகிறார்களே.

ஜெஃப் கியல்: இது தொடர்பாக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்து விவாதம் நடத்தி வருகிறோம். இப்படிப் பேசுவதன் பலனாக கடந்த மூன்று வருடங்களில் 1200க்கும் அதிகமான இளம் பிராயத்தினர் முறையாக விடுதலைப் புலிகளினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இத் தவிர ஏப்ரல் 2004ம் ஆண்டு கிழக்கில், விடுதலைப் புலிகளின் இரண்டு பிரிவினருக்கிடையே நடைபெற்ற சண்டைக்குப் பிறகு 1800க்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் தங்கள் வீடு திரும்ப முடிந்தது. விடுதலைப் புலிகளுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக விடுதலைப் புலிகளின் படையில் இருந்த பல இளம் பிராயத்தினர் வீடு திரும்ப முடிந்துள்ளது.

தமிழோசை: ஒருபுறம் இளம் பிராயத்தினரை படையில் சேர்ப்பதை தாங்கள் நிறுத்தி விட்டதாக விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்குகிறார்கள், ஆனால் மறுபுறம் இப்படிப்பட்ட செயல் தொடந்து நடக்கத்தான் செய்கிறது என்று நீங்கள் கூறுகிறார்களா?

ஜெஃப் கியல்: ஆமாம், இதுதான் தற்போதைய நிலை, தற்போது இலங்கையில் அமைதியும் இல்லை, போரும் இல்லை. முனைப்பான சமாதான் வழிமுறை இல்லாமல் இலங்கையில் இளம் பிராயத்தினர் படையில் சேர்ப்பது அடியோடு நிறுத்துவது கடினாமான காரியமாக இருக்கப் போகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், தொடர்ந்து விவாதிப்போம்.

(யுனிசெஃப் அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் கருத்துக்களைப் பெற முயன்றோம். இதுவரையில் எவ்விதப் பதிலும் கிடைக்கப் பெறவில்லை).

பிபிசி'ஐப் பற்றி மட்டுமென்ன, உங்களைப்பற்றியும் முந்தியே தெரிந்த விதயம்தானே பாலாஜி.

-மதி

>>பிபிசி'ஐப் பற்றி மட்டுமென்ன, உங்களைப்பற்றியும் முந்தியே தெரிந்த விதயம்தானே பாலாஜி---

ஜோசியம் மாதிரி சொல்கிறீர்கள். என்னைக் குறித்து நானே சரியாக அறிந்திருக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் ஸ்டேட்மெண்ட் விடாமல், விளக்கமாக சொன்னால் உங்கள் அனுமானங்களை அறிய முடியும்.

Assumption is the mother of all ****-ups.

நான் சொன்னது: இம்மாதிரியான பதிவுகள் விதயத்தில் பாலாஜி.

//ஜோசியம் மாதிரி சொல்கிறீர்கள். என்னைக் குறித்து நானே சரியாக அறிந்திருக்கவில்லை. நீங்கள் கொஞ்சம் ஸ்டேட்மெண்ட் விடாமல், விளக்கமாக சொன்னால் உங்கள் அனுமானங்களை அறிய முடியும்.//

நீங்கள் சுட்டிகளைத் தொகுத்துத் தராமல் விவரமாக தெளிவாக உங்கள் கட்டுரைகளை எழுதுங்கள். புள்ளிவிவரக் கோர்வையாக எழுதிய ஒரு அவஸ்தைக் கட்டுரை போலல்லாது தெளிவாக எழுதுங்கள்.

'நடுநிலமை என்ற ஜல்லியடிப்பு இல்லாமல்' என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதற்குப் பிறகு என் அனுமானங்களை யோசிக்கலாம்!

-மதி

பதிலுக்கு நன்றி மதி.

நேரடியாக வசிக்காததால், கையில் கிடைப்பது புள்ளிவிவரங்களும், தகவல்களும், ஒபினியன்களும்தான். நீங்கள் ஈழத்தில் வசித்தவர். உங்களை மாதிரி நபர்கள் விடுதலைப் புலிகளை குறித்து எழுதினால் தெளிவாக இருக்கும்.

சுட்டிகளைத் தொகுத்துத் தராமல் விவரமாக கட்டுரைகளை எழுத நான் எழுத்தாளனும் இல்லை; நேரமும் இல்லை.

பார்க்கின்ற செய்திகளை சேமித்து வைக்கிறேன். நடுநிலைமை என்று பாவ்லா காட்டும் நோக்கமும் நானறிந்து ஈடுபடுவதில்லை.

//கையில் கிடைப்பது புள்ளிவிவரங்களும், தகவல்களும், ஒபினியன்களும்தான்//

பாலாஜி,

அதெப்படி உங்களுக்கு மட்டும் எடுத்துப்போடவும் வாசிக்கவும் எதிர்மறையான சுட்டிகள் மட்டும் கிடைக்கின்றன?

-மதி

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு