செவ்வாய், ஜூலை 26, 2005

நிழல் - ஜூலை 05

இசை, நடனம், ஓவியம், இலக்கியம் முதலான கலைகள் உயர் கலைகளுக்குரிய பெருமிதத்துடன் போற்றப்பட்ட போதும், இந்தக் கலை வடிவங்கள் அனைத்தையும் தனதாகக் கொண்டு பொங்குகிற கூட்டுக் கலையான திரைப்படம், அந்த் நிலையை எய்தாதிருப்ப்தற்கு நம் அற, ஒழுக்கவியல் சார்ந்த தனிமையைத் திரைப்படம் சீண்டியிருப்பதும் ஒரு காரணம்.

- செழியன் (இந்தியா டுடே)


நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழை பிகேயெஸ் குறிப்பெடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் Central do Brasil திரைப்பட விழாக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகாடெமி விருதுகளில் ஆரம்பித்து உலகத்தின் பல திரைவிழாக்களின் பாராட்டைப் பெற்ற படம். இன்னும் பார்க்கவில்லை.

ரோகாந்த் எழுதிய 'மணிசித்ரமுகி' அரை வேக்காடு. அதை விட பல நல்ல பகிடிகளையும் பார்வைகளையும் அலுக்க அலுக்கப் படித்ததாலும் அயர்ச்சி கொடுத்திருக்கலாம்.

'அன்னியன்' மற்றும் 'கனா கண்டேன்' விமர்சனம் எல்லா பாய்ஸ் பசங்களும் வரைவின் மகளிரை வரவழைத்தது போல் அமெரிக்காவின் உப்பு சப்பற்ற இந்திய மசாலா சமையலை நினைவு கூற வைத்தது. விமர்சனம், அபிப்பிராயம், போன்றவை நிழல் போன்ற சஞ்சிகைகளிலாவது திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் கதை சார்ந்த ஒன்றாகவுமே எழுதப்படுவது 'Gimme a break' (த்ரிஷா சாப்பிடும் ப்ரேக் அல்ல). 'செவ்வகம்', படப்பெட்டி போன்ற மாற்று சினிமா சிறு பத்திரிகைகள் கலாபூர்வமாகவும் தொழில் நுட்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறதா என்று பார்க்க வேண்டும்.

எல்லாமே இலக்கணமாக சொல்லும்போது திகைப்பையே உண்டாக்கும். ஆனால், கலைச்செழியன் எளிய மொழியில் ஒளிப்பதிவிற்கு அறிமுகம் கொடுக்கிறார். 'அன்னியன்' போன்ற சமகாலப் படங்களை விமர்சிப்பதிலும் இந்த மாதிரி நுட்பங்களை உள்நுழைத்தால் மேலும் பயன்பெறலாம்.

'ஓ' பக்கங்களில் ஞாநி விமர்சனத்தை முன்வைத்தது போல் குறும்படங்கள் கூறிய பதிவுகள் தெளிவாக பரந்துபட்ட வாசிப்பை வழங்குகிறது.

கோவை IIFMA இணையத்தில் வெளியிட்டுள்ள 'திசை' இறக்கிக் கொண்டு பார்த்து விட்டு வழக்கம் போல் பதிவொன்றைப் போட வேண்டும். ஆவணப் பட இயக்குநர் அருண்மொழியின் படங்களை மையப்படுத்தி 58 நிமிட ஆவணப் படத்தை வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண்மொழியின் திரைப்படங்கள் பற்றி இயக்குநர் ஹரிஹரன், நாஸர், பிரளயன், பிலிம் நியுஸ் ஆனந்த்ன், சாருஹாஸன் பேட்டி தந்துள்ளனர்.

மற்றபடி சிவகுமார் எழுதியுள்ள நூர்ஜஹான் (கிட்டத்தட்ட நாலு ஃபாரம் புத்தகம்), சாருலதா, பார்வையின் சாட்சியம், ஜெயகாந்தன், டி. ஆர். ராமச்சந்திரன், கன்னட சினிமா போன்றவை மூச்சு முட்ட முட்ட நிறைவைக் கொடுக்கிறது. இது வரை வந்த சினிமாப் பதிவுகளை 'நிழல் அடைவு' என்று கொடுத்திருப்பது, 'கற்றது கிலோபைட் அளவு; படித்து பயன்படுத்த வேண்டியது பெடாபைட் அளவு' என்று அங்கலாய்க்க வைக்கும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு