புதன், ஆகஸ்ட் 17, 2005

ஏ. ஆர். ரெஹ்மான் - சமூகப் பார்வை

நன்றி: பத்ரி
உணர்வு: நா. மம்மது / புதிய காற்று
ஆக்கம் : பா. பாலாஜி

ஒரு சண்டைக் கோழி பொழுதில், சின்னச் சின்ன ஆசையில், அந்த அரபிக் கடலோரம், வெண்ணிலாவின் தேரில் ஏறி, திறக்காத காட்டுக்குள்ளே, சின்னச் சின்ன மழைத் துளிகளை நெஞ்சம் எல்லாம் தாழ் திறந்துவிட்டு, என்றென்றும் புன்னகைக்கும் இசையை வழங்கிய ஏ. ஆர். ரெஹ்மானின் வந்தே மாதரம்; ஓபரா வடிவம் தாங்கி நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிற பின்னணியில் இந்த கழுதை ரெஹ்மானின் இசையை, இசை குறித்த அவரது பதிவுகளை மெல்லுகிறது.

டுடூ: இங்கு ஃபாரம்ஹப், கர்னாடிக்ம்யூஸிக்.காம், ராஜாங்கம், தொல்காப்பியம், Tamil Literature Text Search, நடு நடுவே ஓபரா, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பாலிவுட் ட்ரீம்ஸ், இலக்கிய வார்த்தைகள் இட்டு நிரப்ப வேண்டும்.


இப்பொழுது இந்திக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக 'வந்தே மாதரம்'. ரோஜா, காதலன், மின்சாரக் கனவு, கருத்தம்மா என எத்தனையோ திரைப்படங்களின் பின்னணி இசையிலும் உச்சத்தை அடைந்த உங்களுக்கு வேறு யாரின் அங்கீகாரம் தேவை. எதற்கெடுத்தாலும் வெள்ளையின் அங்கீகாரம். விளையாட்டில் அங்கீகாரத்திற்கு ஒலிம்பிக்ஸ், கலைக்கு டோனி, அறிவுக்கு புலிட்சர் பரிசு, இப்பொழுது இசையில் கிராம்மி அங்கீகாரம். நாம் நாமாக எப்பொழுது இருக்கப் போகிறோம்.

உங்களுக்கு சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள்.

ஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். ப்ளூஸ், ராப், கிளாஸிகல், கண்ட்ரி, ஃபோக், ஜாஸ், ஆர் அண்ட் பி, ஹிப் ஹாப், ரெக்கே, ராக், பாப், பாங்ரா, ஹெவி மெடல், டிஸ்கோ, டாங்கோ, காஸ்பெல், டெக்னோ, சம்பா, சல்ஸா, ஜிப்ஸி, எலெக்ட்ரோ, நியு ஏஜ் என அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும். அதில் ரீ-மிக்ஸ் இசை மட்டும் உயர்ந்தது என்கிறீர்கள். எப்படி?

நாகசுரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தாவீதின் சங்கீதத்தை இந்திய இசையில் அமைக்கப் போகிறேன்; ஃப்யூஷன் செய்யப் போகிறேன் என்று மிருணாளின் சாராபாயிடமும் கலாஷேத்ராவுக்கும் எண்ணற்ற இன்ன பிற இடங்களுக்கும் வரும் எல்லா மேல்நாட்டானுக்கும் அடிமைபுத்தி இருக்கிறது.

100 கிடார், 100 வயலின் வைத்து இசை அமைத்து பாலிவுட் ட்ரீம்ஸ் பண்ணுவது போல் 100 ஆங்கிலப் பாடகர்களை வைத்து தமிழ்ப்பாட்டு பண்ணுங்கள். அல்லது உதித் நாராயணை 100 தரம் ஒரே தமிழ் பாட்டில் ஒலிக்கவிடுங்கள்.

பாலிவுட் ட்ரீம்ஸ் என்று ஹிந்திப் பட கதாநாயகனாக விழையும் கதையை ஆங்கிலத்தில் இசை அமைக்கிறீர்கள். அதற்கு பதிலாக ஹாலிவுட் பாண்ட் நடிகன் தமிழ்ப் பட கிராமத்து ராசாவாகும் நாடகத்தை ஹிந்தியில் எடுத்திருக்கலாம். ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு கூட்டி வந்த மாதிரியும் இருந்திருக்கும். உங்களின் ஹிந்திப் பற்றும் வெளிப்பட்டிருக்கும்.

'வந்தே மாதரம்' வெளிவந்தபோது கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அப்பொழுது என்னிடம் புதிய காற்று கிடையாது.

நீங்கள் முதன் முதலாக கிடாரையும் கீ போர்டையும் தொட்டவுடனேயே தடுத்தெறிய நீங்கள் புகழ் பெறவும் இல்லை.

'கண்ணீரே
கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
பேரன்பே
உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு'

பாடல்: சந்தோஷக் கண்ணீரே / படம்: உயிரே


'உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ
செவியில் விழாதா?
கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது'

பாடல்: உந்தன் தேசத்தின் / படம்: தேசம் (ஸ்வதேஸ்)

நானும் நண்பர்களும் தாங்கள் பாடிய மேற்கண்ட வரிகளைக் கேட்ட போது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள்.

| | |

6 கருத்துகள்:

உங்களோட women = problems theorem proving ரொம்ப நல்லாயிருக்கு.

Rehmanukku sonna athanayum ungalakkum porunthume Bala...

நன்பர் பாலா அவர்களே,
ஏ. ஆர். ரெஹ்மான் பற்றி சொன்ன அத்தனையும் உங்களுக்கும் பொருந்துமே. அவர் celebrity என்பதால் criticize பண்ணலாம் என்பது தான் உங்கள் கருத்தா?

---Rehmanukku sonna athanayum ungalakkum porunthume Bala---

'நன்றி' என்று போட்டிருக்கும் சுட்டிக்கு சென்று (http://thoughtsintamil.blogspot.com/2005/08/blog-post_16.html) 'இளையராஜா' குறித்த அடோபி 'பிடிஎஃப்' கட்டுரையைப் படிக்கவும். அதன் பின் இந்தப் பதிவை படிக்கவும்.

--அவர் celebrity என்பதால் criticize பண்ணலாம் என்பது தான் உங்கள் கருத்தா---

என்னுடைய கருத்து அல்ல; ஒருவர் இசையை வெளியிட்டால், இசையை தவிர்த்து, மற்றவற்றை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்பதே சிலரின் கருத்தாக இருக்கிறது.

People, People, People... This person is getting a bit crazy. Some one, please ask him to consult a good psychiatrist who can cure his great sense of generalized blasphemy, for God's sake. [This is for you, listen, dont wait. it is the time. Get well soon.. All the best]

When some one comments on your work, it is better to take it and use it to show off your tolerance level to the people. Deleting it
Hey Mr.BJ [Blog Jockey!!!]
will not make you any good than a cynical and contemptuos. Okey, Okey... I can understand. It sounds a bit nasty. But what to do. A.R.R will not be able to reply or delete all the bull#$%@ you blog in. Be cool man. Keep it 'ON' for some time though -

With DUE respect,
Dhravidan.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு