திங்கள், ஆகஸ்ட் 01, 2005

மனிதாபிமானம் செத்துப்போச்சா

ரேவதிராஜா

செவ்வாய்பேட்டை அப்புசெட்டித் தெரு
சேலம்.


நடந்து சென்று கொண்டிருந்த ஏழை கர்ப்பிணிப் பெண் நடு ரோட்டிலேயே விழுந்து பிரசவ வலியால் துடித்திருக்கிறாள். அந்த வழியாக போய்க்கொண்டிருந்த யாரும் அருகில் சென்று உதவவில்லை. வீட்டிலிருந்து கதவைத் திறந்து பார்த்த ஒரு சில பெண்களும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கியிருக்கிறாள். சற்று நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. அப்போதும் யாரும் அருகில் வரவில்லை. அந்தப் பெண்ணே கண்விழித்து, குழந்தையை எடுத்து தொப்புள் கொடியைக் கைகளினாலேயே கிள்ளியிருக்கிறாள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு யாரோ ஒரு புண்ணியவான் அந்தப் பெண்ணை ஒரு ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அன்னியன் தேவை :: (1) | (2)

கருத்தோடை : | | |

2 கருத்துகள்:

மனிதாபிமானமா!

"அது எந்த கடையில் கிடைக்கும்?" என்று கேட்கிற லெவலுக்கு ஆகிவிட்டார்கள், இந்த இயந்திர உலகத்தில்.

மனிதர்களும் இருக்கிறார்கள். எப்போதாவது... அரிதாக...

>> Legal அமைப்புத் தொடங்க ஆசை

குறிக்கோள் என்ன?

தொடக்கமாக நேரம் கிடைத்தால், voluteer-ஆக சிலவற்றில் பங்கு பெறலாம். அமெரிக்காவில் ரெட் க்ராஸ், அருங்காட்சியங்கள் போன்றவை flexible-ஆக நமக்கு நேரம் கிடைக்கும் போது சேவை செய்ய அழைப்பவை.

எதுவாக இருந்தாலும் வலைப்பதிவர்களிடமிருந்து support இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

நன்றி கணேசன், அபூ

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு