திங்கள், ஆகஸ்ட் 08, 2005

பட்டு வண்ண ஜோதிகாவாம்




  1. அடுத்த வருடத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய்க்கு மேல், பட்டுப்புடவை வாங்கினால், பட்டுவாடா வரி என்று ப.சிதம்பரம் விதிக்கப் போகிறார்... பாருங்கள்

  2. கொஞ்ச நாள் பொறுங்கள். இதனுடைய நகல்கள் ரெங்கநாதன் தெருவில் கிடைக்க ஆரம்பித்துவிடும். பூதக் கண்ணாடி வைத்து 54,600 வண்ணங்களும், தராசைக் கொண்டு 1.30 கிலோ கிராமும் இருக்கிறதா என்று ஆராயவா முடியும்!

  3. இதை ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் என்னுடையா சங்கு மார்க் லுங்கி மாதிரியே இருக்கிறது.

  4. நல்ல வேளை... இந்தப் புடைவை இரண்டு மாதம் தாமதித்து வந்திருக்கிறது. இல்லையென்றால் 54,600 எக்ஸ்ட்ராக்களுடன் 'ஆரெம்கேவி பொடவ நோக்கியாகாரி' என்று ஷங்கர் ஆட விட்டிருப்பார்.

  5. 25 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சேலையை ஐம்பத்தாறாயிரம் ரூபாய்க்கு வாங்கினால், வங்கி காப்பகத்தில் வைத்துதான் பாதுகாக்க வேண்டும்.

  6. வாங்க இயலாவிட்டால் இப்படித்தான் காரணங்கள் தோன்றும்


தொடர்புள்ள பதிவுகள் : காரணங்கள் அடுக்கியவர் | வலைப்பதிவு | The hindu | ஆரெம்கேவீ



| | | படம்

5 கருத்துகள்:

//இதை ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் என்னுடையா சங்கு மார்க் லுங்கி மாதிரியே இருக்கிறது.
//
ஹா ஹா , நானும் தொ.கா. விளம்பரத்தில் இந்த புடவையை பார்க்கும் போது அப்படித்தான் நினைத்தேன்.

நன்றி

பட்டு வரி கட்ட வாடா - ப.சி.
ஆரெம்கேவி - போத்தீஸ் தங்கள் போட்டியைத் திருநெல்வேலியில் இருந்து தலைநகர் சென்னைக்கு மாற்றிவிட்டார்கள்.. காட்சிக்கு வைத்திருந்த இந்தப் புடவையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிதாகத் திறந்த கடைக்குள் நம்மை இழுத்துவிட்டார்கள்..விளம்பரம் வேலை செய்தது..

---நானும் தொ.கா. விளம்பரத்தில் இந்த புடவையை பார்க்கும் போது---

விளம்பரதாரர்கள் 'சண்டே என்றால் 5000' என்று விவகாரமாய் சொல்ல ஆரம்பித்து விடப் போகிறார்கள். ஐயாயிரம் வண்ணங்களைச் சொல்கிறார்களா அல்லது ஹேவர்ட்ஸ் 5000-ஐ சொல்கிறார்களா என்று கண்டனக் குரல்கள் எழப் போகிறது ;-)


---பட்டு வரி கட்ட வாடா - ப.சி.---

வைரமுத்து/வாலிகளுக்கு வரியெடுத்துக் கொடுக்கறீங்களே!

சேலையை விட ஜோதிகா நல்லா இருக்காங்க! :-)

(வாங்க இயலாவிட்டால் இப்படித்தான் காரணங்கள் தோன்றும்..)

நீங்க சொன்னது ரொம்பச் சரி. அசப்புலே 'லுங்கி'யேதான்.

ச்சும்மாக் கிடைச்சாலும் வேணாம்.

இங்கே இதைக் கட்டிக்கிட்டு 'சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங்'தான் போகணும்.

என்றும் அன்புடன்,
துளசி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு