செவ்வாய், ஜூலை 26, 2005

வம்பு

tamil cinema :: திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 புத்தகங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன் விஜய்க்கு வித்தக கவிஞர் விஜய் என்று பட்டமும் கொடுத்தார். இந்த விழா நடந்து சில நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்க, எங்கிருந்தோ கிளம்பிய வதந்திகள் இந்த விருதுக்கு பின்னணியில் மத்திய அரசில் ஸ்ட்ராங்காக அங்கம் வகிக்கும் கலைஞரின் பங்கும் இருக்கிறது என்று கூவ ஆரம்பித்தன.



cine south :: இளம் பாடலாசிரியருக்கு விருது கிடைத்ததற்குப் பின்னால் பத்து லட்சம் ரூபாய் கைமாறியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடலாசிரியரும் முக்கிய எதிர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பாடலாசிரியரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு பணத்தைக் கொட்டிய தென்னக கல்லூரியின் நிறுவனரும் இதே சாதியை சேர்ந்தவர்தான். இந்த சாதி அபிமானத்தின் அடிப்படையில் பாடலாசிரியருக்கு மற்ற இருவரும் செய்த பலமான ரெகமண்டேஷன்தான் தேசிய விருது என்கிறார்கள்.

4 கருத்துகள்:

அன்பின் பாலாஜி,

ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலைக் கேட்ட பின்னுமா இன்னும் அந்த சந்தேகம்? ஏன் வேற்று சாதியினர் எழுத வேண்டியதுதானே அம்மாதிரிப் பாடல்களை? வளரும் கலைஞனை விட மாட்டீங்களே?!

விஜய் அந்த விருதுக்கு தகுதியானவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆமாம் சு.சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா என்கிற சமூக நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது தந்த போது இலக்கியத்திலும் இட ஒதுக்கீடா என கேட்ட இலக்கிய உலகம் தானே இது, அதனால் இது போன்ற வயிற்றெரிச்சல் சாதி ஆராய்ச்சிகள் வரத்தான் செய்யும்

மூர்த்தி, குழலி... நன்றி.

சமீபத்தில் 'வணக்கம் தமிழக'த்தில் நடுவர்களின் ஒருங்கிணைப்பாளராக இருந்த எல். வைத்தியநாதன் போட்டியில் தேர்தெடுக்கப்பட்ட விதங்களை பகிர்ந்து கொண்டார்.

இசைக்காக மட்டுமேபதினாறு ஜூரிகள். முதலில் யாருமே கைதூக்க மாட்டார்களாம். இவர்தான் படத்தின் அருமை பெருமைகளை எடுத்து வைத்து தன்னுடைய நண்பர்களையும் பேச வைத்து முதல் வோட்டெடுப்பாராம். சில கைகள் மட்டுமே உயரும். பெரும்பான்மை எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கம் கண்ணை மூடிக் கொண்டு வேறு சிலர் 'உள்ளேன் ஐயா' போட்டு விடுவார்கள். (இந்த சமயத்தில் '12 ஆங்ரி மென்' மடம் நிழலாடுகிறது. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கவும். 'குழு மனப்பான்மை'யை எனக்கு அறிய உதவிய படம்.)

ஒரு காலில் மட்டுமே நடனமாடி சாதிக்கும் இளைஞனைக் காட்டும் 'குட்டி' படத்தை எவருமே பார்க்கவில்லை. தினசரி காலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை ஐந்து முழுநீளப் படங்கள் திரையிடப் படும். நடுநடுவே குறும்படங்கள், விவாதங்கள், மதிப்பெண்கள், உள்ளூர் மொழி சிபாரிசுகள்.

தொடர்ச்சியாக பத்து தினங்களுக்கு மேல் இத்தகைய கடுமையான நிரல் இருப்பதால் நல்ல படங்களை பலரும் தவறவிட்டு விடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு படத்தையும் நுண்ணியமாக ஆராய்ந்து அலசி ரசித்து அனுபவிக்க வேண்டிய கட்டாயம். எவர் 'சிறந்த குணச்சித்திரம்', 'சிறந்த் துணை நடிகர்'....

சிறந்த இசையமைப்புக்கும் பலத்த போட்டி இருந்ததாகவும் தன்னுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து பா. விஜய், குட்டி, சித்ரா, ஸ்வாரபிஷேகத்திற்கு விருதுகளைப் போராடி வாங்கிக் கொடுத்ததாக பகிர்ந்தார்.

'அச்சமில்லை அச்சமில்லை' சரிதாவுக்கும் 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவிக்கும் சரியான போட்டி என்றும் திரைமறைவில் திரிசமன் நடந்ததாக அன்றும் பத்திரிகைகள் எழுதியது. பாலு மகேந்திரா போன்ற தமிழர்கள் நடுவராக இருந்தால் அந்த வருடம் மட்டும் தமிழ் பரிசுகளை அள்ளுவதும் 'ஆய்த எழுத்து' போன்ற உருப்படிகள் கூட கழற்றி விடப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பா. விஜய்யை விடுங்க சார்....

'ஹம் தும்'மில் சாய்ஃப் அலி கலக்கியிருந்தாலும், இந்த வருடத்தின் தேசிய அளவில் வெளிவந்த எல்லாப் படங்களிலும் 'சிறந்த நடிகர்' என்பதெல்லாம் செல்வாக்கினால் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

வைரமுத்துக்கு விருது வாங்கித்தந்த பாடல்களை ஒப்பிடும் போது "ஒவ்வொரு பூக்களுமே" ஒன்றும் சிறந்த பாடலாகத் தோன்றவில்லை. பாடல் அனைவருக்கும் பிடித்திருப்பதும் நம்பிக்கை அளிப்பதாயிருப்பதும் உண்மை தான். ஆனால், பாடலில் கவித்துவம் கொஞ்சம் குறைவு தான். எனக்கென்னவோ விருது சிபாரிசில் கிடைத்தது போன்று தான் உள்ளது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு